Category: செய்திகள்
யாருக்கு வாக்களிக்க வேண்டும் – சகாயம் பேச்சு
எல்லா அரசியலுக்கு அப்பாற்பட்ட தலைவர்களும் என்ன சொவர்களோ அதைத்தான் சகாயமும் சொல்லி இருக்கிறார். கட்டாயம் வாக்களியுங்கள், சிந்தித்து வாக்களியுங்கள். மாற்றத்தை அரசியலில் தேட வேண்டாம், சமூகத்தில் தான் அதை ஏற்படுத்த வேண்டும் என அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் உ.சகாயம் தெரிவித்தார். மன்னார்குடியில் ‘மன்னையின் மைந்தர்கள்’ அமைப்பு சார்பில் ‘நமது வாக்கு நமது உரிமை’ என்ற தலைப்பில் நேற்று முன்தினம் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்குக்கு அமைப்பின் தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். மருத்துவர் பாரதிச்செல் வன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்புரையாற்றிய உ.சகாயம் பேசும்போது, “மே 16-ம் தேதி நம்முடைய பங்களிப்பு சமூகத்தின் மாற்றத்துக்கான பங் களிப்பாக இருக்க வேண்டும். அதற்கு அனைத்து வாக்காளர் களும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். உலகிலேயே மிகவும் அபாயகரமானவர்கள் சமூக பொறுப்பற்றவர்கள் தான். தேர்தலில் யார் வாக்களிக்காமல் இருக்கிறார்கள் என்றால் அதிகம் படித்தவர்கள் தான். இவர்களே அநீதிக்கு காரணம். இவர்களை தான் நாம் மாற்ற ... Read moreவிஜய் மல்லையா பேட்டி – சிரிக்காமல், கோபப்படாமல் படிக்கவும்
இப்போதைக்கு இந்தியாவுக்குத் திரும்பி வர மாட்டேன் என்று தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். இந்தியாவில் வாங்கிய வங்கிக் கடன் ரூ.9,400 கோடியை திருப்பிச் செலுத்தாதது உள்பட பல்வேறு நிதி முறைகேடு வழக்குகளில் சிக்கியுள்ள மல்லையா இப்போது இங்கிலாந்தில் உள்ளார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அவரது கடவுச்சீட்டு முடக்கப்பட்டது. மேலும், மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்புமாறு பிரிட்டன் அரசிடம், வெளியுறவு அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், லண்டனில் இருந்து வெளியாகும் “ஃபைனான்ஷியல் டைம்ஸ்’ நாளிதழிற்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் மல்லையா கூறியிருப்பதாவது: வங்கிக் கடன் பிரச்னைக்கு நியாயமான தீர்வைக் காண வேண்டும் என்றே நினைக்கிறேன். ஆனால் எனது பாஸ்போர்டை முடக்குவதன் மூலமாகவோ, என்னைக் கைது செய்வதாலேயோ பணத்தைப் பெற முடியாது. நான் கட்டாய நாடு கடத்தல் நிலைக்கு உள்ளானேன். இந்தியாவுக்குத் திரும்ப வேண்டும் என்று ஆசைப் படுகிறேன். ஆனால், இப்போதைக்கு நாடு திரும்பும் எண்ணம் ஏதும் ... Read more10 இடங்களில் சதம் – கொளுத்தும் வெயில்..
