Category: திமுக
யாருக்கு என் ஆதரவு – மு க அழகிரி பதில்
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று மு.க. அழகிரி கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறும் போது வரும் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை. இது என்னுடைய ஆதரவாளர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார்.அத நிப்பாட்டுங்க – தேர்தல் ஆணையத்திடம் அதிமுக கோரிக்கை
அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகளை விமர்சித்து தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும், ‘சொன்னீங்களே… செஞ்சீங்களா?’ என்ற விளம்பரத்தை ஒளிபரப்பத் தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க. மனு அளித்துள்ளது. கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை, பதவியில் உள்ள அ.தி.மு.க. அரசு செய்யவில்லை என குறிப்பிட்டு, தனியார் தொலைக்காட்சிகளில் விதவிதமான விளம்பரங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, இலவச நிலம் போன்ற வாக்குறுதிகளை அளித்துவிட்டு ஆட்சிக்கு வந்ததும் அதையெல்லாம் அ.தி.மு.க. நிறைவேற்றவில்லை என்ற கோணத்தில் அந்த விளம்பரங்களை தி.மு.க. தயாரித்து, தனது தேர்தல் பிரசார விளம்பரமாக ஒளிபரப்பி வருகிறது. இந்த விளம்பரங்களில், முதல்வர் ஜெயலலிதாவே அந்த வாக்குறுதிகளைக் கூறுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், இந்த விளம்பரங்களை ஒளிபரப்பத் தடை விதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது. அந்த மனுவில், ”இந்த விளம்பரங்கள் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் ... Read more65 வயதில் காமராஜர் முதியவர், 94 வயதில் நீங்கள் – கருணாநிதியை சீண்டும் சீமான்
பெருந்தலைவரிடம் 65 வயதில் முதலமைச்சர் பதவி வேண்டுமா என்று கேட்டீர்களே, அவருடைய பேரன் கேட்கிறேன், 94 வயதில் உங்களுக்குத் முதலமைச்சர் பதவி தேவையா என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.திருவாரூரில் நேற்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கினைப்பளார் சீமான் பேசுகையில், “கடந்த ஐந்தாண்டுகளில் கருணாநிதி ஒருமுறையாவது சட்டப்பேரவைக்கு போனாரா? 94 வயதில் முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படுகிறார். நடக்க முடியலை, உட்கார முடியலை, பத்து பேர் பராமரிக்க தேவைப்படுகிறார்கள். எப்படி ஆட்சி செய்யப் போகிறார். வெளிநாட்டுக்காரன் கேட்பான் “That old man is the chief minister of Tamilnadu?”. உங்க வீட்டுல ஒரு தாத்த இருந்தா என்ன பண்ணுவீங்க? நாட்டுல ஒரு தாத்தா இருந்தால் முதலமைச்சர் பதவியா கொடுப்பீங்க. 65 வயதான பெருந்தலைவர் காமராஜரைக் கேட்கிறார் இந்த வயதில் உங்களுக்கு முதலமைச்சர் நாற்காலி வேண்டுமா என்று? அதற்கு காமராஜர் ... Read moreயார் யார் எங்கே தொகுதி நிலவரம்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ் பென்னாகரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் திமுகவின் தலைவர் கருணாநிதி ஆகியோர் போட்டியிடும் தொகுதிகள் முன்னரே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விஜயகாந்தும் அன்புமணியும் எங்கு போட்டியிடுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு வலுத்துவந்தது. திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் அவரை எதிர்த்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாசிலாமணி போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. மக்கள் நலக் கூட்டணியில் அந்தக் கட்சிக்கு 25 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனினும், அக்கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன், மூத்த தலைவர்களான ஆர்.நல்லக்கண்ணு மற்றும் தா.பாண்டியன் ஆகியோர் இத்தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கட்சி கூறியுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் சென்னை ஆர்.கே.நகர் ... Read moreஜெ. எந்த ஊருக்கு வருவாரோ என மக்கள் திகில்: கனிமொழி
