Category: அரசியல்

காமராசர் – கதை அல்ல நிஜம் – 3

பகுதி 3 காமராஜருக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த உறவு அற்புதமானது. இது குறித்து கண்ணதாசன், “”காமராஜரை நான் தாயாகப் பார்த்தேன். தந்தையாகப் பார்த்தேன். தெய்வமாகப் பார்த்தேன். அதன்பிறகுதான் தலைவனாகப் பார்த்தேன் என்று மனமாரச் சொன்னவர், காமராஜரைப் பற்றி வியந்து வியந்து பாடல் எழுதியவர். அவர் எழுதிய இந்தப் பாடல் காமராஜரின் வாழ்க்கையின் சுருக்கம் என்றே சொல்லலாம். தங்கமே! தன்பொதிகைச் சாரலே! தண்ணிலமே! சிங்கமே! என்றழைத்துச் சீராட்டுத் தாய் தவிரச் சொந்தம் என்று ஏதுமில்லை! துணையிருக்க மங்கையில்லை! தூய மணி மண்டபங்கள், தோட்டங்கள் ஏதுமில்லை! ஆண்டி கையில் ஓடிருக்கும், அதுவும் உனக்கில்லையே! கண்ணதாசன் வீட்டில் அசைவம் சமைக்கப்பட்டால் காமராஜர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். இரவு நேரங்களில் இருவரும் சந்தித்தால் நேரம் போவதே தெரி யாமல் பேசுவார்கள். நாகர்கோவில் தேர்தல் பிரசாரத்தை முன்னின்று நடத்தி வெற்றி தேடிக் கொடுத்தவர் கண்ண தாசன். கண்ணதாசன் மது அருந்துவார் என்பது அனை வருக்குமே தெரியும். ஆனால் “மது அருந்துபவர்கள் காங் ... Read more

மாற்றான் தோட்டத்து மல்லிகை – அன்புமணி மீது வைகோ கரிசனம்

நாளிதழ் ஒன்றும், செய்தித் தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பு நிலவரம் வெளியாகி பல தலைவர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. எல்லா தேர்தல் கருத்துக் கணிப்புகளுமே வெற்றி தோல்வியை தீர்மானிக்காது என்றாலும், உண்மையாகிவிடுமோ என்ற எண்ணமே தலைவர்களின் கலக்கத்துக்குக் காரணம். அதாவது, மாம்பழக் கட்சியின் முதல்வர் வேட்பாளர் போட்டியிடும் பென்னாகரம் தொகுதியில், அவருக்கு 3வது இடம் கிடைக்கலாம் என்று கருத்துக் கணிப்புக் கூறுகிறது.  பம்பரம் கட்சித் தலைவர், முரசுக் கட்சியின் தலைவர் போட்டியிடும் உளுந்தூர்பேட்டை தொகுதியில், அவரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது பேசுகையில், பென்னாகரத்தில் போட்டியிடும் மாம்பழக் கட்சியின் முதல்வர் வேட்பாளருக்கு 3ம் இடம் கிடைக்கும் என்பதெல்லாம் நம்பும்படியாகவே இல்லை. எங்கள் எதிரியாக இருந்தாலும், இது தவறானது என்றே சொல்வேன் என்று காட்டமாகக் கூறியுள்ளார்.

யாருக்கு வாக்களிக்க வேண்டும் – சகாயம் பேச்சு

எல்லா அரசியலுக்கு அப்பாற்பட்ட தலைவர்களும் என்ன சொவர்களோ அதைத்தான் சகாயமும் சொல்லி இருக்கிறார். கட்டாயம் வாக்களியுங்கள், சிந்தித்து வாக்களியுங்கள். மாற்றத்தை அரசியலில் தேட வேண்டாம், சமூகத்தில் தான் அதை ஏற்படுத்த வேண்டும் என அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் உ.சகாயம் தெரிவித்தார். மன்னார்குடியில் ‘மன்னையின் மைந்தர்கள்’ அமைப்பு சார்பில் ‘நமது வாக்கு நமது உரிமை’ என்ற தலைப்பில் நேற்று முன்தினம் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்குக்கு அமைப்பின் தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். மருத்துவர் பாரதிச்செல் வன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்புரையாற்றிய உ.சகாயம் பேசும்போது, “மே 16-ம் தேதி நம்முடைய பங்களிப்பு சமூகத்தின் மாற்றத்துக்கான பங் களிப்பாக இருக்க வேண்டும். அதற்கு அனைத்து வாக்காளர் களும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். உலகிலேயே மிகவும் அபாயகரமானவர்கள் சமூக பொறுப்பற்றவர்கள் தான். தேர்தலில் யார் வாக்களிக்காமல் இருக்கிறார்கள் என்றால் அதிகம் படித்தவர்கள் தான். இவர்களே அநீதிக்கு காரணம். இவர்களை தான் நாம் மாற்ற ... Read more