தமிழகத்தில் முன் எப்போதும் அளவுக்கு வெயில் இம்முறை சுட்டெரித்து வருகிறது. ஒரே நாளில் தமிழகத்தின் பாத்து இடங்களில் நூறு டிகிரிக்கும் அதிகமாக வெயிலின் அளவு பதிவு செய்யப்பட்டு உள்ளது. முன்பெல்லாம் கடுமையான வெயிர் காலங்களில் வேலூரில் மட்டும் தான் தமிழ்நாட்டில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தும். இப்போது எல்லா இடங்களிலும் வெயிலின் கொடுமை அதிகரித்துள்ளது. வெயில் நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு, தென்கிழக்கு பகுதியில் இருந்து காற்று வீசுவதால் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. எனினும், கோடை காலத்துக்கான வெப்பம் நீடிக்கிறது. தமிழகத்தைப் பொருத்தவரை பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு இதே வெப்ப நிலை நீடிக்கும். வெப்பத்தின் அளவு சராசரியாக 98 முதல் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருக்கும். சில இடங்களில் வெப்ப சலனத்தினால் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றனர். வெள்ளிக்கிழமை பதிவான வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்): கரூர் பரமத்திவேலூர், தருமபுரி, திருப்பத்தூர், ... Read moreவெயில் அதிகமா இருக்கு கொஞ்சம் பார்த்து பண்ணுங்க – தேர்தல் ஆணையம்
அரசியல் கட்சிகள் கடும் வெப்பம் நிலவும்போது பொதுக்கூட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால் குடிநீர், மருத்துவ வசதி, கூரை அமைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்த லுக்கான பிரச்சாரத்தில் ஆளும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் பெரும் பாலான மாவட்டங்களில் அதிக வெப்பம் நிலவி வந்தாலும், அதை பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதாவை பொறுத்தவரை, கடந்த 9-ம் தேதி சென்னையில் பிரச்சார பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து 11-ம் தேதி விருதாச்சலத்திலும், 20-ம் தேதி சேலத்திலும் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார். இந்த இரு கூட்டங்களிலும் பங்கேற்ற 4 பேர் உயிரிழந்தனர். அதிமுக சார்பில், உடல்நலக் குறைவால் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால், கடும் வெயில் மற்றும் குடிநீர் கிடைக்காததால் இறந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இது தொடர்பாக, சமூக அமைப்புகள் மற்றும் திமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு ... Read moreவாட்ஸ் அப் -க்கு போட்டியாக ஆப் உருவாக்கிய சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை
வாட்ஸ்அப் பாணியில் தான், உருவாக்கிய, சோஷியல் மீடியா ஆப், சரிவர பிரபலம் ஆகாத மன வருத்தத்தால், ஹைதராபாத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் நைட்ரஜன் வாயுவை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹைதராபாத் நகரிலுள்ள அமீர்பேட் பகுதியை சேர்ந்தவர் லக்கி குப்தா அகர்வால் (33). நகரிலுள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். திருமணமாகாத லக்கி குப்தா தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவரின் சகோதரர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று லக்கி குப்தா அவரது அறைக்கதவை மாலை வரை திறக்கவேயில்லையாம். இதனால் சந்தேகமடைந்த அவரின் தந்தை, அறை கதவை பல முறை தட்டி, மகனை கூப்பிட்டுள்ளார். அறைக்குள் இருந்து பதில் வராததால் பதற்றமடைந்த லக்கி குப்தா பெற்றோர், அந்த கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது. அறைக்குள் இருந்த படுக்கையில், லக்கி குப்தா மல்லாந்து படுத்த நிலையில் அசைவற்று ... Read moreகல்வி தகுதி உள்ள அனைவரையும் வங்கி தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் ;முத்தரசன்
எஸ்பிஐ வங்கி தேர்வுக்கு கல்வித் தகுதியுள்ள அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”பாரத ஸ்டேட் வங்கியில் 17 ஆயிரத்து 140 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் முதன்மை தேர்வு வரும் மே 11 , 17 தேதிகளில் நடக்கலாம் எனக் கூறப்பட்டது. இந்த சூழலில், கல்விக்கடன் பெற்று திருப்பி செலுத்தாதவர்கள், இந்த தேர்வில் கலந்து கொள்ள முடியாது என்றும், அவர்களின் விண்ணப்பம் ஏற்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் மட்டும் 90 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். கல்விக்கடன் பெற்று படித்தவர்கள் உரிய வேலைவாய்ப்புக்கும், வருமானத்துக்கும், வழியில்லாமல் வேலை தேடி வரும் நிலையில், கடன் தொகை தவணையை நிபந்தனை ஆக்கியிருப்பதை ரிசர்வ் வங்கி தலையிட்டு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கல்வி தகுதியுள்ள அனைவரையும் பாரத ஸ்டேட் வங்கியின் தேர்வினை ... Read moreமுதல்வரை எதிர்த்து வசந்தி தேவி
சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் கல்வியாளர் வசந்தி தேவியை பொது வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. வரும் சட்டபேரவை தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகள் சிம்லா முத்துசோழன் களம் இறக்கப்பட்டுள்ளார். பாமக சார்பிலும் பெண் வேட்பாளரே நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி-தமாகா கூட்டணியில் ஆர்.கே நகர் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கல்வியாளர் வே.வசந்தி தேவி நிறுத்தப்பட்டுள்ளார். கல்விக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ள வசந்திதேவியை, சென்னை ஆர்.கே நகரில் பொது வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்
தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் நாளை வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது.தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களில் மே 16ல் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை துவங்குகிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள். வேட்பு மனு தாக்கல் 29ம் தேதி நிறைவு பெறுகிறது.தினமும் காலை 11:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை மனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனுவை வாபஸ் பெற விரும்புவோர் மே, 2ம் தேதி மதியம் 3:00 மணிக்குள் வாங்க வேண்டும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.வேட்பு மனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் குறித்து தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது: தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் நாளை துவங்குகிறது. தொகுதிக்கு ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர், இரண்டு உதவி தேர்தல் நடத்தும் அலு வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது ... Read moreகாமெடியன்களுக்கு அகராதி கவுண்டமணிதான் ……..நடிகர் சந்தானம்
ஜெயராம் புரொடக்சன்ஸ் வழங்கும் படம் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. சுசீந்திரன் உதவியாளர் கணபதி பாலமுருகன் இயக்கும் இந்த படத்தை சண்முகம் தயாரித்துள்ளார். நகைச்சுவை நடிகர் கவுண்டமணி நாயகனாக நடித்துள்ளார். இன்னொரு நாயகனாக சௌந்தர்ராஜாவும் அவருக்கு ஜோடியாக மெட்ராஸ் ரித்விகாவும் நடித்துள்ளனர். இப்படத்தில் கேரவன் கிருஷ்ணன் எனும் கதாபாத்திரத்தில் நாத்திகவாதியாக வருகிறார் கவுண்டர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையில் நேற்று மாலை இப்படத்தின இசை வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் கவுண்டமணி, சௌந்தர்ராஜா, ரித்விகா, நகைச்சுவை நடிகர் சந்தானம், இயக்குநர்கள் சீனு ராமசாமி, சுசீந்திரன், பேரரசு, பொன்ராம், பிரபாகர், நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆரி மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். விழாவில் சந்தான்ம் பேசும்போது, “காமெடியன்களுக்கு டிக்சனரி கவுண்டணி சார்தான். எனக்கு எதாவது ஒரு சீன் சேர்க்க வேண்டும் என்றால் யூடியூபில் கவுண்டமணி சாரின் காமெடியைப் பார்த்து தேவையானதை எடுத்துக் கொள்வேன். இதைச் சொல்வதில் ... Read moreசேலத்தில் நாக்கை துருத்தி …. பாதுகாவலரை அடித்த விஜயகாந்த்
சேலம்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் சேலத்தில் இன்று பத்திரிகையாளர்களை நாக்கை துருத்தி மிரட்டியதுடன், பாதுகாவலர் ஒருவரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோ அப்போது, தனியார் தொலைக்காட்சி நிருபர்கள், அவரிடம் மைக்கை நீட்டினர். இதனால், ஆத்திரம் அடைந்த விஜயகாந்த், பத்திரிகையாளர்களை நாக்கை துருத்தி கையை ஓங்கினார். அதோடு மட்டுமின்றி, தன்னை அழைத்து சென்ற பாதுகாவலரையும் விஜயகாந்த் நாக்கை துருத்தி தாக்கியதால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next »