தெறி-ஒரு மில்லியனுக்கும் மேல் வசூலில் சாதனை

0
536

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த திரைப்படம் தெறி.வெளியான ஆறே நாட்களில் 100 கோடியை வசூலித்தது.

நடிகர் விஜயின் ட்விட்டர் பக்கத்தில் …விஜயின் துப்பாக்கி மற்றும் கத்தி படம் வெளிநாடுகளில் 100 கோடி வசூலித்தது,தெறி இந்த வரிசையில் மூன்றாவது படம் எனவும்,இயக்குனர் அட்லி ,ஜி.வி.பிரகாஷ் மற்றும் விஜயின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு சுவரொட்டி பகிர்வு செய்யப்பட்டுள்ளது ,

அதில் தெறி திரைப்படம் வட அமெரிக்கா மற்றும் கனடாவிலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமாக வசூலில் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய் ரசிகர்களுக்கு மற்றுமோர் இன்பச்செய்தி;

விஜயா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பரதன் இயக்கத்தில் மே 2-ம் தேதி விஜயின் புதிய படம் தொடங்குகிறது.இதில் கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்திலும்,ஜகபத் பாபு,டேனியல் பாலாஜி,சதீஷ் போன்றோர் நடிக்க வுள்ளனர்.இன்னும் படத்திற்கு பெயர் வைக்கப்படவில்லை.