Category: Featured

Featured posts

ஸ்டாலின் முதல்வராவது எப்போது ? – கருணாநிதி விளக்கம்.

தமக்கு இயற்கையாக ஏதாவது நேர்ந்தால்தான் மு.க.ஸ்டாலின் முதல்வராக முடியும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் தம்முடைய முதுமையை சுட்டிக் காட்டி கருணாநிதி பேசி வருகிறார். தாம் 103 வயது வரை வாழ்ந்தாலும் தமிழக மக்களுக்காக உழைப்பேன் என்றும் கூறியிருக்கிறார். அதே நேரத்தில் திருவாரூர் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, எனக்கு 92 வயதாகிறது. 10 வயது தொடங்கி அரசியலில் பணியாற்றுகிறேன். ஓய்வு இல்லாமல் உழைத்து கொண்டிருக்கிறேன். அந்த ஓய்வை விரும்புகிறேன். நான் பேச முடியாது. தழுதழுத்து பேசுகிறேன். என்னால் சரியாக நடக்கக்கூட முடியாது. தள்ளாடி தள்ளாடி நடக்கிறேன். உங்கள் அன்பால் உதவியால் நான் கடைசி மூச்சை விட்டுக்கொண்டிருக்கிறேன். தமிழர்களை காக்க என்னை விட்டால் வேறு கதியில்லை என உருக்கமாக பேசியிருந்தார். இந்த நிலையில் என்.டி.டி.விக்கு கருணாநிதி சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் திமுக ஆட்சி அமைத்து வாக்குறுதிகளை நிறைவேற்றிய பின்னர் இளைஞர்களுக்கு வழிவிடுவீர்களா? குறிப்பாக உங்க கட்சியில் மு.க. ... Read more

என்னை வாக்களிக்க வையுங்கள்

தேர்வுக்கு தயாராகும் மாணவன் கூட அவ்வப்போது புத்தகத்தை புரட்டி பார்ப்பதுண்டு. ஆனால் இந்த அரசியல்வாதிகள் எப்படி தான் மனசாட்சியே இல்லாமல் ஐந்தாண்டு காலம் தங்களின் தீவிர பணிகளில் (யார் யார் என்ன பணி செய்தனர் என்பதை உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டுமா என்ன) கவனம் செலுத்தி விட்டு, இன்று எங்கு பார்த்தாலும் இதை செய்கிறோம் அதை செய்கிறோம், உடனே மூடுகிறோம்.. கொஞ்சம் கொஞ்சமாக மூடுகிறோம்.. இலவசமாக கொடுக்கிறோம், விலையில்லாமல் கொடுக்கிறோம் என வாக்குகள் பெற உறுதிகளை அள்ளி வீசுகிறார்கள். படித்து முடித்து விட்டு ஒரு பத்தாயிரம் ரூபாய் வேலைக்கு போவதற்குள் எதனை இடர்களை நாம் கடக்க வேண்டி இருக்கிறது.. நேர்காணலில் கேட்கப்படும் கேள்விகட்கு அப்படி இப்படி பதில் சொல்லி வேலை கிடைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். அத்தனைக்கும் சம்பளம் எதோ பத்தாயிரம் தான், ஆனால் இஷ்டத்திற்கும் எதை எதையோ சொல்லி ஓட்டு வாங்கி வெற்றி பெற்று இவர்கள் கோடிகளில் ... Read more

அய்யாத்துரை மேலேயே கேஸா?

திருச்செந்தூர்: சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், திருச்செந்தூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளருமான சரத்குமார் கடந்த 7ம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் நல்லூர் விலக்கில் வந்து கொண்டிருந்தபோது அவரது காரை பறக்கும்படை தாசில்தார் வள்ளிக்கண்ணு தலைமையிலான அதிகாரிகள் நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது காரில் 9 லட்சம் இருந்தது. அந்த பணத்துக்கான உரிய ஆவணம் எதுவும் அவரிடம் இல்லாததால், அந்த பணத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருச்செந்தூர் சார்நிலை கருவூலத்தில் சேர்த்தனர். உரிய ஆவணங்களை சமர்ப்பித்து 9 லட்சத்தை பெற்றுச் செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஓரிரு நாட்களில் ஆவணத்துடன் வந்து பணத்தை பெற்றுச் செல்வதாக சரத்குமார் கூறிச்சென்றார். 3 நாட்கள் கடந்த பின்னும் அவர் உரிய ஆவணங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கவில்லை. இந்நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறி உரிய ஆவணங்களின்றி அளவுக்கு அதிகமாக காரில் சரத்குமார் பணம் கொண்டு வந்ததாக பறக்கும் படை அதிகாரி வள்ளிக்கண்ணு ... Read more