அதுக்கு நான் சரிப்பட்டு வர மாட்டேன் – வடிவேலு

அரசியல் குறித்த கேள்விக்கு ‘அதெல்லாம் நமக்கு எதுக்கு.. விட்டுருங்க’ என்று நடிகர் வடிவேலு பதிலளித்தார். சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் ‘கத்தி சண்டை’ படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. இதில் தமன்னா தவிர மற்றவர்கள் கலந்துகொண்டார்கள். பூஜை முடிந்ததும் படக் குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது வடிவேலுவிடம் ‘அரசியலில் அமைதியாகி விட்டீர்களே’ என்று ஒரு நிருபர் கேட்டார். அதற்கு , ‘‘நல்லா இருக்கு நியாயம்.. உன் சீலைல போச்சாம் சாயம்.. இங்கே என்ன பொதுக்குழுவா நடக்குது. அதெல்லாம் எதுக்கு நமக்கு. விட்ருங்க… நம்ம படம் பத்தி மட்டும் பேசுவோம்’’ என்று தனக்கே உரிய நகைச்சுவையுடன் பதிலளித்தார்

கருணாநிதிக்கு விஜயகாந்த் பதிலடி

தமிழக தேர்தல் களத்தில் 3-வது அணி இருப்பது கண்ணுக்குத் தெரியவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறுவது வயது முதிர்வால் அவருக்கு ஏற்பட்டுள்ள கோளாறு எ ன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து புதுக்கோட்டையில் நேற்று இரவு நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் விஜயகாந்த் பேசியது: “அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு ‘அம்மா’ என்று பெயரிட்டுள்ள ஜெயலலிதா, ஏன் எம்ஜிஆர் என்று பெயரிடவில்லை? எம்ஜிஆர் இல்லாமலா அதிமுக வந்தது? எனது ஆட்சியில் தமிழகம் தலைநிமிர்ந்துள்ளது என்று கூறும் ஜெயலலிதா, முதலில் அவரது அமைச்சர்களை தலைநிமிரச் செய்யட்டும். அதிமுக, திமுக ஆட்சிகளால் தமிழகத்தில் லஞ்சம், ஊழல் பெருகியுள்ளதே தவிர வறுமை ஒழியவில்லை. தமிழகத்தில் 3-வது அணி இருப்பது எனது கண்ணுக்குத் தெரியவில்லை என்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. இது, அவரது வயது முதிர்வால் ஏற்பட்டுள்ள கோளாறு என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். தேமுதிக, தமாகா, ... Read more

காமராசர் – கதை அல்ல நிஜம் – 2

பகுதி 2 ஒரு வகையில் 60 வயது கடந்தவர்களை பார்க்கும் போது பொறாமையாக இருக்கும். ஏன் என்றால் அவர்கள் எல்லாம் காமராசர் என்னும் மனிதம் நிரம்பிய மனிதரை முதலமைச்சராய் பெற்று இருந்தார்கள். இன்றைக்கு இருக்கும் என்னை போன்ற இளைஞர்கள் காமராசரை பற்றி படிக்கும், தெரிந்து கொள்ளும் ஒவ்வொரு விஷயமும் எதோ கதை போல தான் உள்ளது. என்ன செய்வது சூப்பர்மேன்களும், சூப்பர்ஸ்டார்களும் நிறைந்த உலகில் சாதாரணமான மக்கள் சேவை புரிபவர் எவரும் இல்லையே. இதை ஒரு தொடராக தொகுக்க இருக்கிறோம். தங்களுக்கு தெரிந்த நிகழ்வுகளை இங்கே பிரசுரிக்க publish@tamiltel.in என்ற மின்னஞ்சலில் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். காமராசர் வாழ்க்கை சரித்தரம் அல்ல இது, அவரை பற்றி எங்களுக்கு கிடைத்த தகவல்களை தொகுத்து தர இருக்கிறோம். எச்சரிக்கை : தயவு செய்து காமராசரை யாரும் இப்போது உள்ள அரசியல்வாதிகளுடன் ஒப்பிட்டு தங்கள் மனதை புண்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். ... Read more

மக்கள் சேவை போட்டிக்கு 3785 பேர் தெரிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 785 பேர் போட்டியிடுகின்றனர். தமிழக சட்டப்பேரவைக்கு வரும் 16-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. அதன்படி, 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 785 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 3 ஆயிரத்து 462 பேர் ஆண்கள். 321 பேர் பெண்கள். 2 பேர் திருநங்கைகள். 3 ஆயிரத்து 27 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 339 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 45 பேர் களத்தில் உள்ளனர். மிகக் குறைந்த அளவாக ஆற்காடு, மயிலாடுதுறை, கூடலூர் ஆகிய தொகுதிகளில் தலா 8 பேர் போட்டியிடுகின்றனர். திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் 15, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூரில் 24, தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் உளுந்தூர்பேட்டையில் 25, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் ... Read more

