Category: சினிமா
கபாலி டீசர் – பார்த்தவங்க என்ன சொல்றாங்க
ரஜினிகாந்த் நடிப்பில், பழைமையாய் (புதுமையாய் பார்த்து புளித்து விட்டதால், பழைய ரஜினியை கொண்டு வருகிறார்கள்) உருவாகி உள்ள படம் கபாலி. படத்தின் டீசர் உலக அளவில் டிரண்டு ஆகி விட்டதில் படக்குழு மகிழ்ச்சி. எண்பது இலட்சத்திற்கும் மேலான தடவை இதுவரை பார்க்கப்பட்ட இந்த டீசரை பற்றி பிரபலங்கள் என்ன சொல்றாங்கனு பார்ப்போம். ராதிகா ஆப்தே (கபாலி நாயகி) : சிறந்த மனிதர்… ரஜினிகாந்த்… சிறந்த டீசர்.. கபாலி… எஸ்.எஸ்.ராஜமௌலி : இதுதான் ஸ்டைல், இதுதான் ரஜினி, இதுதான் தலைவா… ராம் கோபால் வர்மா : ரஜினிகாந்த் ஏன் ரஜினிகாந்த் ஆக இருக்கிறார் என்பதற்குக் காரணமிருக்கிறது. ரஜினி சாரைத் தவிர வேறு எந்த சூப்பர் ஸ்டாரும் திரையில் இப்படி ஒரு அதிர்வை ஏற்படுத்த முடியாது. முதல்நாளில் இந்தப் படத்தை நான்கு முறை பார்க்க விரும்புகிறேன். கபாலி, பாகுபலிக்குப் பிதா போல இருக்கிறார், ஒரே ஒரு ரஜினிகாந்த் மட்டுமே. தனுஷ் : நெருப்புடா… ... Read moreகபாலி டீசர் – அசத்தல் ரஜினிகாந்த்
கபாலி திரைப்படத்தின் அதிகார பூர்வ டீசர் வெளியான 7மணி நேரத்தில் 20 லட்சம் பேர் ரசித்துள்ளனர். கபாலின்னு சொன்னதும் பழைய நம்பியார் படத்தில் வரும் லுங்கி கட்டினவன்னு நெனச்சியாடா கபாலி டா….. அக்மார்க் ரஜினி டச்… ரஜினியை ரஹ்மான் இசையில் பார்த்து பழகிய நமக்கு சந்தோஷ் நாராயணன் இசை ரசிக்க வைத்து உள்ளது.அரசியல் என்பது செருப்பை போன்றது – கமல்
தேர்தல் ஆணையம் அனைவரும் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என கூறி வரும் நிலையில் தமிழகத்தின் முன்னணி நடிகர் கமல், வாய்ப்பிருந்தால் வாக்குப் பதிவு செய்வேன் என கூறியுள்ளார். ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் படம் சபாஷ் நாயுடு. கமல் நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் எடுக்கப்படுகிறது. இப்படத்தின் தொடக்க விழா சென்னை தியாகராயர் நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது வாக்கை யாராவது போட்டு விடுவார்கள். ஏற்கெனவே எனக்கு வாக்கு இல்லை என்று சொல்லி விட்டார்கள். இப்போது ஊரில் வேறு இல்லை. வாய்ப்பிருந்தால் வாக்களிப்பேன் என்றார். தமிழகத்தில் மே மாதம் 16 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் தேர்தலில், வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. ... Read moreமனிதன்–2016 விமர்சனம்
உதயநிதி ஸ்டாலின் – ஹன்சிகா நடிப்பில், ‘என்றென்றும் புன்னகை’ அஹமத் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் மனிதன். உதயநிதி – ஹன்சிகா இரண்டாம் முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். படத்தின் ட்ரெய்லர் நிச்சயம் மற்ற படங்களில் இருந்து இப்படம் உதயநிதியை தனித்து காட்டும் என நம்பி படம் பார்க்க சென்றோம். கதை: பெரிய வக்கீலாகி சாதிச்ச பிறகுதான் சொந்த ஊருக்குப் போக வேண்டும் என்ற லட்சியத்துடன் சென்னை வருகிறார் உதயநிதி. தன்னை நிரூபிக்க ஒரு பொதுநல வழக்கு தொடர்கிறார். அந்த வழக்கு என்ன? யார் அதில் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள்? அந்த வழக்கைத் தொடர்ந்ததால் உதயநிதி சந்திக்கும் மோதல்கள், இழப்புகள் என்ன? இறுதியில் லட்சியத்தை அடைந்தாரா? என்பது மீதிக் கதை. உதயநிதி சாதாரண வக்கீல் கதாபாத்திரத்துக்கு சரியாகப் பொருந்துகிறார். கோபப்படுவது, கலவரம் ஆவது, குழம்புவது, வருத்தப்படுவது என்று எல்லாவற்றுகும் ஒரே மாதிரி ரியாக்ஷன் கொடுக்கிறார். அதை மட்டுமாவது இனிமேல் கவனிங்க உதய். மற்றபடி ஸ்லோமோஷனில் பேசும் போதும், ... Read moreதெறி-ஒரு மில்லியனுக்கும் மேல் வசூலில் சாதனை
