காமெடியன்களுக்கு அகராதி கவுண்டமணிதான் ……..நடிகர் சந்தானம்

0
374

ஜெயராம் புரொடக்சன்ஸ் வழங்கும் படம் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. சுசீந்திரன் உதவியாளர் கணபதி பாலமுருகன் இயக்கும் இந்த படத்தை சண்முகம் தயாரித்துள்ளார். நகைச்சுவை நடிகர் கவுண்டமணி நாயகனாக நடித்துள்ளார்.

இன்னொரு நாயகனாக சௌந்தர்ராஜாவும் அவருக்கு ஜோடியாக மெட்ராஸ் ரித்விகாவும் நடித்துள்ளனர். இப்படத்தில் கேரவன் கிருஷ்ணன் எனும் கதாபாத்திரத்தில் நாத்திகவாதியாக வருகிறார் கவுண்டர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

சென்னையில் நேற்று மாலை இப்படத்தின இசை வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் கவுண்டமணி, சௌந்தர்ராஜா, ரித்விகா, நகைச்சுவை நடிகர் சந்தானம், இயக்குநர்கள் சீனு ராமசாமி, சுசீந்திரன், பேரரசு, பொன்ராம், பிரபாகர், நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆரி மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். விழாவில் சந்தான்ம் பேசும்போது, “காமெடியன்களுக்கு டிக்சனரி கவுண்டணி சார்தான்.

எனக்கு எதாவது ஒரு சீன் சேர்க்க வேண்டும் என்றால் யூடியூபில் கவுண்டமணி சாரின் காமெடியைப் பார்த்து தேவையானதை எடுத்துக் கொள்வேன். இதைச் சொல்வதில் எனக்கு தயக்கம் இல்லை. இதேபோல்தான் எல்லா காமெடியன்களும் அவரை பின்பற்றுகிறார்கள். அவருக்கு இணை யாரும் கிடையாது. இப்போது விழாவில் பேசும் அனைவரைப் பற்றியும் நகைச்சுவையாக கமென்ட் கொடுத்துக்கொண்டே இருக்கிறார். இதைக் கேட்டு எங்களால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

அவரைப் பார்க்க வேண்டும் என்றால் திரையில் மட்டும்தான் அவரது நடிப்பைப் பார்த்து மகிழ்ச்சியடைய முடியும். சூழ்நிலைக்கு ஏற்ப நகைச்சுவையாக பேசுவதில் அவருக்கு இணை அவர்தான்.

இப்படத்தின் ஹீரோவாக அவர் நடித்திருக்கிறார். டிரைலர் மிகவும் நன்றாக இருந்தது. படமும் நன்றாக வந்திருக்கிறது. நிச்சயம் வெற்றி பெறும்,” என்றார்.

உங்கள் கருத்தை தெரிவிக்க