மே 1 முதல் பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் மே 1-ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும் என்றும் ஜூன் 1ம் தேதியன்று அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகப் பள்ளிகளில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு ஆண்டு தேர்வுகள் முடிவடைந்துள்ளது. 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, ஏப்ரல் 21ம் தேதி தேர்வுகள் முடிவடைகின்றன.
இந்த நிலையில், மே 1 முதல் மாணவர்களுக்குக் கோடை விடுமுறை அறிவித்துள்ளது. மீண்டும், ஜூன் 1ம் தேதியன்று அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வெயிலின் உக்கிரம் அதிகரித்துள்ளதால் கோடை விடுமுறையை தெலுங்கானா மாநிலம் போல தமிழகத்திலும் சற்று முன்னதாகவே விடுமுறை விடப்பட வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் இந்த ஆண்டு வரலாறு காணாத வெயில் அடிக்கும் என்று வானிலை இலாகாவினர் எச்சரித்துள்ளனர்.
இந்த ஆண்டு தெலுங்கானா, கர்நாடகா, மராட்டியம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் வெயிலின் தாக்கம் மிக, மிக அதிகமாக உள்ளது.
வெயில் கொளுத்துவதால் 16ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விட தெலுங்கானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இன்று தொடங்கி ஜூன் மாதம் 12ம் தேதி வரை மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட கூடாது என்றும் தெலுங்கானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அதே போல தமிழகத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் கோரிக்கையாகும்.