Category: தேமுதிக

நேற்று: தனி கட்சி கிடையவே கிடையாது – இன்று : மக்கள் தேமுதிக உதயம்

மக்கள் நலக்கூட்டணியுடன் தே.மு.தி.க., கூட்டணி வைத்ததற்கு சந்திரகுமார் உள்ளிட்டோர் அதிருப்தி தெரிவித்தனர். இதனையடுத்து சந்திரகுமார் உள்ளிட்டோரை கட்சியிலிருந்து விஜயகாந்த் நீக்கினார். இன்று அதிருப்தியாளர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்கள் தே.மு.தி.க., என்ற பெயரில் கட்சி துவக்குவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

ஒருவழியாக வாசன் மநகூ இல் சேர்ந்துட்டார்.. யாருக்கு எவ்ளோ தொகுதி?

தேமுதிக, மக்கள் நலக்கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி. சட்டசபைத் தேர்தலில் 26 தொகுதிகளில் தமாகா போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க. 104 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மதிமுக 29 தொகுதிகளில் போட்டியிடுகிறது. த.மா.கா. 26 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தலா 25 கட்சிகளிலும் போட்டியிடுகின்றன. மக்கள் நல கூட்டணி தலைவர்கள் தேனாம்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் ஜி.கே.வாசனை சந்தித்து கூட்டணி குறித்து இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆலோசைனயில் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரரசன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் அங்கிருந்து வாசன், மக்கள் நல கூட்டணி தலைவர்கள் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு விஜயகாந்தை சந்தித்து பேசினர். அப்போது யார் யார் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்ற ஆலோசனை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்படும் தொகுதிகளை கூட்டணி கட்சி தலைவர்கள் இறுதி செய்தனர். அதன்படி ... Read more

விஜயகாந்த் கட்டுப்பாட்டில் இல்லை தேமுதிக – சந்திரகுமார்

இப்போது தேமுதிக கட்சி பிரேமலதா கட்டுப்பாட்டில் உள்ளது. தலைவருக்கு பிடிக்காத கூட்டணியை உருவாக்கியது பிரேமலதாதான் என்று கட்சியை விட்டு டிஸ்மிஸ் செய்யப்பட்ட சந்திரகுமார் நிருபர்களிடம் இன்று தெரிவித்தார்.  

விஜயகாந்தை கட்சியில் நீக்க திட்டமா? – சந்திரகுமார் டீம் ஆலோசனை

சென்னை: கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்க உள்ளனர் சந்திரகுமார் அணியினர். சட்டசபை தேர்தலில் திமுகவோடு கூட்டணி வைக்கும் முடிவை நாளை பகலுக்குள் விஜயகாந்த் அறிவிக்க வேண்டும் என்று மதியம் அளித்த பேட்டியில் தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் எம்.எல்.ஏ மற்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்து, சந்திரகுமார், மாநில துணைச் செயலர் முருகேசன், உயர்மட்டக்குழு உறுப்பினர் வீரப்பன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலர் சி.எச்.சேகர், சேலம் மேற்கு மாவட்ட செயலர் பார்த்திபன், வேலுார் மத்திய மாவட்ட செயலர் விஸ்வநாதன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலர் கார்த்திகேயன், ஈரோடு தெற்கு மாவட்ட செயலர் சிவக்குமார், ஈரோடு வடக்கு மாவட்ட செயலர் செந்தில்குமார், விழுப்புரம் வடக்கு மாவட்ட பொருளாளர் சிவா ஆகியோர், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்துள்ளனர் என்று குற்றம்சாட்டி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். திருவள்ளூர் கிழக்கு ... Read more

தேமுதிக உட்கட்சி பிரச்னை – ஸ்டாலின் கருத்து

மக்கள் நலக் கூட்டணியில் இணைந்ததை எதிர்த்து தேமுதிக எம்எல்ஏக்கள் சிலரும், மாவட்ட நிர்வாகிகளும் விஜயகாந்துக்கு எதிராக நேற்று போர்க்கொடி உயர்த்தினர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில், அதிரடியாக விஜயகாந்த் அவர்களை கட்சியில் இருந்தே நீக்கி உத்தரவிட்டு அனைவரையும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியில் ஆழ்த்தினார். போர்க்கொடி தூக்கியவர்களை விட, அவர்களுக்குப் பின்னால் இருந்து இயக்குவதாகக் கூறி திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினை தான் திட்டித் தீர்த்தனர் மக்கள் நலக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள். ஆனால், இதற்கு பதிலளித்துள்ள மு.க. ஸ்டாலின், தேமுதிகவில் தற்போது ஏற்பட்டிருக்கும் சலசலப்பு உள்கட்சி விவகாரம்தான்.இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, தேமுதிகவினரை பணம் கொடுத்து திமுகவுக்கு அழைப்பதாகக் கூறுவது அபாண்டம் என்று கூறுகிறார். தேமுதிகவை யாரும் கரைக்க வேண்டாம், அது தானாகக் கரையும் என்று ஏற்கனவே ஆரூடம் கூறியிருந்தார் ஸ்டாலின், அதே போல தற்போது நடந்திருப்பது பழம் நழுவி பாலில் விழுந்த கதையா அல்லது தான் செய்த வேலைக்கு ... Read more

சந்திரகுமார் – அன்றும் இன்றும்

மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி சேர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கிய தேமுதிகவின் 3 எம்எல்ஏக்கள், 5 மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட 10 முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். தேமுதிக எம்எல்ஏக்கள் வி.சி.சந்திரகுமார் (கொள்கை பரப்பு செயலாளர்), சி.எச்.சேகர், எஸ்.ஆர்.பார்த்திபன், மற்றும் துணைச் செயலாளர் தேனி முருகேசன், உயர்மட்டக் குழு உறுப்பினர் கே.ஆர்.வீரப்பன், மாவட்ட செயலாளர்கள் ஜெ.விஸ்வநாதன் (வேலூர் மத்தி), என்.கார்த் திகேயன் (திருவண்ணாமலை), செஞ்சி சிவா (விழுப்புரம்), இமயம் என்.எல்.சிவக்குமார் (ஈரோடு தெற்கு மாநகர்), பி.செந்தில்குமார் (ஈரோடு வடக்கு) ஆகிய 10 பேரையும் அதிரடியாக நீக்கப்பட்டனர். இதில் திரு. சந்திரகுமார் இதற்கு முன்பு கொடுத்த பெட்டியும் இப்போது கொடுக்கும் பேட்டியும் அவர் ஒரு வளரும் அரசியல்வாதி என்பதை காட்டுகிறது.