சீட் கிடைக்காததால் விஷம் குடித்த பா.ம.க.நிர்வாகி

0
136

ஈரோடு: சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் பாமக நிர்வாகி ஒருவர் விஷம் குடித்துவிட்டார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானியை சேர்ந்தவர் கா.சு. மகேந்திரன். பாமக மாநில துணை தலைவர். பவானி தொகுதியில் போட்டியிட விரும்பி விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் பவானி தொகுதி வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. ராமநாதன் அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து ராமநாதனை மாற்றி தன்னை வேட்பாளராக அறிவிக்குமாறு மகேந்திரன் கட்சி தலைமைக்கு கடிதம் அனுப்பினார். மேலும் தனது ஆதரவாளர்களை திரட்டி போராட்டங்களும் நடத்தினார். ஆனால் கட்சி தலைமை அவரது கோரிக்கையை ஏற்கவில்லை.

கட்சி தலைமையின் நடவடிக்கையால் அவர் மனமுடைந்தார். கடந்த 5 ஆண்டுகளாக தொகுதி பக்கமே வராதவர் வேட்பாளர். அவர் தைலாபுரம் தோட்டத்தில் உள்ளவர்களுக்கு நெருக்கமாக இருப்பதால் சீட் அளிப்பதா? என்று கூறி மகேந்திரன் இன்று காலை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

விஷம் குடித்த அவரை குடும்பத்தினர் உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் பவானி பாமக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை தெரிவிக்க