Category: மருத்துவம்

பெண்களுக்கு முதுகு வலி வரக்காரணம்

பெண்களில் 30 வயதைக் கடந்த பலரும் முதுகு, இடுப்பு மற்றும் கழுத்து வலியால் அடிக்கடி சிரமப்படுவார்கள். வீட்டு வேலைகளை முடித்ததும் சில பெண்களுக்கு விரல்கள் மரத்துவிடும். கழுத்தைத் திருப்பவே முடியாத அளவுக்கு வலி இருக்கும். அந்த வலி மற்ற பாகங்களுக்கும் பரவும். இந்த வலிக்கான முக்கியமான காரணம்… சமையல் அறைகளில் நாம் செய்யும் சின்னச் சின்னத் தவறுகள்தான். இதுபோன்ற தவறுகளைத் தவிர்க்கவும், ” ‘கிச்சன் எர்கனாமிக்ஸ்’ எனப்படும் சமையல் அறைப் பணிச் சூழல் சரியான முறையில் இருந்தாலே போதும் பிரச்னைகள் ஓடோடிவிடும். ஏற்கெனவே தவறாக அமைக்கப்பட்டுவிட்டாலும் எளிதாக அதைச் சரிசெய்துகொள்ளலாம்” எனச் சொல்லும் கவிதா விரிவாக விளக்கினார். சமைக்கும் முறை சமையல் மேடை அருகே நின்று நாம் சமைக்கும்போது, சமையல் மேடையின் உயரம் நமது உயரத்துக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். மேடை உயரமாக இருந்தால் கைகளை ஊன்றிக்கொண்டோ அல்லது சமையல் பாத்திரத்தை எக்கிப்பார்த்தோ சமைப்பதுபோல இருக்கக் கூடாது. இப்படிச் சமைத்தால், அடுப்பில் இருக்கும் ... Read more

உங்களுக்கு அசிடிட்டி உள்ளதா? – தெரிந்து கொள்ள அறிகுறிகள்

உங்களுக்கு அசிடிட்டி உள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்! ஒருவருக்கு அசிடிட்டி வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அசிடிட்டி பிரச்சனைக்கு, கண்மூடித்தனமாக மருந்து மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக, அதன் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டால், அதனை எளிமையான முறையில் சரிசெய்ய முடியும். மும்பையைச் சேர்ந்த பொது மருத்துவரான டாக்டர். ஆர்த்தி உலால் அசிடிட்டி பிரச்சனைக்கான அறிகுறிகளைக் பட்டியலிட்டுள்ளார். அந்த அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொண்டு, உங்கள் அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபடுங்கள். நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்து, உங்களுக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டால், அதனை சாதாரணமாக விட்டுவிடுவோம். ஆனால் உண்மையில் அது அசிடிட்டி பிரச்சனைக்கான அறிகுறிகளுள் ஒன்று. அசிடிட்டி பிரச்சனை இருப்பின், அடிக்கடி கடுமைமான நெஞ்சு வலியை சந்திக்க வேண்டியிருக்கும். அதிலும் வலது பக்க மார்பக வலியுடன், கடுமையான அடிவயிற்று வலியை சந்தித்தால், அது அசிடிட்டிக்கான அறிகுறியாகும். இரைப்பையில் அமிலமானது ஒவ்வொரு 2-3 மணிநேரத்திற்கும் சுரக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ... Read more