Category: தொழில்நுட்பம்

என்ன பைக்குக்கு டிரைவரா? – பெங்களூரில் புதிய சேவை

கச்சேரி ஆரம்பம் படத்தில் வடிவேலு பைக்குக்கு டிரைவராக ஜீவா வேலைக்கு சேர்வது போல ஒரு காத்சி இருக்கும். அதை இப்ப நெசமாவே ஆக்கிட்டாங்க. ‘கால் – டாக்சி’ வெற்றியை அடுத்து, பன்னாட்டு நிறுவனங்களான உபேர் மற்றும் ஓலா , பெங்களூரில், சோதனை முறையில், ‘பைக் – டாக்சி’ சேவையை ஆரம்பித்துள்ளன. பெரும்பாலான நகரங்களில், போக்குவரத்து, பெரும் சவாலாகி வரும் நிலையில், வசதியான பயணத்திற்கு, ‘கால் – டாக்சிகள்’ உதவுகின்றன. பன்னாட்டு நிறுவனங்களான, உபேர், ஓலா போன்றவை, கட்டணங்களை பெருமளவு குறைத்து, மற்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி வருகின்றன. குறைவான செலவு : இந்நிலையில், போக்குவரத்து நெரிசலில் சிக்காமலும், குறைவான செலவில் செல்ல ஏதுவாகவும், பல நாடுகளில், ‘பைக் – டாக்சி’ சேவை உள்ளது. இந்தியாவிலும், முதன்முறையாக ஹரியானா மாநிலம் குர்கானில், ‘பைக் – டாக்சி’ சேவை அறிமுகமானது. இப்போது, கர்நாடக மாநிலம் பெங்களூரிலும் இந்த சேவை துவங்கப்பட்டுள்ளது. உபேர், ஓலா நிறுவனங்கள், ... Read more

ஃபேஸ்புக்கை தோற்கடித்தது கூகுள்…

இணையம் மூலம் உலகமே சுருங்கி விட்டாலும், பெரும்பாலான இணையப் பயன்பாட்டாளர்களின் நேரம் இந்த இரண்டு நிறுவனங்களின் தளங்களுக்குள் முடிவது மிக சாதரணமான ஒன்று தான். பொதுவாகவே நம்மில் பலரும் இணைய உலவியை (Browser) திறந்ததும் முதலில் GMail ஐயும் பின்னர் Facebook ஐயும் திறந்து விட்டு தான் மற்ற தளங்களை பற்றி யோசிப்போம். பல நேரங்களில் இந்த இரண்டே தளங்களின் ஊடே மொத்த நேரமும் முடிந்தும் விடும். கூகிள் ஃபேஸ்புக்கை தோற்கடித்து விட்டது என்ற செய்தியை படித்த நான்  எதில் என தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அந்த இணையப் பக்கத்தை திறந்தால், கொஞ்சம் வயிற்று எரிச்சலான செய்தியாகவே அது இருந்தது. பணியாளர்களை  திருப்திபடுத்துவதில் எந்த நிறுவனம் முதன்மை வகிக்கிறது என்ற ஆய்வில் தான் கூகிள் ஃபேஸ்புக்கை தோற்கடித்து முதலிடம் பிடித்து இருக்கிறது. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த இடத்தை ஃபேஸ்புக் தக்க வைத்து இருந்து இருக்கிறது. இம்முறையும் வெறும் இரண்டு ... Read more

புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்ளலாமா?

