தி.மு.க.தலைவர் கருணாநிதியுடன் குஷ்பூ சந்திப்பு

சென்னை: சென்னையில் இன்று திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு சந்தித்து பேசினார்.

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நடுவே சட்டசபை தேர்தலில் கூட்டணி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் குஷ்பு போட்டியிட சீட் தரப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு சீட் தரப்படவில்லை. திமுக தரப்பில் இருந்து சிலர் கொடுத்த நெருக்கடிதான், அவருக்கு சீட் தரவிடாமல் தடுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் குஷ்பு இன்று சந்தித்து பேசியுள்ளார்.