சிம்புவுக்கு ராதிகா சரத்குமாரின் வேண்டுகோள்;

0
259
Facebook இல் பகிர்ந்துகொல்லவும்
Twitter இல் ட்வீட் செய்யவும்

நடிகர் ராதிகா சரத்குமார் ,நடிகர் சிம்புவிடம் நடிகர் சங்கத்தை விட்டு விலகும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் சிம்பு சங்கத்தை விட்டு விலகுவதாகவும்,அவர் (பீப் பாடல்)சர்ச்சையில் சிக்கியபோது கூட நடிகர் சங்கம் உதவிக்கு வரவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.இதனையடுத்து நட்சத்திர கிரிக்கெட் மூலம் நடிகர்கள் கோமாளிகலாக்கப்பட்டனர் எனவும் சிம்பு கூறியிருந்தார் .

நடிகர் சங்கத்தலைவர் நாசரும் நாங்கள் நிச்சயமாக பிரச்சினையை தீர்த்து வைப்போம் என்றும் சிம்பு சங்கத்தை விட்டு விலக வேண்டாம் எனவும் கூறினார்.மேலும் நாசர் சிம்புவிடமிருந்து அதிகாரப்பூர்வமான அதாவது பிரச்சனை தொடர்பான எந்த அறிக்கையும் வரவில்லை என்று கூறினார் .

மேலும் ராதிகா சரத்குமார் சிம்புவிடம் ,இது அவர்கள் சொத்து அல்ல,நமது கூட்டமைப்பு எனவும்,அவர்கள் உதவி செய்யாவிட்டாலும் வெற்றி உனக்கே என்றும் கூறினார்.