முதல்வரை எதிர்த்து வசந்தி தேவி

0
216

சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் கல்வியாளர் வசந்தி தேவியை பொது வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

வரும் சட்டபேரவை தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகள் சிம்லா முத்துசோழன் களம் இறக்கப்பட்டுள்ளார். பாமக சார்பிலும் பெண் வேட்பாளரே நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி-தமாகா கூட்டணியில் ஆர்.கே நகர் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கல்வியாளர் வே.வசந்தி தேவி நிறுத்தப்பட்டுள்ளார். கல்விக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ள வசந்திதேவியை, சென்னை ஆர்.கே நகரில் பொது வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உங்கள் கருத்தை தெரிவிக்க