63 ஆண்டுகளில் இதுவே முதல் முறை
டோலிவுட் தென்னிந்திய திரை உலகில் தமிழுக்கு அடுத்து முக்கிய பண்பு வகிப்பது தெலுங்கு திரை உலகம். என்ன தான் அவ்வப்போது நல்ல திரைப்படங்கள் தெலுங்கில் வந்தாலும் பொதுவாக அதிக மசாலா படங்களே தெலுங்கில் வளம் வரும். இந்நிலை இப்போது மாறி வருகிறது. பிரமோத்சவம், பாகுபலி பிரமோத்சவம், பாகுபலி, ருத்ரமாதேவி போன்ற படங்களின் மூலம் தற்போது கதை, படைப்பு என இரண்டிலுமே தெலுங்குப் படைப்பாளிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.மேலும் கமர்ஷியல் மசாலாக்களில் இருந்தும், தெலுங்குலகம் தற்போது மீள ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றத்தின் அறிகுறியாக தேசிய விருதுகளை இந்தாண்டு தெலுங்குப் படங்கள் வென்றுள்ளன. தெலுங்குப் படங்கள் 1954 தொடங்கி 2016 வரையிலான தேசிய விருதுகளில் இதுவரை எந்த ஒரு தெலுங்குத் திரைப்படமும், சிறந்த படம் என்ற பிரிவில் தேசிய விருதை வென்றதில்லை.இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த பாகுபலி இந்த ஆண்டின் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. வரலாறு 63 ... Read more
இது அது இல்லீங்க … சர்தார் கப்பர் சிங் படத்துக்கு தடை விதிக்க கோர்ட் மறுப்பு
இந்தி திரைப்படம் டபாங் உடன் தெலுங்கு திரைப்படம் சர்தார் கப்பர் சிங் கதை ஒத்துபோகிறது என கூறி அப்படத்தின் வெளியீட்டை முடக்க அர்பாஸ் கான் தயாரிப்பு நிறுவனம் பாம்பே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் என்ன தான் கதைக்கரு ஒன்று போல தோன்றினாலும் தெலுங்கு படம் வேறு விதமான பார்வையாளர்களுக்கு மாறுபட்ட கோணத்தில் எடுக்கப்பட்டது போல் இருப்பதால், இதை காபிரைட் மீறல் எனக் கொள்ள முடியாது. எனவே பவன்கல்யாண் படத்தை வெளியீட்டில் கோர்ட் தலையிட மறுத்து உள்ளது.
என்ன கமல் சார் இப்படி பண்ணிடீங்க?
தன்னிடம் உதவி இயக்குநராக பல ஆண்டுகள் பணியாற்றியவரும் தூங்கா வனம் பட இயக்குநருமான ராஜேஷ் எம் செல்வாவின் மகளுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டியுள்ளார் கமல் ஹாஸன். ராஜேஷ் எம் செல்வாவுக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. இதற்காக வாழ்த்துத் தெரிவித்த கமல் ஹாஸனிடமே, தன் குழந்தைக்கு ஒரு பெயர் வைக்குமாறு கேட்டுக் கொண்டார் ராஜேஷ். நேற்று கமல் அலுவலகத்துக்கு குழந்தையுடன் சென்றார் ராஜேஷ். குழந்தையைக் கையில் வாங்கிக் கொண்ட கமல், ‘ஹோஷிகா மிரினாளினி (Hoshika Mrinalini)’ என்ற பெயரைச் சூட்டினார். இது சமஸ்கிருதப் பெயராகும். நல்ல தமிழில் லட்சம் பெயர்கள் இருக்கும்போது, ஒரு தமிழ் குழந்தைக்கு சமஸ்கிருதத்தில் பெயர் வைத்திருக்கிறாரே உலகநாயகன்… வெளியில்தான் தமிழ்ப் பற்றாளர் வேஷமா? என்றெல்லாம் சமூக வலைத் தளங்களில் கமலை விமர்சித்துள்ளனர்.