இணைய உலகில் கிட்டத்தட்ட எல்லோருக்கும் தெரிந்த, மிகப் பெரும்பான்மையானோர் தளத்தின் ஊடே இணைந்து பயன்படுத்தும் தளம் முகநூல். அதன் தோற்றம் பற்றி வெவ்வேறு கருத்துக்கள் இருக்கின்றன. மார்க் ஜூக்கர்பெர்க் தன் நண்பரை ஏமாற்றினார், மற்றவரது திறமையை திருடினார் என்று பல கதைகள் இருக்கின்றன அதில் சில கதைகள் நிஜமாகவும் இருக்கலாம். ஆனால் முகநூலின் வளர்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்ட இருவர் மைக்ரோசாஃப்ட் மற்றும் கூகிள் தாத்தா. அதிலும் குறிப்பாக இணைய உலகையே தன் கைக்குள் அடக்கி ஆள நினைத்த கூகிள் முகநூலின் வருகைக்கு பின் பெரிய அளவில் வளர்ச்சி அடைய முடியாமல் தவித்து வருகிறது. இன்றைக்கு இணையத்தின் எந்த பக்கத்தை திறந்தாலும் அது ஏதோ ஓர் வகையில் முகநூலுடன் இணைந்து இருக்கிறது. இப்படியே போனால் மைக்ரோசாப்ட்டை நம்ம காலி பண்ணின மாதிரி முகநூல்காரன் நம்மள காலி பண்ணிடுவானோ என்ற எண்ணம் கூகிள் தாத்தாவிற்கு தோன்றவே அச்சு பிறழாமல் முகநூலை பிரதி எடுத்து அதில் ... Read more

24/5 – ஒரு நாள் ஒரு ஃபோல்டர் : இலவச மென் பொருள்கள்

  • Categories: இணையம், கணினி, மென்பொருள்
பல படங்களை ஒருங்கிணைத்து GIF அனிமேஷன் ஒன்றை உருவாக்கும் மென்பொருள் ஒன்றை தேடும் போது இந்த தளம் கிடைத்தது. இந்த இணைய கோப்புறையில் நிறைய மென்பொருள்கள் சீராக வரிசைபடுத்தப்பட்டு கிடைக்கின்றன. மென்பொருள்கள் பெரும்பாலும் இலவசமாக உபயோகிக்கக் கூடியவை. சில அப்படியானதல்ல, அவர்களே சில கோப்புகளை இணைத்து இலவசமாக்கி வைத்து இருக்கிறார்கள். இவ்விணைப்பை சொடுக்கி உள்நுழைக, மென்பொருள்கள்  JPG to GIF  

பிளாக்கர் சிதைக்கப்பட்டதா?

பதிவர்கள் அனைவரும் இன்று பிளாக்கர் தளம் மீது கடுப்பாகி இருப்பார்கள். இருக்காதா பின்ன? சும்மா எதைப் பற்றியாவது பதிவு எழுதும் நமக்கு, தமிழின துரோகிகள் அடைந்த தோல்வி குறித்து மணிக்கொருமுறை பதிவு எழுதலாம் என்று ப்ளாக்கரை திறந்தாள், தற்காலிகமாக பிளாக்கர் செயல்படாது என்று வருகின்றதே ஒழிய, டாஷ்போர்டை காணவில்லை. அப்படி என்ன நடந்தது பிளாக்கருக்கு ? மே 9 ந் தேதி முதலே அடிக்கடி இந்த பிரச்னை உருவெடுத்து இருக்கிறது. சமீப காலங்களில் கொஞ்சம் பெரிய இணையதளங்களை மிதப் படித்த மென்பொருள் வல்லுநர் கூட்டம், சிதைத்து(Hacking) வேடிக்கை பார்த்து வருகிறது. அப்படி ஒரு சூழலில் பிளாக்கர் மாட்டி இருப்பதற்கான தடயங்கள் அதிகமாகவே தெரிகின்றன. கூகிள் ஒன்றும் இந்த மாதிரியான சிதைவுகளை பற்றி அறியாதவர்கள் அல்ல, அதனால் அவர்கள் எப்போதுமே (~ இரு தினங்களுக்கு ஒருமுறை) தங்கள் தளங்களை வன்தட்டுகளில்  பிரதி எடுத்து வைப்பார்கள். ஒரு வேளை, சிதைவாளர்கள் தங்கள் கைவரிசையை பிளாக்கர் ... Read more

பிளாக்கர் ஐகானை மாற்றுவது எப்படி?