முதல்வர் ஜெயலலிதா எந்த ஊருக்கு வருவாரோ என்ற பயத்தில் மக்கள் இருப்பதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். திமுக எம்.பி. கனிமொழி சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், வெயில் கொளுத்துவதால் மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் ஜெயலலிதாவின் கூட்டத்திற்காக அதிமுகவினரோ பொதுமக்களை மணிக் கணக்கில் வெயிலில் காக்க வைத்து வதைக்கிறார்கள். ஜெயலலிதாவின் கூட்டத்திற்கு வந்த இரண்டு பேர் வெயில் தாங்க முடியாமல் பலியாகியுள்ளனர். ஏன் அவரின் கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்க வந்த காவலர்களே வெயிலை தாங்க முடியாமல் மயங்கி விழுந்துள்ளனர். ஜெயலலிதா மட்டும் ஏசியில் அமர்ந்து சொகுசாக பேசுகிறார். எந்த ஊருக்கு ஜெயலலிதா வருவாரோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர். திமுக தலைவர்களோ மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று அவர்களை சந்திக்கிறார்கள் என்றார்.திமுக வேட்பாளர் பட்டியல் முழு விபரம்
தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. கட்சியின் தலைவர் கருணாநிதி திருவாரூரிலும், மு.க.ஸ்டாலின் கொளத்தூரிலும் மீண்டும் போட்டியிடுகின்றனர். தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மொத்தம் 8 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் தி.மு.க. 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. வேட்பாளர் நேர்காணல் நடத்தி தி.மு.க. முத்த தலைவர்கள் கடந்த வாரமே தேர்வு செய்து பட்டியலை தயார் செய்தனர். இந்நிலையில் தி.மு.க வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைவர் கருணாநிதி இன்று மாலை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:- திருவாரூர் – கருணாநிதி கொளத்தூர் – மு.க.ஸ்டாலின் பொன்னேரி (தனி) – டாக்டர் கே.பரிமளம் திருவள்ளூர் – வி.ஜி.ராஜேந்திரன் பூந்தமல்லி – இ.பரந்தாமன் ஆவடி – சா.மு.நாசர் மாதவரம் – மாதவரம் எஸ். சுதர்சனம் திருவொற்றியூர் – கே.பி.பி.சாமி ராதாகிருஷ்ணன் நகர் – சிம்லா முத்துசோழன் வில்லிவாக்கம் – ப.ரங்கநாதன் திரு.வி.க.நகர் – தாயகம் கவி (எ) சிவக்குமார் எழும்பூர் (தனி) ... Read moreதிமுக தேர்தல் அறிக்கை – என்ன என்ன இலவசம்?
வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார். 72 பக்கங்களை உள்ளடக்கிய இது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையிலும் தயாரிக்கப் பட்டு உள்ளது. சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 6 மணியளவில் தொடங்கிய நிகழ்ச்சியில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உரையாற்றி வருகிறார் திமுக தலைவர் கருணாநிதி. தேர்தல் அறிக்கை விவரம்: 1. நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆய்வு மையம் உருவாக்கப்படும் 2. டாஸ்மாக் நிறுவனம் கலைகப்பட்டு அதில் பணியாற்றுவோருக்கு மாற்றுப்பணி வழங்கப்படும். 3. மது அடிமைகளுக்கு சிறப்பு சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும். 4. விவசாயிகளுக்கு கடன்கள் முழுக்க தள்ளுபடி 5. மகளிருக்கு 9 மாதகால காலம் பேறுகால விடுமுறை அளிக்கப்படும் 6. மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு திட்டம் கொண்டுவரப்படும் 7. அனைத்து விவசாயிகளுக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் 8. வெள்ள சேதங்களை தடுக்க 5 ஆயிரம் கோடியில் திட்டம் 9. ... Read moreதேமுதிக உட்கட்சி பிரச்னை – ஸ்டாலின் கருத்து
மக்கள் நலக் கூட்டணியில் இணைந்ததை எதிர்த்து தேமுதிக எம்எல்ஏக்கள் சிலரும், மாவட்ட நிர்வாகிகளும் விஜயகாந்துக்கு எதிராக நேற்று போர்க்கொடி உயர்த்தினர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில், அதிரடியாக விஜயகாந்த் அவர்களை கட்சியில் இருந்தே நீக்கி உத்தரவிட்டு அனைவரையும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியில் ஆழ்த்தினார். போர்க்கொடி தூக்கியவர்களை விட, அவர்களுக்குப் பின்னால் இருந்து இயக்குவதாகக் கூறி திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினை தான் திட்டித் தீர்த்தனர் மக்கள் நலக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள். ஆனால், இதற்கு பதிலளித்துள்ள மு.க. ஸ்டாலின், தேமுதிகவில் தற்போது ஏற்பட்டிருக்கும் சலசலப்பு உள்கட்சி விவகாரம்தான்.இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, தேமுதிகவினரை பணம் கொடுத்து திமுகவுக்கு அழைப்பதாகக் கூறுவது அபாண்டம் என்று கூறுகிறார். தேமுதிகவை யாரும் கரைக்க வேண்டாம், அது தானாகக் கரையும் என்று ஏற்கனவே ஆரூடம் கூறியிருந்தார் ஸ்டாலின், அதே போல தற்போது நடந்திருப்பது பழம் நழுவி பாலில் விழுந்த கதையா அல்லது தான் செய்த வேலைக்கு ... Read more
Next »