நட்சத்திர கிரிக்கெட் எதிர்த்து முற்றுகை

0
603

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் மைதானத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட நிதி திரட்டும் வகையில் தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை துவங்கி நடந்து கொண்டிருக்கிறது.

8 அணிகள், அணிக்கு 6 வீரர்கள் என விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். திரையுலக நட்சத்திரங்கள் அனைவரும் ஒன்று கூடி விளையாடும்போதிலும் அதை காண மக்கள் கூட்டத்தை ஸ்டேடியத்தில் காண முடியவில்லை.

நடிகர் சங்க கட்டிடம் கட்ட நடிகர்களிடம் பணமா இல்லை, நாங்கள் எதற்காக கொடுக்க வேண்டும் என மக்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்துள்ளனர். இந்நிலையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டியை கண்டித்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் 50 பேர் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சமூக வலைதளங்களிலும் பலர் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

பகிர்ந்து
முந்தைய செய்திமே 1 முதல் பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
அடுத்த செய்திரஜினிகாந்த் அளித்த பதில்: தமிழக சட்டசபை தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கேள்விக்கு
வலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.

உங்கள் கருத்தை தெரிவிக்க