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த திரைப்படம் தெறி.வெளியான ஆறே நாட்களில் 100 கோடியை வசூலித்தது. நடிகர் விஜயின் ட்விட்டர் பக்கத்தில் …விஜயின் துப்பாக்கி மற்றும் கத்தி படம் வெளிநாடுகளில் 100 கோடி வசூலித்தது,தெறி இந்த வரிசையில் மூன்றாவது படம் எனவும்,இயக்குனர் அட்லி ,ஜி.வி.பிரகாஷ் மற்றும் விஜயின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு சுவரொட்டி பகிர்வு செய்யப்பட்டுள்ளது , அதில் தெறி திரைப்படம் வட அமெரிக்கா மற்றும் கனடாவிலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமாக வசூலில் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய் ரசிகர்களுக்கு மற்றுமோர் இன்பச்செய்தி; விஜயா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பரதன் இயக்கத்தில் மே 2-ம் தேதி விஜயின் புதிய படம் தொடங்குகிறது.இதில் கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்திலும்,ஜகபத் பாபு,டேனியல் பாலாஜி,சதீஷ் போன்றோர் நடிக்க வுள்ளனர்.இன்னும் படத்திற்கு பெயர் வைக்கப்படவில்லை.வெற்றிவேல் -திரை விமர்சனம்
ஒரு தயாரிப்பாளராக சசிகுமார் பார்முலாவை பின்பற்றுகிறாரோ இல்லையோ,ஒரு நடிகனாக தன்னுடைய கதாபாத்திரத்தில் அவர் எப்போதும் குறை வைத்ததில்லை. கிராமத்து கதைக்களத்துடன் ,பாசம்,காதல்,குடும்பம்,என கிராமத்து மண்வாசனையையும் இணைத்திருக்கிறார்,இயக்குனர் வசந்தமணி.விவசாயத்துறை அதிகாரியாக வரும் மியா ஜார்ஜுக்கும்,உரக்கடை நடத்தி வரும் சசிகுமாருக்கும் காதல் மலர்கிறது. ஊர் பஞ்சாயத்து தலைவரான பிரபுவின் மகளை சசிகுமார் தம்பி காதலிக்க,தம்பியின் காதலுக்கு உதவ,பெண்ணை கடத்த ஒரு திட்டத்துடன் நாடோடிகள் கும்பலை கதை களத்தில் இறக்குகிறார்கள்.அனால் கடத்தவேண்டிய பெண் மாறிப்போய்,சசிகுமார் அந்த பெண்ணை திருமணம் செய்ய நேர்கிறது.இதனையடுத்து மியா ஜார்ஜுக்கும் சசிகுமருக்கும் இடையேயான காதல் என்னானது என்பதுதான் கதை. பிரபுவின் நடிப்பு படத்திற்கு சிறப்பு,தம்பி ராமையா காமெடியில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்.சசிகுமாருக்கு அவருக்கே உரித்தான வசனங்கள் இடம்பெற்று படத்திற்கு உயிரூட்டியுள்ளது.நாயகி மியா ஜார்ஜ் நடிப்பிலும்,அழகிலும் அசத்தியிருக்கிறார். வசனங்கள் படத்தின் கூடுதல் பலம்.குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய திரைப்படம்,வெற்றிவேல் ….,வெற்றிகரமான வேல்.சிம்புவுக்கு ராதிகா சரத்குமாரின் வேண்டுகோள்;
நடிகர் ராதிகா சரத்குமார் ,நடிகர் சிம்புவிடம் நடிகர் சங்கத்தை விட்டு விலகும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் சிம்பு சங்கத்தை விட்டு விலகுவதாகவும்,அவர் (பீப் பாடல்)சர்ச்சையில் சிக்கியபோது கூட நடிகர் சங்கம் உதவிக்கு வரவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.இதனையடுத்து நட்சத்திர கிரிக்கெட் மூலம் நடிகர்கள் கோமாளிகலாக்கப்பட்டனர் எனவும் சிம்பு கூறியிருந்தார் . நடிகர் சங்கத்தலைவர் நாசரும் நாங்கள் நிச்சயமாக பிரச்சினையை தீர்த்து வைப்போம் என்றும் சிம்பு சங்கத்தை விட்டு விலக வேண்டாம் எனவும் கூறினார்.மேலும் நாசர் சிம்புவிடமிருந்து அதிகாரப்பூர்வமான அதாவது பிரச்சனை தொடர்பான எந்த அறிக்கையும் வரவில்லை என்று கூறினார் . மேலும் ராதிகா சரத்குமார் சிம்புவிடம் ,இது அவர்கள் சொத்து அல்ல,நமது கூட்டமைப்பு எனவும்,அவர்கள் உதவி செய்யாவிட்டாலும் வெற்றி உனக்கே என்றும் கூறினார்.நடிகர்களை கிரிக்கெட் நடத்தி ஜோக்கர் ஆக்கிய நடிகர் சங்கத்தில் இருக்க மாட்டேன் ;சிம்பு