உங்கள் ப்ளாக்கினை திறக்கும் போது எப்போதும் கீழ்காணும் ஐகானை மட்டும் காண்கிறீர்கள் என்றால், அதனை மாற்றி உங்கள் விருப்பத்திற்கு வைத்து கொள்ளுதல் மிகவும் எளிது. முதலில் உங்கள் பிளாக்கர் டாஷ்போர்டை திறந்து, டிசைன் மெனுவில் செல்லவும். Edit HTML என்பதினுள் நுழையவும். பின்னர், 1 ) என்பதை தேடவும். 2 ) அதற்கு முன்னர் கீழ்க்காணுமாறு இரண்டு வரிகளை Paste செய்யவும். இப்போது இம்மாதிரி வரிகள் தோற்றமளிக்கும்.

இங்கு http://s1.postimage.org/126wc235w/favicon.gif என்ற முகவரிக்கு பதில் தங்கள் படத்தின் முகவரியை உள்ளீடு செய்யவும். இந்த படம் 32*32 அளவில் இருக்க வேண்டும் என்பதை நினைவிற் கொள்க. ஐயங்கள் இருப்பின் பின்னூட்டப்படுத்துக.. மறவாமல் வாக்களித்து பலரிடமும் பதிவை சேர்த்திடுங்கள் 

21/04 – ஸ்வீட்டர் ட்வீட்டர்

1) twitter.com/rsekar007 லோக்பால் மசோதாவுக்கு ஆதரவு : சோனியா பதில் # இது திருடனே போலீசுக்கு ஆதரவு மாதிரி இருக்கு… #TNfisherman #Defeatcongress 2) twitter.com/minimeens  பஞ்ச பாண்டவர் அஞ்சு பேரு. பாஞ்சாலிக்கு பிரச்னையே இல்ல. கண்ணகி மாதவி ரெண்டு பேரு. கோவலன் செத்தே போனான்..! #நீதிக்கதைகள்  3) twitter.com/g_for_guru சொத்துக்களை ரம்லத்துக்கு எழுதிக் கொடுத்தார் பிரபுதேவா!#சொத்த வித்து செகண்ட் ஹான்ட் வண்டி வாங்குன முத கூமுட்ட நீதான்ய்யா!!! 4) twitter.com/kolaaru  ஜெயலலிதா மீது கருணாநிதி 2 அவதூறு வழக்குகள் # பரவாயில்லையே இப்ப இருந்தே எதிர்கட்சியா செயல்பட ஆரம்பிச்சுடீங்க .. வாழ்த்துகள் !! 5) twitter.com/Nila_Here ‘நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை’ இருக்கனும்னு நெனைச்சாலும் இன்னும் தலை குனிந்து தான் நடக்க வேண்டியது இருக்கு # ரோடு லட்சணம் அப்படி 6) twitter.com/iamkarki  தோழியுட‌ன் இனி செஸ் விளையாட‌ கூடாது. நான் தானே உன‌க்கு ரானி? எதுக்கு இன்னொரு ராணியென‌ ... Read more

வேற்று கிரகவாசியா? வெற்று புரளியா?

  • Categories: அறிவியல், கல்வி
இதற்கு முன்னர் நிறைய முறைகள் வேற்றுகிரகவாசிகள் பற்றி படித்தும், திரைப்படங்களில் பார்த்தும் விட்டாயிற்று. அதனால் இம்முறை பெரிதாக எதுவும் இந்த செய்தியின் பால் நம் கவனம் வருவதில்லை. முதலில் இந்த படத்தை பாருங்கள்.    இந்த படத்தை பார்த்ததுமே எனக்கு அமரர் சுஜாதாவின் ஞாபகம் தான் வந்தது. அவர் ஒரு முறை சொல்லி இருப்பார் அதென்ன கிடைக்கிற எல்லா ஏலியன்களுமே இரண்டு கால்,இரண்டு கை,மூக்கு,வாய்,கழுத்து என எல்லாமே மனிதனை ஒத்தே இருக்கிறது, வேற்று கிரகம் தானே வேறு மாதிரி உடலமைப்புகள் இருக்கக் கூடாதா என்று கேட்டிருப்பார். இதிலும் பாருங்கள் உருவம் ஏதோ வித்தியாசமாக இருந்தாலும் மற்றபடி மனித உருவ அமைப்பு வரும்படி இருக்கின்றது. மனிதன் தான் படைக்கும் கற்பனைகள் கூட தன்னை வெல்லக் கூடாது என்பதில் எப்போதும் உறுதியாக இருப்பான். ஐயோ.. ஒருவேளை இதெல்லாம் உண்மையாக இருந்து தொலைத்து விடப்போகிறது, அப்புறம் விசா எதுவும் இல்லாமல் வீடு தேடி வந்து உதைக்க ... Read more

