Category: அதிமுக

சேலத்தில் நாளை மதியம் முதல்வர் ஜெயலலிதா பிரசாரம்

அதிமுகவின் 6-வது தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் சேலத்தில் நாளை (புதன்கிழமை) மதியம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம் தெற்கு, சேலம் வடக்கு, சேலம் மேற்கு, ஓமலூர், வீரபாண்டி, இடைப்பாடி, சங்ககிரி, மேட்டூர், ஏற்காடு (தனி), ஆத்தூர் (தனி), கெங்கவல்லி (தனி) ஆகிய 11 தொகுதிகளின் வேட்பாளர்களையும், நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி), பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளின் வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தி முதல்வர் ஜெயலலிதா பேசுகிறார். பிரசாரக் கூட்டம் நடைபெறும் சங்ககிரி வட்டம், மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட, காளிகவுண்டம்பாளையம் ஊராட்சி முத்துமாரி தோட்டம் பகுதியில் 24 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தை அமைச்சர்கள் எடப்பாடி கே.பழனிசாமி, பி.தங்கமணி ஆகியோர் பார்வையிட்டனர். ஹெலிகாப்டர் இறங்குதளம், பொதுக்கூட்ட மேடை, பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் அமரும் வகையில் இடவசதி உள்ளதா என்று பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர். பொதுக்கூட்டம் நடைபெறும் மேடை முதல் ஹெலிபேடு வரை ... Read more

ஒரே கையெழுத்தில் பூரண மது விலக்கு அமல் படுத்த முடியாது ;ஜெயலலிதா

காஞ்சிபுரம்: திமுக தலைவர் கருணாநிதி தம் மக்கள், தன் குடும்ப நலன் என்றுதான் நினைப்பார். அவருக்கு தமிழக மக்களின் மீது அக்கறையில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். 2006ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த பல வாக்குறுதிகளையே 2016ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். காஞ்சிபுரம் அருகே வாரணாசி ஊராட்சியில் இன்று அதிமுக பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு முதல்வர் ஜெயலலிதா பேசினார். காஞ்சிபுரம், திருவள்ளுர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு உட்பட்ட 18 அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்த ஜெயலலிதா, திமுகவையும், 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையையும், 2016ம் ஆண்டு திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையும் ஒப்பிட்டு பேசி பதிலடி கொடுத்தார் ஜெயலலிதா. இதற்கு முந்தைய கூட்டத்தில் பேசாத பல விசயங்களை பேசிய ஜெயலலிதா தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். ஜெயலலிதாவின் பிரச்சார உரை…. ... Read more

ஜெ. எந்த ஊருக்கு வருவாரோ என மக்கள் திகில்: கனிமொழி

முதல்வர் ஜெயலலிதா எந்த ஊருக்கு வருவாரோ என்ற பயத்தில் மக்கள் இருப்பதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். திமுக எம்.பி. கனிமொழி சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், வெயில் கொளுத்துவதால் மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் ஜெயலலிதாவின் கூட்டத்திற்காக அதிமுகவினரோ பொதுமக்களை மணிக் கணக்கில் வெயிலில் காக்க வைத்து வதைக்கிறார்கள். ஜெயலலிதாவின் கூட்டத்திற்கு வந்த இரண்டு பேர் வெயில் தாங்க முடியாமல் பலியாகியுள்ளனர். ஏன் அவரின் கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்க வந்த காவலர்களே வெயிலை தாங்க முடியாமல் மயங்கி விழுந்துள்ளனர். ஜெயலலிதா மட்டும் ஏசியில் அமர்ந்து சொகுசாக பேசுகிறார். எந்த ஊருக்கு ஜெயலலிதா வருவாரோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர். திமுக தலைவர்களோ மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று அவர்களை சந்திக்கிறார்கள் என்றார்.

கொலைகாரி ஜெயலலிதா – வைகோ ஆவேசம்

சென்னையில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முதல்வர் ஜெயலலிதாவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. துறைமுகம் தொகுதியில் முராத் புஹாரி மதிமுக சார்பில் போட்டியிடுகிறார். இவர் பிரபல புஹாரி ஹோட்டல் குடும்பத்தைச் சேரந்தவர். கடந்த பல ஆண்டுகளாக மதிமுகவில் சிறுபான்மை அணியின் செயலாளராக இருப்பவர். இவரை அறிமுகம் செய்து வைத்து வைகோ பேசுகையில் வழக்கம் போல முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசினார். அவர் பேசுகையில், விருதாச்சலம் அதிமுக பிரச்சார கூட்டத்தில் நான்கு பேர் பலியானதற்கு ஜெயலலிதாதான் பொறுப்பு ஏற்க வேண்டும். இது என்ன இடி அமீன் சர்க்காரா? லேடி இடி – அமீனா ஜெயலலிதா? இது என்ன ஹிட்லர் சர்க்காரா? லேடி ஹிட்லரா ஜெயலலிதா? இது என்ன முசோலினி சர்க்காரா? லேடி முசோலினியா ஜெயலலிதா? இந்த நாலு பேர் சாவுக்கு நீங்கதான் காரணம். உங்களை ... Read more

நேரலை: ஜெயலலிதா அருப்புக்கோட்டையில் பிரச்சாரம்

சென்னை, விருத்தாச்சலம், தருமபுரியில் பிரச்சாரத்தை முடித்துள்ள ஜெயலலிதா அருப்புக்கோட்டையில் பிரச்சாரம் செய்வதை இங்கே நேரலையாகக் காணுங்கள்: