Category: இந்தியா

என்ன பைக்குக்கு டிரைவரா? – பெங்களூரில் புதிய சேவை

கச்சேரி ஆரம்பம் படத்தில் வடிவேலு பைக்குக்கு டிரைவராக ஜீவா வேலைக்கு சேர்வது போல ஒரு காத்சி இருக்கும். அதை இப்ப நெசமாவே ஆக்கிட்டாங்க. ‘கால் – டாக்சி’ வெற்றியை அடுத்து, பன்னாட்டு நிறுவனங்களான உபேர் மற்றும் ஓலா , பெங்களூரில், சோதனை முறையில், ‘பைக் – டாக்சி’ சேவையை ஆரம்பித்துள்ளன. பெரும்பாலான நகரங்களில், போக்குவரத்து, பெரும் சவாலாகி வரும் நிலையில், வசதியான பயணத்திற்கு, ‘கால் – டாக்சிகள்’ உதவுகின்றன. பன்னாட்டு நிறுவனங்களான, உபேர், ஓலா போன்றவை, கட்டணங்களை பெருமளவு குறைத்து, மற்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி வருகின்றன. குறைவான செலவு : இந்நிலையில், போக்குவரத்து நெரிசலில் சிக்காமலும், குறைவான செலவில் செல்ல ஏதுவாகவும், பல நாடுகளில், ‘பைக் – டாக்சி’ சேவை உள்ளது. இந்தியாவிலும், முதன்முறையாக ஹரியானா மாநிலம் குர்கானில், ‘பைக் – டாக்சி’ சேவை அறிமுகமானது. இப்போது, கர்நாடக மாநிலம் பெங்களூரிலும் இந்த சேவை துவங்கப்பட்டுள்ளது. உபேர், ஓலா நிறுவனங்கள், ... Read more

ஆம் ஆத்மி தேசிய நடவு செய்ய துணிவு

அரவிந்த் கெஜ்ரிவால் , டெல்லி சட்டசபை தேர்தலை வென்ற கையோடு தேசிய  அளவிலும் போட்டியிட முடிவு செய்து இருக்கிறார். மிக நிதானமாக வேட்பாளர் தெரிவு இருக்காவிட்டால் மற்ற அரசியல் கட்சிகளை போல இதிலும் களை கட்டி விடும். இப்போது தான் நாற்று துளி விட ஆரம்பித்து இருக்கிறது, கொஞ்சம் பார்த்து நடவு செய்தால் தான் நல்ல வேட்பாளர்கள் கிடைப்பார்கள். இல்லையேல் பத்தோடு பதினொன்று ஆகி விடும் ஆம் ஆத்மி. கட்சி துவக்கி, ஓராண்டுக்குள், டில்லி சட்டசபையை கைப்பற்றியுள்ள, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சியின் அடுத்த இலக்கு, லோக்சபா தேர்தல் தான். இன்னும், மூன்று, நான்கு மாதங்களில் வரவுள்ள லோக்சபா தேர்த லில், பெருவாரியான இடங் களில் வெற்றி பெற்று, மத்தியிலும் ஆட்சியை அமைப்பதே, நோக்கம் என, அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிவித்துஉள்ளனர். தொடர்ந்து, மூன்று முறை வெற்றி பெற்று, டில்லி முதல்வராக இருந்த, காங்கிரசைச் சேர்ந்த, ஷீலா தீட்ஷித்தை ... Read more

இனிப்பு கசக்கும் வேளை….

கொள்கை மாற்றங்கள் மத்திய மாநில அளவில் கொள்கை ரீதியாக சில மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என மன்மோகன் அறிவித்திருக்கிறார். கூடங்குளம் அணு உலை வேலைகளை தொடர ஜெயலலிதா முடிவு. இரண்டிற்கும் பெரிதாக தொடர்பில்லை என்று கருதுபவர்கள் யாரேனும் இருந்தால் இதற்கு மேலும் இந்த பக்கத்தில் தொடர வேண்டாம். மழுப்பலான ஆதரவு இத்தனை நாளாக இந்தியா எப்போதுமே இலங்கை விஷயத்தில் மழுப்பலாகவே இருந்தது. வரும் ஆனால் வராது என்பது போல, தமிழர்கள் நலன் காக்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க வேண்டும் என்றும் சொல்லும். எப்படி என்றால் ஒரே குடும்பத்தில் உள்ள கணவன், தன் மனைவியை கொன்ற பின்னர் பிள்ளைகள் நலம் கருதி எதுவும் செய்யப்படாமல் விடப்படுவது போல. புறக்  காரணிகள் திடீரென்று  இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க எடுத்துள்ள முடிவு ஏன் என சற்று ஆழ்ந்து நோக்கினால் தெளிவு ... Read more

ராகுல் காந்தி — ஃப்ளாப் ஷோ @ உத்தர பிரதேசம்

ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியின் அடையாளமாக மாற்ற மத்தியில் ஆளும் தரப்பு முயற்சி செய்து அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறது. ஆனால் ராகுல் , காங்கிரஸில் தனக்கு கிடைக்கும் முக்கியத்துவம் மக்களிடம் காங்கிரஸிற்கு கிடைக்கும் என தப்புக்கணக்கு போடுவது தோற்பது  இது முதல் தடவை அல்ல. ஏற்கனவே கடந்த சில மாநில தேர்தல்களில் காங்கிரஸ் வலுவாக இருந்த இடங்களில் கூட ராகுலின் திட்டங்கள் எதுவும் எடுபடாமல் போன நிலையில் உத்தர பிரதேசத்தில் மாயாவதி vs ராகுல் காந்தி அகிலேஷ்  vs ராகுல் காந்தி என்று வட இந்திய மீடியாக்கள் ராகுலை இஷ்டதிற்கும் தூக்கி விட்டன. அவரும்  மாயாவதியை அரக்கி போல சித்தரித்தார்; யானி சிலைகளுக்கு முழு ஆடை போர்த்த செய்தார். அகிலேஷை நடைமுறை தெரியாதவர் என சாடினார். ஆனால் மக்கள் தங்களுக்கு யானையும் தேவை இல்லை அதை மூடும் கையும் தேவை இல்லை என தீர்மானித்து விட்டனர். எந்த அளவுக்கு ராகுல் ... Read more

தாக்கப்படும் தலைநகரங்கள்..!

இந்தியா,உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு,வளரும் நாடுகளில் பொருளாதார பலம் பொருந்திய நாடு, ஐ.நா சபையில் நிரந்தர உறுப்பினர் ஆகப்போகும் நாடு… போதும் நிறுத்தும் ஓய் உம்ம பெனாத்தல.. இங்க பக்கத்துல எங்கேயோ குண்டு வெச்சி இருக்காளாம்..வெடிக்கப் போவுதாம்.. நாழி ஆறது சீக்கிரம் ஓடுங்கோல்… அமைதிக்கு ஆண்டவன் உருவாக்கிய நாடு என்று எவரேனும் இந்தியாவை இனி சொன்னால் அமைதியின் பொருள் அகராதியில் மாறி விட்டதா என்று ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். எந்த தற்காப்பு கலையை எடுத்துக் கொண்டாலும்,எதிரியை வீழ்த்த வேண்டுமெனில் முதலில் அவன் தலையை தாக்க வேண்டும் என்பது என் போன்றவருக்கே தெரிந்திருக்கும் பொது நிச்சயம் உங்களுக்கும் தெரிந்திருக்கும். இந்தியாவிற்கு இரண்டு தலைகள் உள்ளன. ஒன்று வணிக தலைநகரம் மும்பை, மற்றது ஆட்சி தலைநகரம் டெல்லி. எத்தனை தலை இருந்தால் என்ன,அத்தனையும் அசைத்து பார்க்கும் அளவுக்கு பலவீனமான நாடு தானே? என்னும் அளவிற்கு இந்தியா மோசமாகிப் போனதை நினைக்கும் போது வருத்தப்படுவதா,கோபப்படுவதா ... Read more

இங்கிலாந்துக்கு முதல் தோல்வி.. நாளைக்காவது கிடைக்குமா?

அது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை. உலக சாம்பியன்,டெஸ்ட் அரங்கில் நம்பர் 1 என்று கம்பீரமாய் இங்கிலாந்து மண்ணில் விளையாட சென்ற இந்திய அணிக்கு தொடர்ந்து அடி மேல் அடி விழுந்து கொண்டிருக்கிறது. எனக்கு என்னவோ நாளை தான் இந்த தொடரில் இந்தியாவின் முதல் வெற்றி நிகழப் போவதாகப் படுகிறது பார்ப்போம். டெஸ்ட் போட்டிகளில் நான்கு ஆட்டங்களிலும் தோல்வி அடைந்த நிலையில் T20 போட்டியில் பதிலடி கொடுப்பார்கள் என்று பார்த்தால் தங்களது T20 வரலாற்றில் முதல் போட்டியில் விளையாடிய இரண்டு வீரர்களை தவிர்த்து எவருமே பெரிதாய் வெற்றிக்கு முனையவில்லை. அந்த இருவர் யார் என்று இரண்டு தினங்களாக தொலைக்காட்சியில் திரும்ப திரும்ப காண்பித்து இருப்பார்களே? ரஹானேவும் ராகுலும் தான். ஒருவர் கிரிக்கெட்வாழ்க்கையை தொடங்குகிறார். மற்றவர் முடிக்கப் போகிறார். இருவருமே சிறப்பாக விளையாடினர். ரஹானே சரியாக பந்தின் திசை,வேகம் ஆகியவற்றை கொண்டு திருப்பி விடுவதில் வல்லவராக படுகிறார். டிராவிட் தன் இயல்புக்கு கொஞ்சமும் ... Read more

ஜன் லோக்பால் அவசியம் வேண்டுமா?

ஜன் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டி நாடே கொதிக்கிறது – எந்த தொலைக்காட்சி அலைவரிசையை திருப்பினாலும் இதே தான். உண்மையிலேயே அப்படி என்ன மாறுதல் வந்து விடும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்? பிரதமர் உள்ளிட்ட நாட்டின் எந்த பெரிய பதவியில் இருப்பரும் ஊழல் செய்தால் தண்டனை கிடைக்கும் அதுவும் ஒரே வருடத்தில். ஜன லோக் பாலின் அடிப்படை நாதமே இது தான். ஆனால் ஒன்றை நாம் மறந்து விட்டோமோ என்று எனக்கு தோன்றுகிறது. இப்படி ஒரு கடுமையான சட்டம் தேவை தான். ஆனால் இது நிறைவேற்றப்பட்டால் கோடிக்கணக்கான வாக்காளர்கள் தேர்ந்தெடுத்த பிரதம அமைச்சரை ஒரு பத்து பேர் கொண்ட நியமன அடிப்படையிலான குழு விசாரித்து தண்டனை கொடுக்க முடியும் என்றால் அடிப்படை ஜனநாயகமே அடிபட்டு போகிறதே. சரி அதை விடுங்கள் அந்த குழுவில் இருப்பவர்களும் மனிதர்கள் தான் அவர்கள் ஒன்றும் எப்போதும் நல்லவர்களாக இருக்கும் படி ப்ரோக்ராம் செய்யப்பட்ட எந்திரங்கள் அல்ல. ... Read more

அடிமைகளா நாம்?

தற்செயலாக என் தங்கைக்கு விடுதலை நாள் விழா குறித்த கட்டுரை ஒன்றிற்கு உதவ நேரிட்ட போது எனக்கு தோன்றியவற்றை பதிக்கிறேன். நிச்சயம் பலருக்கும் இது தோன்றி இருக்கலாம். சென்னை மாநகரம்,தமிழ்நாட்டின் தலைநகரம் புதிதாக சென்னைக்கு செல்லும் எவரும் காண விழைவது சிலவற்றை தான் அவற்றுள் இவைகள் நிச்சயம் இருக்கும். 1. உயர் நீதிமன்றம் : தொலைகாட்சி செய்திகளில் மட்டுமே பார்த்து பழகிப் போனது 2.சட்டப்பேரவை : செயின்ட் ஜார்ஜ் கோட்டை 3.சென்னை சென்ட்ரல் : தென்னகத்தின் மிகப்பெரிய ரயில் நிலையம் இவை யாவுமே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவானவை. இவை மட்டுமல்ல இந்தியாவின் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் இதே நிலை தான். சரி விடுதலை அடைந்த இவ்வளவு ஆண்டுகளில் இதுவரை எத்தனை ஆயிரம் கிலோமீட்டர் ரயில் பாதை நமது அரசாங்கத்தால் அமைக்கப்பட்டு உள்ளது? எங்கள் ஊருக்கு ஆங்கிலேயர் காலத்தில் பாதை ஏதும் அமைக்கப்படவில்லை அவ்வளவு தான். இப்போதும் அதே நிலை தான் ... Read more

மௌன விரதத்தை முடித்துக் கொண்டார் மன்மோகன்

அட வாயை திறந்து பேசுங்களேன் என்று எதிர்கட்சிகள் மட்டுமல்ல சில ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே கேட்கும் அளவுக்கு தனது பிரதமர் பணியில் மிகவும் ‘பிஸி’யாக இருந்த பிரதமர் மன்மோகன் சிங் ஒருவழியாக தனது மௌன விரதத்தை இன்று கலைந்தார். ஆனாலும் நம்ம ஊர் கமல்ஹாசன் ஸ்டைலில் , தான் பேசியதில் இருந்து எந்த வித தகவல்களும் திரட்ட முடியாதபடி, ஒரு முடிவுக்கு வர முடியாதபடி குழப்பமான பேச்சாகவே அது அமையும் என்பதை நிச்சயம் அவரை தனியாக சந்திக்க வந்த அந்த ஐந்து எடிட்டர்களும் கூட அறிந்திருக்க வாய்ப்ப்பில்லை. அவரின் பேச்சின் முக்கிய அம்சமே லோக்பால் சட்டத்தின் கீழ் வருவதற்கு நான் தயார் என்று அறிவித்திருப்பது தான். ஆனால் அதிலும் ஒரு கிடுக்குப்பிடி போட்டுத் தான் சொல்லி இருக்கிறார் மனிதர். தான் எதன் கீழ் வேண்டுமானாலும் வருவதற்கு தயார், ஆனால் இறுதி முடிவை அமைச்சரவை தான் முடிவு செய்யும் என்று சொல்லி தன்  கையில் ... Read more

வேண்டாம் விட்டு விடுங்கள்..

ஆம்.. நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆவல் இருக்குமேயானால், வேண்டாம் விட்டு விடுங்கள் என்பது தான் சிறந்த பதிலாக இருக்கக் கூடும். பிறகு, உண்ணாவிரதம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு தினமும் யாராவது செயல் விளக்கம் கொடுக்க முற்படுகிறார்கள். சிலர் கொடுத்த விளக்கம் புரியவில்லையா என்பதாய் அரசை சாடி விட்டு மீண்டும் விளக்கியே தீருவேன் என்று அடம பிடிக்கின்றனர். ஆமாம், கடந்த சில வாரங்களாக நடந்த இந்த அறப்போரால் நாட்டுக்கு நடந்த நன்மை தான் என்ன? உண்மையாகவே ஊழலுக்கு எதிராக ஏதேனும் நடந்து விட்டதா? கருப்பு பணத்தின் ஒரு சிறு பகுதியாவது திரும்ப பெறப பட்டதா? சரி அதை விடுங்கள்.. யார் அந்த கருப்பு ஆடுகள் என்னும் விவரமாவது தெரிந்ததா? என்னமோ ஷங்கர் பட ரேஞ்சுக்கு கோரிக்கை வைத்து உண்ணாவிரதம் இருந்தால் நிறைவேறி விடுமா? முதலில் அவரவர் எந்த அளவுக்கு நல்லவர் என்பதை நினைந்து பிறகு மற்றவரை குறை ... Read more