ஃபோல்டர் கட்டமைப்பை மட்டும் பிரதி எடுக்க உதவும் மென்பொருள்

நாம் பல வேளைகளிலும் ஒரு குறிப்பிட்ட ஃபோல்டரினுள் உள்ள மற்ற ஃபோல்டர்களின் பெயர்களை மட்டும் பிரதி எடுக்க விழைவோம். உதாரணமாக நம்மிடம் Music என்று ஒரு ஃபோல்டர் இருக்கிறது, அதனுள் இருக்கும் ஃபைல்களை விடுத்து A.R.Rahman,Iaiyaraja,SPB என்னும் மற்ற ஃபோல்டர்களின் கட்டமைப்பை மட்டும் பிரதி எடுத்துக் கொள்ள விரும்புவோம். ஆனால் அதற்கு மீண்டும் புதிதாக ஒவ்வொரு ஃபோல்டராக உருவாக்க வேண்டியிருக்கும். ஆனால் இந்த மென்பொருளைக் கொண்டு ஃபோல்டர் கட்டமைப்பை மட்டும் பிரதி எடுக்கலாம். இதனை நிறுவ வேண்டிய அவசியம் ஏதுமில்லை.(Portable Software) தரவிறக்கம் செய்ய சொடுக்கவும்…   TreeCopy 1.இடது புறம் பிரதி எடுக்கப் பட வேண்டிய ஃபோல்டரை தெரிந்தெடுக்கவும். 2.வலது புறம் பிரதி சேர வேண்டிய ஃபோல்டரை தெரிந்தெடுக்கவும். 3.GO வை சொடுக்கி, உங்கள் ஆணையை நிறைவேற்றலாம். பதிவு பிடித்தால் ஓட்டு போடுங்கள்..! 

அடத் தலை வலியே..!

விண்வெளி வீரர்கள் தலைவலியில் இருந்து தப்புவது அவ்வளவு சுலபம் இல்லை. ஏனெனில் பாராசிட்டமால் போன்ற நோய் எதிர்ப்பு மாத்திரைகள் பலவும் விண்வெளியில் செயலற்று போவதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. விஞ்ஞானிகள் நோய் எதிர்ப்பு மருந்துகள் விண்வெளியில் மிக விரைவிலேயே தங்கள் வீரியத்தை இழக்கின்றன என்று நிரூபித்துள்ளனர். நாசாவின் ஜான்சன் ஆய்வு மையம் தனது ஆராய்ச்சியின் முடிவில் விண்வெளியின் குறைந்த ஈர்ப்பு திறன், அதிக கதிர்வீச்சு தான் இதற்கு காரணங்கள் என பட்டியல் போட்டுள்ளது. நாம் வாங்கும் சாதாரண மருந்துகள் அனைத்தும் ஒரு சில மாதங்களாவது திறன் இருக்கும் வகையிலேயே தயாரிக்கப்படுகின்றன. இருந்த போதிலும் நாம் அம்மருந்துகளை தகுந்த சூழ்நிலைகளில் வைத்து பாதுகாத்தால் மட்டுமே அவை குறிப்பட்ட காலம் வரை செயல் புரியும். நேரடி சூரிய வெளிச்சம், மிக குளிர்ந்த இடம், சூடான இடம் என பல காரணிகளும் அதன் செயல் திறன் மாறுபாட்டை நிர்ணயம் செய்கின்றன. நீண்ட நாட்களுக்கு பயணம் செய்யும் ... Read more