வெற்றிவேல் -திரை விமர்சனம்

0
1440

ஒரு தயாரிப்பாளராக சசிகுமார் பார்முலாவை பின்பற்றுகிறாரோ இல்லையோ,ஒரு நடிகனாக தன்னுடைய கதாபாத்திரத்தில் அவர் எப்போதும் குறை வைத்ததில்லை.

கிராமத்து கதைக்களத்துடன் ,பாசம்,காதல்,குடும்பம்,என கிராமத்து மண்வாசனையையும் இணைத்திருக்கிறார்,இயக்குனர் வசந்தமணி.விவசாயத்துறை அதிகாரியாக வரும் மியா ஜார்ஜுக்கும்,உரக்கடை நடத்தி வரும் சசிகுமாருக்கும் காதல் மலர்கிறது.

ஊர் பஞ்சாயத்து தலைவரான பிரபுவின் மகளை சசிகுமார் தம்பி காதலிக்க,தம்பியின் காதலுக்கு உதவ,பெண்ணை கடத்த ஒரு திட்டத்துடன் நாடோடிகள் கும்பலை கதை களத்தில் இறக்குகிறார்கள்.அனால் கடத்தவேண்டிய பெண் மாறிப்போய்,சசிகுமார் அந்த பெண்ணை திருமணம் செய்ய நேர்கிறது.இதனையடுத்து மியா ஜார்ஜுக்கும் சசிகுமருக்கும் இடையேயான காதல் என்னானது என்பதுதான் கதை.

பிரபுவின் நடிப்பு படத்திற்கு சிறப்பு,தம்பி ராமையா காமெடியில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்.சசிகுமாருக்கு அவருக்கே உரித்தான வசனங்கள் இடம்பெற்று படத்திற்கு உயிரூட்டியுள்ளது.நாயகி மியா ஜார்ஜ் நடிப்பிலும்,அழகிலும் அசத்தியிருக்கிறார்.

வசனங்கள் படத்தின் கூடுதல் பலம்.குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய திரைப்படம்,வெற்றிவேல் ….,வெற்றிகரமான வேல்.

உங்கள் கருத்தை தெரிவிக்க