Category: தமிழகம்

இலங்கை சிறையில் இருந்து மீனவர்கள் விடுவிப்பு

இலங்கை சிறையில் வாடிய 44 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராமசாதபுரம், நாகை மாவட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கச்த்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது மேற்கண்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கடந்த 1 மாதத்திற்கு மேலாக தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் வாடினர். இந்நிலையில் தற்போது அவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பது அவர்களின் உறவினர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளி மாநில வாகனங்கள் மீதான கூடுதல் வரி றது : சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு

வெளி மாநில ஒப்பந்த வாகனங்கள் தமிழகத்திற்குள் ஒவ்வொரு முறை  நுழையும் போதும் கூடுதல் வரி செலுத்த தமிழக அரசு கொண்டு வந்த சட்டதிருத்தம் செல்லாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மோட்டார் வாகன வரிவிதிப்புச் சட்டத்தில் தமிழக அரசு கடந்த 2011-12-ம் ஆண்டு புதிதாக ஒரு சட்டதிருத்தம் கொண்டு வந்தது. அத்திருத்தத்தின் படி, வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் வரும் ஆம்னி பேருந்து உள்ளிட்ட ஒப்பந்த வாகனங்கள் ஒவ்வொரு முறையும் கூடுதல்வரி கட்ட வேண்டும். இதற்கு முன்பாக வாரம், மாதம், மூன்று மாதம் என்ற அடிப்படையிலேயே வெளி மாநில ஆம்னி பேருந்துகள் மற்றும் ஒப்பந்த ஊர்திகளுக்கு வரி வசூலிக்கப்பட்டது. அரசின் இந்த புதிய சட்டத் திருத்தத்தால் வெளி மாநில ஆம்னி பேருந்து கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டது. இதனால் அதிகப்படியான எண்ணிக்கையில் ஆம்னி பேருந்துகளை இயக்க முடியவில்லை எனவும் அரசின் புதிய சட்டதிருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி புதுச்சேரி மாநில ஒப்பந்த ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் ... Read more

20 ஏக்கர் நிலம் அநியாயமா எரிஞ்சி போச்சே..!

திங்கள் இரவு ஆரம்பித்து சேதத்தை விளைவித்த ஒரு காட்டு தீ கொடைக்கானல் பெருமாள் மலையில் ரணகளம் செய்து விட்டது. மாவட்ட வன அலுவலர் ஆர் முருகன் தலைமையில் வனத்துறையினர், கிட்டத்தட்ட 50 பேர், தீயை போராடி அணைத்து உள்ளனர். ஒரு தேக்கு காட்டின் சரிவுகளில் தீ மேல்நோக்கி பரவும்போது,  அதை கட்டுப்படுத்தும் மிக கடினமாது, என்கிறார்கள். தீக்கான காரணங்கள் தெரியவில்லை.

மழை வெள்ளத்தின் போது தமிழக அரசு மெதுவாக செயல்பட்டதா?

மழை வெள்ளத்தின் போது தமிழக அரசு மெதுவாக செயல்பட்டதால் தான், சென்னையில் பெரும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய ஆய்வு குழு அறிக்கை தாக்கள் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியது. ஆனால் இது மறுத்திருக்கும் தமிழக தலைமைச்செயலாளர் கு.ஞானதேசிகன், அந்த அறிக்கையில் தமிழகம் மெதுவாக செயல்பட்டதாக குறிப்பிடவில்லை, என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2-ந் தேதி ‘எக்கனாமிக் டைம்ஸ்‘ நாளேட்டில், ‘‘வெள்ள நிவாரணப் பணியில் தமிழ்நாடு மெதுவாக செயல்பட்டது – மத்திய அறிக்கை கூறுகிறது’’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகி இருந்தது. அதைத் தொடர்ந்து, அந்த தகவலின் உண்மைத்தன்மையை சோதித்து அறியாமல், அந்த செய்தியை பிற மீடியாக்களும் வெளியிட்டுள்ளன. அந்த பத்திரிகையின் கட்டுரையில், “மத்திய புவி அறிவியல் துறை அமைச்சகம் மேற்கொண்ட ஆய்வில், வெள்ள பாதிப்புக்கு அதிகமாக பெய்த மழை மட்டுமே காரணம் இல்லை, மோசமான கழிவுநீர் அகற்றல் முறையும், நீர்த் தேக்கங்களில் இருந்து கூடுதலாக நீரை ... Read more

இனிப்பு கசக்கும் வேளை….

