ஈரோடு: சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் பாமக நிர்வாகி ஒருவர் விஷம் குடித்துவிட்டார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானியை சேர்ந்தவர் கா.சு. மகேந்திரன். பாமக மாநில துணை தலைவர். பவானி தொகுதியில் போட்டியிட விரும்பி விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் பவானி தொகுதி வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. ராமநாதன் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து ராமநாதனை மாற்றி தன்னை வேட்பாளராக அறிவிக்குமாறு மகேந்திரன் கட்சி தலைமைக்கு கடிதம் அனுப்பினார். மேலும் தனது ஆதரவாளர்களை திரட்டி போராட்டங்களும் நடத்தினார். ஆனால் கட்சி தலைமை அவரது கோரிக்கையை ஏற்கவில்லை. கட்சி தலைமையின் நடவடிக்கையால் அவர் மனமுடைந்தார். கடந்த 5 ஆண்டுகளாக தொகுதி பக்கமே வராதவர் வேட்பாளர். அவர் தைலாபுரம் தோட்டத்தில் உள்ளவர்களுக்கு நெருக்கமாக இருப்பதால் சீட் அளிப்பதா? என்று கூறி மகேந்திரன் இன்று காலை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். விஷம் குடித்த அவரை குடும்பத்தினர் உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு ...
Read more
சென்னை: சென்னையில் இன்று திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு சந்தித்து பேசினார். திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நடுவே சட்டசபை தேர்தலில் கூட்டணி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் குஷ்பு போட்டியிட சீட் தரப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு சீட் தரப்படவில்லை. திமுக தரப்பில் இருந்து சிலர் கொடுத்த நெருக்கடிதான், அவருக்கு சீட் தரவிடாமல் தடுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் குஷ்பு இன்று சந்தித்து பேசியுள்ளார்.
சென்னை ஐஐடி மாணவிகள் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. படிக்கும் போதும், பருவ வயதிலும் பெற்றோர் பேச்சை துளியும் கேட்காத ஆண்கள், திருமணத்திற்கு பெண் தேட தொடங்கியதும் அம்மாவின் முந்தானைக்குப் பின் ஒளிந்து கொள்ளும் வழக்கத்தையும், தினமும் செய்தித்தாள்களில் வந்து கொண்டிருக்கும் மணமகள் தேவை விளம்பரங்களையும், கேலி செய்து சென்னை ஐஐடி மாணவிகள் வெளியிட்டுள்ளதுதான் இந்த வீடியோ. Call Me Maybe என்ற பாப் பாடலின் மெட்டில் இதை சென்னை ஐஐடி கல்லூரி மாணவிகள் உருவாக்கியுள்ளனர். அமிதா கோஷின் இந்த பாடல்வரிகளில் அனுக்ரிபா இளங்கோவின் குரல்வளத்தில் க்ருபா வர்கீசின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த ஆல்பத்தைக் காண…
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அருள்மிகு மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதை சுமார் 10 ஆயிரம் பேர் நேரில் கண்டு இறைவன்-இறைவியை தரிசித்தனர்.உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சியம்மன் பட்டாபிஷகம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. திங்கள்கிழமை காலையில் மரவர்ணச் சப்பரத்தில் சுவாமியும், அம்மனும் சிவகங்கை ராஜா மண்டகப்படியில் எழுந்தருளினர். பின்னர் மாசி வீதிகளில் உலா வந்து அருள்பாலித்தனர். இன்று அதிகாலை வெள்ளிச் சிம்மாசனத்தில் சித்திரை வீதிகளில் எழுந்தருளி, முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி, பின் திருக்கல்யாண மண்டபத்துக்கு புறப்பாடாகினர்.மேல, வடக்கு ஆடி வீதி சந்திப்பில் அமைந்துள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இன்று காலை 8.30 மணி முதல் 8.54 மணிக்குள் ரிஷப லக்னத்தில் மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது திருப்பரங்குன்றம் அருள்மிகு பவளக்கனிவாய்ப் பெருமாள், அருள்மிகு சுப்பிரமணியசாமி, தெய்வானை ஆகியோர் எழுந்தருளினர்.முன்னதாக திங்கள்கிழமை இரவு இந்திர ...
Read more
நடிகர் சங்க கட்டடம் கட்ட நட்சத்திர கிரிக்கெட் நடத்தப் போகிறோம் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே, அந்த நிகழ்ச்சிக்கு எதிராக சிலர் வரிந்து கட்டிக் கொண்டு வேலைப் பார்க்க ஆரம்பித்துவிட்டன. சமூக வலைத் தளங்களில் நட்சத்திரக் கிரிக்கெட்டைப் புறக்கணிப்போம் என வெகுஜனங்களே வேண்டுகோள் வைக்கும் நிலை. போதாக்குறைக்கு அஜீத்தின் புறக்கணிப்பு செய்தி மீடியாவில் அதிக முக்கியத்துவம் பெற்றது இதன் விளைவை மைதானத்தில் பார்க்க முடிந்தது. காலையில் மேட்ச் ஆரம்பித்தபோது, கேலரிப் பக்கம் தலைகளே இல்லை. பெரும்பாலும் டோனர் பாஸ் எனப்படும் ‘ஓசி’ டிக்கெட்டில் பார்க்க வந்தவர்கள்தான் அதிகம். இவர்களைத் தவிர, மீதி நட்சத்திரங்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள். நாட்டுப் புறக் கலைஞர்களும் கணிசமாக வரவழைக்கப்பட்டிருந்தனர். பிற்பகல் வரைதான் இந்த நிலை. மாலை நெருங்க நெருங்க, ஓரளவு பார்வையாளர்கள் திரண்டுவிட்டனர். இறுதிப் போட்டியில் சூர்யாவின் அணியும் ஜீவாவின் அணியும் விளையாடியபோது, கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் அரங்கிலிருந்ததாக நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது கூட்டம் குறைவாக ...
