அரசு ஊழியர்களுக்கு லீவு கிடையாது ;லக்கானி

0
50
Facebook இல் பகிர
Twitter இல் ட்வீட்டிட

தமிழக தலைமைத்தேர்தல் அலுவலர் ராஜேஷ் லக்கானி அளித்த பேட்டி:

நாளை வேட்புமனு தாக்கலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் 4 பேர் பலியானது பற்றி தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் எக்காரணம் கொண்டும் விடுப்பு எடுக்கக்கூடாது. தேர்தலுக்கு முந்தைய 3 கட்ட பயிற்சியில் அரசு ஊழியர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும். கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் சான்று அளித்தால் அவர்களுக்கு தேர்தல் பணியில் விலக்கு அளிக்கப்படும் எனக்கூறினார்.