நடிகர் சங்கத்தில் இருந்து விலகப்போவதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். கிரிக்கெட் போட்டி என்ற பெயரில் நடிகர்களை ஜோக்கர்கள் ஆக்கியதுதான் மிச்சம் என்றும் அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணி சார்பில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர் சிலம்பரசன். ஆனால், விஷால் அணி வெற்றி பெற்று, நாசர் தலைவராகியுள்ளார். இந்நிலையில், நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை, சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடிகர் சங்கத்தின் சார்பில் நடிகர்கள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க, அஜித், விஜய் ஆகிய மாஸ் ஹீரோக்கள் மட்டுமின்றி, சிம்புவும் வரவில்லை. அஜித் மற்றும் விஜய் ஆகியோரை விஷால் விமர்சனம் செய்ததாகவும், இதற்காக சிம்பு கோபப்பட்டதாகவும் கூட தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் சிம்பு, ஆங்கில வெப்சைட் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பல்வேறு காரணங்களுக்காக நடிகர் சங்கத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். நடிகர்களுக்கு ... Read moreகாமெடியன்களுக்கு அகராதி கவுண்டமணிதான் ……..நடிகர் சந்தானம்
ஜெயராம் புரொடக்சன்ஸ் வழங்கும் படம் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. சுசீந்திரன் உதவியாளர் கணபதி பாலமுருகன் இயக்கும் இந்த படத்தை சண்முகம் தயாரித்துள்ளார். நகைச்சுவை நடிகர் கவுண்டமணி நாயகனாக நடித்துள்ளார். இன்னொரு நாயகனாக சௌந்தர்ராஜாவும் அவருக்கு ஜோடியாக மெட்ராஸ் ரித்விகாவும் நடித்துள்ளனர். இப்படத்தில் கேரவன் கிருஷ்ணன் எனும் கதாபாத்திரத்தில் நாத்திகவாதியாக வருகிறார் கவுண்டர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையில் நேற்று மாலை இப்படத்தின இசை வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் கவுண்டமணி, சௌந்தர்ராஜா, ரித்விகா, நகைச்சுவை நடிகர் சந்தானம், இயக்குநர்கள் சீனு ராமசாமி, சுசீந்திரன், பேரரசு, பொன்ராம், பிரபாகர், நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆரி மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். விழாவில் சந்தான்ம் பேசும்போது, “காமெடியன்களுக்கு டிக்சனரி கவுண்டணி சார்தான். எனக்கு எதாவது ஒரு சீன் சேர்க்க வேண்டும் என்றால் யூடியூபில் கவுண்டமணி சாரின் காமெடியைப் பார்த்து தேவையானதை எடுத்துக் கொள்வேன். இதைச் சொல்வதில் ... Read moreதெறி–கேக் வெட்டிக் கொண்டாடிய விஜய், அட்லி
அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், நைனிகா (மீனாவின் மகள்), பிரபு, இயக்குநர் மகேந்திரன், ராதிகா போன்றோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தெறி. இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். சென்ற வாரம் வெளியான இந்தப் படம், வியாபார ஒப்பந்தத்தில் உண்டான சிக்கல்கள் காரணமாக செங்கல்பட்டுப் பகுதிகளில் சில திரையரங்குகளில் மட்டும் வெளியாகவில்லை. மற்றபடி உலகெங்கும் வெளியாகி வசூலில் நாளுக்கு நாள் முன்னேற்றம் கண்டு வருகிறது. வெளிநாடுகளிலும் இதன் வசூல் மெச்சும்படி உள்ளது. இதனையடுத்து, படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி நேற்று கொண்டாடினார்கள். இந்த நிகழ்வில் விஜய், அட்லி, தாணு, மகேந்திரன், நைனிகா, மீனா உள்ளிட்ட படக்குழுவினர்கள் மட்டும் கலந்துகொண்டார்கள். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
Next »