Category: தேர்தல் 2016
திமுகவுக்கு ஓட்டு போட்டால் வேட்டு உங்கள் நலனுக்கு – ஜெயலலிதா பேச்சு
திமுகவினருக்கு அளிக்கும் ஓட்டு உங்கள் நலனுக்கும் வைக்கு வேட்டு என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, அதிமுக ஆட்சி காலத்தில் விலைவாசி உயர்ந்து விட்டதாக திமுகவினர் பொய் பிரச்சாரம் செய்வதாக குற்றம் சாட்டினார். திமுகவினர் வாக்கு கேட்டு வந்தால் அவர்களை விரட்டியடியுங்கள் என்று கூறினார். பெருந்துறையில் இன்று அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு ஜெயலலிதா பேசியதாவது: ->தந்தை பெரியார் பிறந்த மண்ணில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டதில் பெருமை கொள்கிறேன் ->திமுக ஆட்சியில் ஒவ்வொரு தொழிலும் நசிந்து போனது ->சலவை, சாயத்தொழிற்சாலைகள் மூடப்படுவதை தடுக்க அதிமுக ஆட்சிகாலத்தில் நடவடிக்கை ->சாய கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது ->பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நிதி அளிக்கப்பட்டது ->விலைவாசி ஏற்றத்திற்கு அதிமுக ஆட்சியில் அதிகரித்து விட்டதாக திமுக பொய் பிரச்சாரம் ->உர விலையை ஏற்றியது திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்தான் ->அதிமுக ... Read moreடிடிஎச், மொபைல் போன் – அதிமுக தேர்தல் சலுகைகள் (அறிக்கை) வெளியீடு
எக்கச்சக்க இலவசங்களுடன் வெளிவந்து கபாலி டீசறை விட ட்ரெண்டு ஆகி இருக்கிறது, அதிமுக தேர்தல் அறிக்கை. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் முதல் பிரதியை மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக கரூர் தொகுதி மக்களவை உறுப்பினருமான தம்பிதுரை பெற்றுக்கொண்டார். தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் பேசிய ஜெயலலிதா, பெரியார் பிறந்த பூமியில் அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டதற்காக பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்றார். அதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள சில அறிவிப்புகள்: * அத்திக்கடவு அவினாசி திட்டம் செயல்படுத்தப்படும் * தமிழ்நாட்டில் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு தடை. * சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரபதிவு எளிமையாக்கப்படும். * மீனவர் நிவாரண தொகை ரூ.5000-ஆக உயர்த்தப்படும். * மீனவர்களுக்கு தனி வீடு கட்டும் திட்டம். * விவசாய கடன் தள்ளுபடி. * காவேரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். * மீன்வர்கள் எஸ்.டி. பட்டியலில் ... Read moreமாற்றான் தோட்டத்து மல்லிகை – அன்புமணி மீது வைகோ கரிசனம்
நாளிதழ் ஒன்றும், செய்தித் தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பு நிலவரம் வெளியாகி பல தலைவர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. எல்லா தேர்தல் கருத்துக் கணிப்புகளுமே வெற்றி தோல்வியை தீர்மானிக்காது என்றாலும், உண்மையாகிவிடுமோ என்ற எண்ணமே தலைவர்களின் கலக்கத்துக்குக் காரணம். அதாவது, மாம்பழக் கட்சியின் முதல்வர் வேட்பாளர் போட்டியிடும் பென்னாகரம் தொகுதியில், அவருக்கு 3வது இடம் கிடைக்கலாம் என்று கருத்துக் கணிப்புக் கூறுகிறது. பம்பரம் கட்சித் தலைவர், முரசுக் கட்சியின் தலைவர் போட்டியிடும் உளுந்தூர்பேட்டை தொகுதியில், அவரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது பேசுகையில், பென்னாகரத்தில் போட்டியிடும் மாம்பழக் கட்சியின் முதல்வர் வேட்பாளருக்கு 3ம் இடம் கிடைக்கும் என்பதெல்லாம் நம்பும்படியாகவே இல்லை. எங்கள் எதிரியாக இருந்தாலும், இது தவறானது என்றே சொல்வேன் என்று காட்டமாகக் கூறியுள்ளார்.கருணாநிதிக்கு விஜயகாந்த் பதிலடி