கொள்கை மாற்றங்கள் மத்திய மாநில அளவில் கொள்கை ரீதியாக சில மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என மன்மோகன் அறிவித்திருக்கிறார். கூடங்குளம் அணு உலை வேலைகளை தொடர ஜெயலலிதா முடிவு. இரண்டிற்கும் பெரிதாக தொடர்பில்லை என்று கருதுபவர்கள் யாரேனும் இருந்தால் இதற்கு மேலும் இந்த பக்கத்தில் தொடர வேண்டாம். மழுப்பலான ஆதரவு இத்தனை நாளாக இந்தியா எப்போதுமே இலங்கை விஷயத்தில் மழுப்பலாகவே இருந்தது. வரும் ஆனால் வராது என்பது போல, தமிழர்கள் நலன் காக்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க வேண்டும் என்றும் சொல்லும். எப்படி என்றால் ஒரே குடும்பத்தில் உள்ள கணவன், தன் மனைவியை கொன்ற பின்னர் பிள்ளைகள் நலம் கருதி எதுவும் செய்யப்படாமல் விடப்படுவது போல. புறக்  காரணிகள் திடீரென்று  இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க எடுத்துள்ள முடிவு ஏன் என சற்று ஆழ்ந்து நோக்கினால் தெளிவு ... Read more

பழசோ புதுசோ ஏதோ ஒண்ண கொடுங்க…

ஒரு நாட்டின் வளர்ச்சி அது எந்த துறையாக வேண்டுமானாலும் இருக்கட்டும் அது அந்நாட்டின் கல்வியைப் பொறுத்தே அமையும்.. இன்றைக்கு நம்மை விட அமெரிக்காவோ ஜப்பனோ முன்னே இருக்கிறார்கள் என்றால் அது அவர்களின் பொருளாதாரத்தினால் தான் என்பது எனக்கென்னவோ சரியாக படவில்லை. கல்வி கற்பிக்கும் முறைகளில் நமக்கும் அவர்களுக்கும் டயல்-அப்பிற்கும் ப்ராட்பாண்டிற்குமான வித்தியாசம் இருக்கிறது. அவர்கள் பிள்ளைகள் எதை விரும்புகிறார்களோ எது அவர்களுக்கு வருகிறதோ அதை சொல்லித் தருகிறார்கள். நாம் எது இருக்கிறதோ அதை மாணவன் மீது திணிக்கிறோம். சரி இதை எல்லாம் பல நூறு தடவை பல பேர் சொல்லி விட்டார்கள் இனி நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இருக்கின்ற கல்வியை சமச்சீர் ஆக்குகிறோம் என்று பாடங்களில் தேவை அற்ற அரசியலாளர்களின் கருத்துகள் புகுந்து கொள்ள அடுத்து வந்த அரசு அதை அனுமதிக்கும் என்று எதிர்பார்ப்பது மடத்தனம் அன்றி வேறொன்றுமில்லை. இது நாள் வரையில் பாடப் புத்தகங்களில் இந்த மாதிரி குளறுபடிகள் ... Read more

தமிழ்நாட்டு ராம்தேவும் வெள்ளை காக்காவும்…!

நான் சொல்ல வரும் நபர் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரும் சக்தி என கொஞ்ச நாளைக்கு முன்பு வரை சொல்லிக் கொண்டவர். திடீர் திடீர் என்று ‘மக்கள்’ மீது அன்பு பொங்க ஏதாவது போராட்டங்கள் நடத்துவது இவரின் வாடிக்கை. சில நேரங்களில் அவற்றை தன் கூட்டணி கட்சி ஆட்சியில் இருக்குமானால் ஓரளவு நிறைவேற்றி விடுவார்.(பின்னர் அது காணாமல் போவதை எல்லாம் கணக்கில் கொள்ள வேண்டாம்) அப்படித்தான் இந்த முறையும் போராட்டம் நடத்துகிறார். அவர் என்னவோ நல்ல விஷயங்களை வலியுறுத்தி தான் போராட்டம் நடத்துகிறார்.(அந்த இடத்தை பார்த்தால் போராட்ட களம் போன்று தெரியவில்லை என்றாலும் தொலைக்காட்சியில் அதனை போராட்டம் என்று தான் அறிவித்து இருக்கிறார்கள் அடியேன் அதை பின்பற்றி தான் இதனை போராட்டம் என்றேன்.)  தனியார்  பள்ளிகள் தங்கள் இஷ்டத்திற்கு கல்விக் கட்டணம் வசூலிக்கிறார்கள், அதனால் தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் அல்லது 99 ஆண்டுகள் அவற்றை குத்தகைக்கு ஏற்று ... Read more

மாணவர்கள் கொண்டாடுவதா,திண்டாடுவதா?

