மும்பை முதல் வெற்றி

0
58

9-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற 5 வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணிகளும் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

இதன் படி முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்களை சேர்த்தது. கொல்கத்தா அணியில் கேப்டன் கவுதம் கம்பீர் அதிகபட்சமாக 52 பந்துகளில் 64 ரன்களை சேர்த்தார். இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  மும்பை இந்தியன்ஸ் அணி பேட் செய்தது.

மும்பை அணிக்கு ரோகித் சர்மாவும், பார்த்தீவ் பட்டேலும் சிறப்பான தொடக்கம் தந்தனர். 4.5 ஓவர்களில் அந்த அணி 50 ரன்களை எட்டியது. 5.5 ஓவர்களில் 53 ரன்கள் எடுத்திருந்த போது பார்த்தீ பட்டேல் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய பாண்டே 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய மெக்சிலெனாகன் 3 சிக்ஸர்களை விளாசி அசத்தினார். இருப்பினும் அவர் 8 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

இதனையடுத்து ரோகித் சர்மாவுடன், பட்லர் இணைந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 66 ரன்கள் குவித்தது. 22 பந்துகளில் 41 ரன்கள் குவித்து பட்லர் 18.3 வது ஓவரில் ஆட்டமிழந்தார். அப்போது மும்பை அணியின் வெற்றிக்கு 9 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்டது.

ஆனால் அந்த ஓவரில் அடுத்தடுத்து 3 பவுண்டரிகளை விளாசி ரோகித் சர்மா அசத்தினார். இதனால் மும்பை அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது. ரோகித் சர்மா 54 பந்துகளில் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர் அணியை தோற்கடித்தது.

84 ரன்கள் குவித்த ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக தனது முதல் போட்டியில் மும்பை அணி புனே அணியிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்து
முந்தைய செய்திவிடுதலை சிறுத்தைகள் தொகுதி பட்டியல்
அடுத்த செய்திதோனியை ஜெயிப்பாரா ரெய்னா?
வலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.