தமிழக தேர்தல் களத்தில் 3-வது அணி இருப்பது கண்ணுக்குத் தெரியவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறுவது வயது முதிர்வால் அவருக்கு ஏற்பட்டுள்ள கோளாறு எ ன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து புதுக்கோட்டையில் நேற்று இரவு நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் விஜயகாந்த் பேசியது: “அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு ‘அம்மா’ என்று பெயரிட்டுள்ள ஜெயலலிதா, ஏன் எம்ஜிஆர் என்று பெயரிடவில்லை? எம்ஜிஆர் இல்லாமலா அதிமுக வந்தது? எனது ஆட்சியில் தமிழகம் தலைநிமிர்ந்துள்ளது என்று கூறும் ஜெயலலிதா, முதலில் அவரது அமைச்சர்களை தலைநிமிரச் செய்யட்டும். அதிமுக, திமுக ஆட்சிகளால் தமிழகத்தில் லஞ்சம், ஊழல் பெருகியுள்ளதே தவிர வறுமை ஒழியவில்லை. தமிழகத்தில் 3-வது அணி இருப்பது எனது கண்ணுக்குத் தெரியவில்லை என்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. இது, அவரது வயது முதிர்வால் ஏற்பட்டுள்ள கோளாறு என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். தேமுதிக, தமாகா, ... Read moreமக்கள் சேவை போட்டிக்கு 3785 பேர் தெரிவு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 785 பேர் போட்டியிடுகின்றனர். தமிழக சட்டப்பேரவைக்கு வரும் 16-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. அதன்படி, 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 785 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 3 ஆயிரத்து 462 பேர் ஆண்கள். 321 பேர் பெண்கள். 2 பேர் திருநங்கைகள். 3 ஆயிரத்து 27 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 339 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 45 பேர் களத்தில் உள்ளனர். மிகக் குறைந்த அளவாக ஆற்காடு, மயிலாடுதுறை, கூடலூர் ஆகிய தொகுதிகளில் தலா 8 பேர் போட்டியிடுகின்றனர். திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் 15, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூரில் 24, தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் உளுந்தூர்பேட்டையில் 25, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் ... Read moreபச்ச மண்ணுய்யா அது… பாமக வேட்பாளர் வேட்புமனு நிராகரிப்பு
பாமக இந்த தேர்தலில் சின்னய்யா அன்புமணி அவர்களை முதல்வர் வேட்பாளராக்கி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி இடுவது அனைவரும் அறிந்ததே. வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு சனிக்கிழமை அன்று அதன் மீதான மீளாய்வும் முடிந்து உள்ளது. 9ஆம் வகுப்பு வரை படித்த வசந்த் என்னும் இளைஞர் சட்டமன்ற உறுப்பினர் ஆகி மக்கள் சேவை புரிய விழைந்துள்ளார். பாமகவும் அவரை திருச்சி துறையூர் தொகுதியை ஒதுக்கியது. மீளாய்வில் இவர் 23 வயது நிரம்பியவர் என தெரியவர குறைந்தபட்ச வயது பூர்த்தி ஆகாததால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதில் என்ன கொடுமை என்றால் இவருக்கு டம்மி ஆக பாமக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தவர் வயது 22, ஆகா அவர் மனுவும் தள்ளுபடி ஆகி விட்டது. 25 வயது நிரம்பினால் தான் சட்டமன்ற தேர்தலில் நிற்க முடியும் என்பது வேட்பாளருக்கும் தெரியவில்லை, கட்சியும் கவனிக்கவில்லை. விளைவு பாமக இப்போது 233 தொகுதிகளில் போட்டியிட போகிறதா அல்லது அத்தொகுதியில் உள்ள ... Read moreவெயில் அதிகமா இருக்கு கொஞ்சம் பார்த்து பண்ணுங்க – தேர்தல் ஆணையம்
அரசியல் கட்சிகள் கடும் வெப்பம் நிலவும்போது பொதுக்கூட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால் குடிநீர், மருத்துவ வசதி, கூரை அமைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்த லுக்கான பிரச்சாரத்தில் ஆளும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் பெரும் பாலான மாவட்டங்களில் அதிக வெப்பம் நிலவி வந்தாலும், அதை பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதாவை பொறுத்தவரை, கடந்த 9-ம் தேதி சென்னையில் பிரச்சார பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து 11-ம் தேதி விருதாச்சலத்திலும், 20-ம் தேதி சேலத்திலும் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார். இந்த இரு கூட்டங்களிலும் பங்கேற்ற 4 பேர் உயிரிழந்தனர். அதிமுக சார்பில், உடல்நலக் குறைவால் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால், கடும் வெயில் மற்றும் குடிநீர் கிடைக்காததால் இறந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இது தொடர்பாக, சமூக அமைப்புகள் மற்றும் திமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு ... Read moreதமிழக வேட்பாளர்களில் பணக்காரர் யார்?
நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில், காங்கிரஸ் கட்சி சார்பில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் எச். வசந்தகுமார் ரூ.332.27 கோடியுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். நாங்குநேரி பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எச். வசந்தகுமார் நேற்று வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஹெச். வசந்தகுமார், தேர்தல் நடத்தும் அலுவலர் சேகரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். வசந்தகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் ரூ.332.27 கோடி மதிப்பில் அசையும், அசையா சொத்துகள் மற்றும் ரொக்கம், வங்கி இருப்பு, தங்க நகைகள் உள்ளதாகவும், வங்கிகளில் பெற்ற கடன் உள்பட ரூ.122.53 கோடி கடன் இருப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். இவரை அடுத்து தமிழகத்தில் அதிக சொத்துள்ள வேட்பாளராக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அசையும், அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.113 கோடியே 73 லட்சத்துடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். திரு. வசந்த ... Read moreசின்ன டிவி கொடுத்து ஏமாற்றியது யார்? – ஜெயலலிதா பிரச்சாரம்
கடந்த 2006 ஆம் ஆண் டு ஆட்சிக்கு வந்த கருணாநிதி சிறிய டிவியை கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டார். அதே நேரத்தில் தனது குடும்பத்தினர் வருமானம் பெற வேண்டும் என்ற நோக்கில் இலவசமாக கேபிள் இணைப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை மறந்துவிட்டார் என ஜெயலலிதா குற்றம்சாட்டினார். விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் 13 வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தனியார் வேலைவாய்ப்பு மூலம் 1.28 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இதுதவிர அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் 3,03,111 பேர் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர். மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தமிழகத்தில் 1.08 கோடி புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளது. பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மினரல் வாட்டர் வழங்கும் திட்டம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. அது தமிழகம் ... Read moreநாம் தமிழர் தேர்தல் அறிக்கை
நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கை யில் இயற்கைவழி விவசாயம் மட்டுமே தமிழகத்தில் என்று அறிவிப்பு ஏறுதழுவல் ஏழு நாள் அரசு விடுமுறையுடன் விவசாயம் அரசு வேலையாக அங்கீகரிக்கப்படும் * மருத்துவம் அனைவருக்கும் இலவசம், ஆட்சியாளர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சைபெற வேண்டும் * அனைவருக்கும் பொதுவான கட்டணமில்லா தமிழ் வழிக்கல்வி * அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் கட்டாயம் அரசு பள்ளிகளிலேயே படிக்கவைக்க வேண்டும் * ஆடுமாடு மேய்த்தல் , விவசாயம்அரசு பணி… ஊதியம் குறைந்த பட்சம் 30000 * 4 மணி நேர செய்வழிக்கல்வி .. 4 மணி நேரம் தமிழரின் போர் வீர விளையாட்டு பயிற்சி * மெக்காலே கல்வி முறை ஒழிப்பு * இயற்க்கை விவசாயத்திற்க்கு மட்டுமே அனுமதி * ஒவ்வொரு குடும்பங்களிலும் நாட்டு மாடு வளர்க்க ஆணை * விவசாயம் சார்ந்த மரபு வழி தொழில்களுக்கு மட்டுமே அனுமதி * பெருவணிக நிறுவனங்களுக்கு ... Read more
Next »