Category: கவிக்கியம்
காதல்
கண்டதும் காதல் எப்படி என நினைத்திருந்தேன் உனது விழியை நேரில் காணும் வரையில்காதலின் எல்லை
காதலில், நீ மட்டும் இன்பத்தின் எல்லை கொஞ்சம் நரகம்,கொஞ்சம் சொர்க்கம் இரண்டையும் தோன்ற வைக்கிறாய் போதும் போதும் என்ற அளவிற்கு என்னை முழுவதும் ஆட்கொள்கிறாய் இனி காதலே வேண்டாம் என்று தோன்ற வைக்கும் வலியையும் தருகிறாய்,பார்வை ஒன்றே போதுமே
உன் பார்வை ஒன்றே போதுமடா நீ பார்த்தால் பாறையிலும் பால் சுரக்கும் பாலைவனத்திலும் பூ பூக்கும் காதலே பிடிக்காத எனக்குள்ளும் காதல் மலரும்.நாணம்
பூக்களும் நாணத்தில் தலைகுனியுமடி,அதைவிட அழகான உன் கண்களை கண்டுஎன் காதல்
என் காதலை சுருக்கமாக ஓரிரு வரிகளில் சொல்ல எனக்கு தெரியவில்லை, எத்தனை பக்கம் எழுதினாலும்உனக்கு புரியவில்லை. காத்திருப்பேன் என் வாழ்நாள் முழுவதும், என் காதல் உனக்கு புரியும் வரை…யுகம் யுகமாய்
என் ஒவ்வொரு மூச்சும் என் உயிர் நீதான் என்கிறது, உன்னுடன் நானிருக்கும் இந்த பொழுது இப்படியே நின்று விட கூடாதா யுகம் யுகமாய் உன்னோடு வாழ நினைக்கிறேன் உன்னோடிருந்தால் துன்பமும் இன்பமாகும் வலையில் விழுந்த மீன் போலானேன், உன்னிலிருந்து மீள வழியில்லாமல்..உதடு
நீ உதடு கடித்தால் பல்லிடுக்கில் சிக்கிக்கொண்டு, தவிக்கிறது என் இதயம்தலையணை
என் தலையணை மட்டுமே அறியும் , உனக்கும்தெரியாத கண்ணீர் துளிகளை, வாழும்வரை உன்னோடு இருக்க ஆசை இல்லை, உன்னோடு இருக்கும் வரை வாழ்ந்தால் போதும்.ஸ்பரிசம்
அவன் ஸ்பரிசம் என்னை தீண்டும்பொழுதேல்லாம், எண்ணிலடங்கா பூக்களின் மணம்.ஒரு நிமிடம்
உன்னோடு பேச ஒரு நிமிடம் கிடைத்தால் போதும், கண்ணோடு இருக்கும் கண்ணீர் மட்டுமல்ல, என்னோடு இருக்கும் கவலைகளும் மறைந்து போகும்……
Next »