சென்ற தி.மு.க ஆட்சியில் சமச்சீர் கல்வி முறை குறித்து பெரிதும் ஆலோசிக்கப்பட்டு,கடைசியில் அவசர அவசரமாக முடிவுகள் எடுக்கப்பட்டு ஒன்றாம் மற்றும் ஆறாம் வகுப்புகளில் மட்டும் அமலாக்கப்பட்டது. பல கல்வியாளர்களும் அதன் குறைப்பட்ட பாடத்திட்டத்தை எதிர்த்து இருந்தனர். தனியார் பள்ளிகளும் பாடத்திட்டம் செம்மையாக இல்லை என்று புகார் கூறினர். நான் என் தங்கையின் ஆறாம் வகுப்பு புத்தகங்களை சில நேரங்களில் பார்த்திருக்கிறேன், வடிவமைப்பு முந்தைய புத்தகங்களினும் பன்மடங்கு மேல் தான். புத்தகம் படிக்க இல்லை என்றாலும் அடிக்கடி பார்க்கவாவது ஆசை வரும் அப்படி இருந்தது, ஆனால் கருத்துகளும் பாடங்களும் அறிவுக்கு உகந்தவையாக நிச்சயம் இல்லை. நான் படித்த காலத்தில் இருந்த அந்த கோர்வையான பாடங்கள் இதில் இல்லை. உதாரணமாக, தமிழ் பாடம் முன்பெல்லாம் செய்யுள் தனியே,உரைநடை தனியே,துனைப்பாடம் தனியே என பிரித்து கொடுக்கப்பட்டு இருக்கும். ஆனால் இப்போது அவை ஒன்றிணைக்கப்பட்டு பாடக் குழுக்களாக இருந்தன. அது முதல் முறை படிக்க நன்றாக இருந்தாலும், ... Read more

டெல்லி வரேன் மகளை பார்க்க.. உன்ன பார்க்க இல்ல – கருணாநிதி கோபம்

எப்போதுமே நாசூக்காக பேசுவதிலும் செயல்படுவதிலும் கருணாநிதி வல்லவர். இதற்கு மேலும் கூட்டணியில் நாங்கள் நீடிக்க வேண்டுமா என்பதை காங்கிரசிற்கு உணர்த்தும் விதமாக தன் மகளை பார்க்க (சொல்லவில்லை என்றாலும் உண்மை அது தானே ) செல்லும் கலைஞர் சோனியாவை சந்திக்க மறுத்து இருக்கிறார். மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2 ம் ஆண்டு நிறைவு விழா இரவு விருந்தி்ல் தி.மு.க., வை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என தெரிகிறது. இந்த பார்ட்டியில் தி.மு.க., பார்லி., குழு தலைவர் டி.ஆர். பாலு பங்கேற்பார் என்று கட்சி தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதே நேரத்தில் நாளை அவர் டில்லி சென்றாலும் காங்., தலைவர் சோனியாவை சந்திக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். நாட்டை மட்டுமின்றி, உலகையே உலுக்கிய “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல், பொருளாதார சீர்திருத்தங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணாதது போன்ற சூழலில், பிரதமர் மன்மோகன் சிங்(79) தலைமையில் இரண்டாவது முறையாக ... Read more

ஜெயலலிதா என்ன செய்ய வேண்டும்?

தமிழக மக்கள் என்றைக்குமே எந்த தேர்தலிலும் அரை குறை தீர்ப்பை வழங்கியது கிடையாது, தமிழ்நாட்டில் எப்போதும் தொங்கு சட்டமன்றம் அமைந்தது கிடையாது. மைனாரிட்டி அரசு அமைவது என்பது மிக அரிதானது தான், அதுவும் சென்ற முறை நடந்தேறக் காரணம் திமுகவின் கொட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் அம்பலமானது தான். அப்படி இருக்க முழுதாய் தெரிந்த பின்னர் இந்த முறை திமுகவை தமிழக மக்கள்  தூக்கி எறிந்திருக்கிறார்கள். தமிழக மக்கள் இலவசங்களுக்கு மயங்குவார்கள் தான் ஆனால் மாய்ந்து போய் விட மாட்டார்கள் என்பதை திமுக இப்போது தெள்ளத் தெரிந்து கொண்டிருக்கும். என்னடா இவன் இப்படி வரிந்து கட்டி அதிமுகவிற்கு ஜால்ட்ரா தட்டுகிறான் என்று எவரும் என்னிட வேண்டாம். நமக்கு முன்னே தெரிந்தெடுக்க இரண்டு விருப்பங்கள் தான் இருந்தன, அதில் அதிமுக மோசம் தான், ஆனால் திமுக நாசம். மோசம் போனால் ஆவது பின்னர் மீள வாய்ப்பு உண்டு ஆனால் நாசம் போய்விட்டால்? சரி, முடிவுகள் ... Read more