Read more
தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உளுந்தூர்ப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகத்தான வெற்றி பெறுவார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ் பென்னாகரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் திமுகவின் தலைவர் கருணாநிதி ஆகியோர் போட்டியிடும் தொகுதிகள் முன்னரே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விஜயகாந்தும் அன்புமணியும் எங்கு போட்டியிடுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு வலுத்துவந்தது. திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் அவரை எதிர்த்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாசிலாமணி போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. மக்கள் நலக் கூட்டணியில் அந்தக் கட்சிக்கு 25 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனினும், அக்கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன், மூத்த தலைவர்களான ...
Read more
சிதம்பரம்: தமிழகத்தில் உள்ள வாக்காளர்களில் காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் 25 சதவீதம்பேரால்தான் இந்த மாநிலத்தை விட்டு கொள்ளையர்களை விரட்ட முடியாத நிலை உள்ளது. *காசு வாங்காத, மீதம் உள்ள 75 சதவீதம் பேரும் ஓட்டுப் போட முன்வந்தாலே போதும் தமிழகத்தை விட்டு திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கொள்ளையர்களையும் விரட்டி விடலாம் என்று கூறியுள்ளார் நாம் தமிழர் தலைவர் சீமான். *புவனகிரி, காட்டுமன்னார்குடி, சிதம்பரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிதம்பரத்தில் வாக்கு சேகரித்தார். *அப்போது அவர் பேசுகையில், தேர்தலில் பணத்தை பெற்று கொண்டு வாக்கு அளிப்பவர்கள் 25 சதவிகிதம் பேர்தான். மீதமுள்ள 75 சவீதம் பேரும் வாக்களிக்காமல் உள்ளனர். அவர்களும் வாக்களித்தால், வாக்களிக்க முன்வந்தால் மட்டுமே அதிமுக, திமுக ஆகிய இரு கொள்ளையடிக்கும் கட்சிகளையும் அகற்ற முடியும். *100 சதவீத வாக்குப் பதிவை மக்கள் ...
Read more
காஞ்சிபுரம்: திமுக தலைவர் கருணாநிதி தம் மக்கள், தன் குடும்ப நலன் என்றுதான் நினைப்பார். அவருக்கு தமிழக மக்களின் மீது அக்கறையில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். 2006ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த பல வாக்குறுதிகளையே 2016ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். காஞ்சிபுரம் அருகே வாரணாசி ஊராட்சியில் இன்று அதிமுக பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு முதல்வர் ஜெயலலிதா பேசினார். காஞ்சிபுரம், திருவள்ளுர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு உட்பட்ட 18 அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்த ஜெயலலிதா, திமுகவையும், 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையையும், 2016ம் ஆண்டு திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையும் ஒப்பிட்டு பேசி பதிலடி கொடுத்தார் ஜெயலலிதா. இதற்கு முந்தைய கூட்டத்தில் பேசாத பல விசயங்களை பேசிய ஜெயலலிதா தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். ஜெயலலிதாவின் பிரச்சார உரை…. ...
Read more
ஒசூர்: வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் ஓரம் கட்டப்படுவார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். சட்டசபைத் தேர்தலில் தே.மு.தி.க., ம.தி.மு.க., தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் மக்கள் நலக் கூட்டணி பெயரில் போட்டியிடுகின்றனர். கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் ஒசூர், வேப்பனப்பள்ளி ஆகிய தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடுகிறது. கிருஷ்ணகிரி, பர்கூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும், தளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், ஊத்தங்கரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் போட்டியிடுகின்றன. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் தேமுதிக மக்கள் நலக் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் வாக்கு சேகரித்தார். அப்போது அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் பேசுகையில். தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சொல்லாத ...
Read more
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் மே 1-ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும் என்றும் ஜூன் 1ம் தேதியன்று அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகப் பள்ளிகளில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு ஆண்டு தேர்வுகள் முடிவடைந்துள்ளது. 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, ஏப்ரல் 21ம் தேதி தேர்வுகள் முடிவடைகின்றன. இந்த நிலையில், மே 1 முதல் மாணவர்களுக்குக் கோடை விடுமுறை அறிவித்துள்ளது. மீண்டும், ஜூன் 1ம் தேதியன்று அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. வெயிலின் உக்கிரம் அதிகரித்துள்ளதால் கோடை விடுமுறையை தெலுங்கானா மாநிலம் போல தமிழகத்திலும் சற்று முன்னதாகவே விடுமுறை விடப்பட வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் இந்த ஆண்டு வரலாறு காணாத வெயில் அடிக்கும் என்று வானிலை இலாகாவினர் எச்சரித்துள்ளனர். இந்த ஆண்டு தெலுங்கானா, கர்நாடகா, மராட்டியம், ...
Read more