கல்வி தகுதி உள்ள அனைவரையும் வங்கி தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் ;முத்தரசன்

0
13
Facebook இல் பகிர
Twitter இல் ட்வீட்டிட

எஸ்பிஐ வங்கி தேர்வுக்கு கல்வித் தகுதியுள்ள அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”பாரத ஸ்டேட் வங்கியில் 17 ஆயிரத்து 140 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் முதன்மை தேர்வு வரும் மே 11 , 17 தேதிகளில் நடக்கலாம் எனக் கூறப்பட்டது.r

இந்த சூழலில், கல்விக்கடன் பெற்று திருப்பி செலுத்தாதவர்கள், இந்த தேர்வில் கலந்து கொள்ள முடியாது என்றும், அவர்களின் விண்ணப்பம் ஏற்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் மட்டும் 90 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

கல்விக்கடன் பெற்று படித்தவர்கள் உரிய வேலைவாய்ப்புக்கும், வருமானத்துக்கும், வழியில்லாமல் வேலை தேடி வரும் நிலையில், கடன் தொகை தவணையை நிபந்தனை ஆக்கியிருப்பதை ரிசர்வ் வங்கி தலையிட்டு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

கல்வி தகுதியுள்ள அனைவரையும் பாரத ஸ்டேட் வங்கியின் தேர்வினை எழுத வழி வகை செய்ய வேண்டும் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.