காமராசர் – கதை அல்ல நிஜம்

ஒரு வகையில் 60 வயது கடந்தவர்களை பார்க்கும் போது பொறாமையாக இருக்கும். ஏன் என்றால் அவர்கள் எல்லாம் காமராசர் என்னும் மனிதம் நிரம்பிய மனிதரை முதலமைச்சராய் பெற்று இருந்தார்கள். இன்றைக்கு இருக்கும் என்னை போன்ற இளைஞர்கள் காமராசரை பற்றி படிக்கும், தெரிந்து கொள்ளும் ஒவ்வொரு விஷயமும் எதோ கதை போல தான் உள்ளது. என்ன செய்வது சூப்பர்மேன்களும், சூப்பர்ஸ்டார்களும் நிறைந்த உலகில் சாதாரணமான மக்கள் சேவை புரிபவர் எவரும் இல்லையே. இதை ஒரு தொடராக தொகுக்க இருக்கிறோம். தங்களுக்கு தெரிந்த நிகழ்வுகளை இங்கே பிரசுரிக்க publish@tamiltel.in என்ற மின்னஞ்சலில் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். காமராசர் வாழ்க்கை சரித்தரம் அல்ல இது, அவரை பற்றி எங்களுக்கு கிடைத்த தகவல்களை தொகுத்து தர இருக்கிறோம். எச்சரிக்கை : தயவு செய்து காமராசரை யாரும் இப்போது உள்ள அரசியல்வாதிகளுடன் ஒப்பிட்டு தங்கள் மனதை புண்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். #1 தந்தை ... Read more

எளிமைக்கு மறுபெயர் கக்கன் – இப்படி ஒருத்தர் இனி வர வாய்ப்பே இல்லை

1980-ம் ஆண்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு   அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம் செய்தியறிந்து கக்கனைபோய்ப் பார்த்தவர் அதிர்ந்து போனார்.  கக்கனைக் கண்டு கலங்கி நின்ற எம்.ஜி.ஆர். சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டபோது, ‘ வேண்டாம்” என்று மறுத்து விட்டார். ‘உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்ட எம்.ஜி.ஆரிடம், ‘நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி என்று கைகூப்பினார் கக்கன். புறப்படும் போது கக்கனின் கைகளைப் பிடித்துக் கொண்டு “என்ன உதவி வேண்டுமானாலும் தெரியப்படுத்துங்கள். செய்கிறேன்..” என்றார் எம்.ஜி.ஆர். அத்தோடு மருத்துவமனையின் பொறுப்பாளர்களை அழைத்து.. “இவர் யார் எனத் தெரியுமா? இவர் போன்றவர் பெற்றுத் தந்த சுதந்திரத்தில் தான் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவருக்கு தனி அறை வசதியும் உயர்ந்த மருத்துவமும் அளியுங்கள்.. என உத்தரவிட்டுச் சென்றார். பின்னர் சென்னை திரும்பியவுடன் முன்னாள் அமைச்சர்களுக்கு இலவச ... Read more

பச்ச மண்ணுய்யா அது… பாமக வேட்பாளர் வேட்புமனு நிராகரிப்பு

பாமக இந்த தேர்தலில் சின்னய்யா அன்புமணி அவர்களை முதல்வர் வேட்பாளராக்கி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி இடுவது அனைவரும் அறிந்ததே. வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு சனிக்கிழமை அன்று அதன் மீதான மீளாய்வும் முடிந்து உள்ளது. 9ஆம் வகுப்பு வரை படித்த வசந்த் என்னும் இளைஞர் சட்டமன்ற உறுப்பினர் ஆகி மக்கள் சேவை புரிய விழைந்துள்ளார். பாமகவும் அவரை திருச்சி துறையூர் தொகுதியை ஒதுக்கியது. மீளாய்வில் இவர் 23 வயது நிரம்பியவர் என தெரியவர குறைந்தபட்ச வயது பூர்த்தி ஆகாததால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதில் என்ன கொடுமை என்றால்  இவருக்கு டம்மி ஆக பாமக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தவர் வயது 22, ஆகா அவர் மனுவும் தள்ளுபடி ஆகி விட்டது. 25 வயது நிரம்பினால் தான் சட்டமன்ற தேர்தலில் நிற்க முடியும் என்பது வேட்பாளருக்கும் தெரியவில்லை, கட்சியும் கவனிக்கவில்லை. விளைவு பாமக இப்போது 233 தொகுதிகளில் போட்டியிட போகிறதா அல்லது அத்தொகுதியில் உள்ள ... Read more