கோடையில் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்

கோடையில் கவனத்துடன் சருமத்தை பராமரித்தாலே போதும் அழகான சருமத்தை பெறலாம். எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் நிறத்தை மெருகேற்ற இயற்கை முறை பெரிதும் உதவியாக இருக்கும். சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும் சருமத்தில் ஈரப்பதம் குறைந்தால் சருமம் வறண்டும்,முகத்தில் சுருக்கங்களும் காணப்படும்.உங்களின் சருமம் எண்ணெய் பசையுள்ளதாக இருந்தால்,எண்ணெய் பசையற்ற மாயிஸ்ச்சரைசர் பயன்படுத்துங்கள்.மேலும் மாயிஸ்ச்சரைசர் வைட்டமின் E உள்ளதாகவும்,இயற்கை எண்ணைகளை கொண்டதாகவும் இருக்க வேண்டும்,இது நிறத்தை அழகாகவும் நிறத்தை வெண்மையுடனும் தோன்ற செய்யும். நீர்ச்சத்துக்கள் குறிப்பிட்ட காய்கறி,மற்றும் பழங்கள் உங்கள் சருமத்தில் உள்ள செல்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றன.காரம் மற்றும் எண்ணெய் பலகாரங்களை தவிர்க்க வேண்டும். அதிகப்படியான நீர் நிறைந்த காய்கறிகள் எடுத்துக்காட்டாக தர்பூசணி,ஆரஞ்சு,வெள்ளரிக்காய்,வெங்காயம்,கீரை வகைகள்,இவையனைத்தும் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை அளிப்பதுடன் சருமம் வறண்டு போகாமலும் பாதுகாக்கிறது. வீட்டிலிருந்தபடியே அழகான சருமம் பெறலாம் *வெள்ளரிக்காய் இயற்கையாகவே பிளீச்சிங் தன்மையை கொண்டது,வெள்ளரி சாறு சருமத்தில் பூசி 20 நிமிடம் கழித்து கழுவினால்,சருமம் மென்மையாக ... Read more

திமுகவுக்கு ஓட்டு போட்டால் வேட்டு உங்கள் நலனுக்கு – ஜெயலலிதா பேச்சு

திமுகவினருக்கு அளிக்கும் ஓட்டு உங்கள் நலனுக்கும் வைக்கு வேட்டு என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, அதிமுக ஆட்சி காலத்தில் விலைவாசி உயர்ந்து விட்டதாக திமுகவினர் பொய் பிரச்சாரம் செய்வதாக குற்றம் சாட்டினார். திமுகவினர் வாக்கு கேட்டு வந்தால் அவர்களை விரட்டியடியுங்கள் என்று கூறினார். பெருந்துறையில் இன்று அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு ஜெயலலிதா பேசியதாவது: ->தந்தை பெரியார் பிறந்த மண்ணில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டதில் பெருமை கொள்கிறேன் ->திமுக ஆட்சியில் ஒவ்வொரு தொழிலும் நசிந்து போனது ->சலவை, சாயத்தொழிற்சாலைகள் மூடப்படுவதை தடுக்க அதிமுக ஆட்சிகாலத்தில் நடவடிக்கை ->சாய கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது ->பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நிதி அளிக்கப்பட்டது ->விலைவாசி ஏற்றத்திற்கு அதிமுக ஆட்சியில் அதிகரித்து விட்டதாக திமுக பொய் பிரச்சாரம் ->உர விலையை ஏற்றியது திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்தான் ->அதிமுக ... Read more

டிடிஎச், மொபைல் போன் – அதிமுக தேர்தல் சலுகைகள் (அறிக்கை) வெளியீடு

எக்கச்சக்க இலவசங்களுடன் வெளிவந்து கபாலி டீசறை விட ட்ரெண்டு ஆகி இருக்கிறது, அதிமுக தேர்தல் அறிக்கை. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் முதல் பிரதியை மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக கரூர் தொகுதி மக்களவை உறுப்பினருமான தம்பிதுரை பெற்றுக்கொண்டார். தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் பேசிய ஜெயலலிதா, பெரியார் பிறந்த பூமியில் அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டதற்காக பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்றார். அதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள சில அறிவிப்புகள்: * அத்திக்கடவு அவினாசி திட்டம் செயல்படுத்தப்படும் * தமிழ்நாட்டில் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு தடை. * சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரபதிவு எளிமையாக்கப்படும். * மீனவர் நிவாரண தொகை ரூ.5000-ஆக உயர்த்தப்படும். * மீனவர்களுக்கு தனி வீடு கட்டும் திட்டம். * விவசாய கடன் தள்ளுபடி. * காவேரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். * மீன்வர்கள் எஸ்.டி. பட்டியலில் ... Read more

காமராசர் – கதை அல்ல நிஜம் – 3

பகுதி 3 காமராஜருக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த உறவு அற்புதமானது. இது குறித்து கண்ணதாசன், “”காமராஜரை நான் தாயாகப் பார்த்தேன். தந்தையாகப் பார்த்தேன். தெய்வமாகப் பார்த்தேன். அதன்பிறகுதான் தலைவனாகப் பார்த்தேன் என்று மனமாரச் சொன்னவர், காமராஜரைப் பற்றி வியந்து வியந்து பாடல் எழுதியவர். அவர் எழுதிய இந்தப் பாடல் காமராஜரின் வாழ்க்கையின் சுருக்கம் என்றே சொல்லலாம். தங்கமே! தன்பொதிகைச் சாரலே! தண்ணிலமே! சிங்கமே! என்றழைத்துச் சீராட்டுத் தாய் தவிரச் சொந்தம் என்று ஏதுமில்லை! துணையிருக்க மங்கையில்லை! தூய மணி மண்டபங்கள், தோட்டங்கள் ஏதுமில்லை! ஆண்டி கையில் ஓடிருக்கும், அதுவும் உனக்கில்லையே! கண்ணதாசன் வீட்டில் அசைவம் சமைக்கப்பட்டால் காமராஜர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். இரவு நேரங்களில் இருவரும் சந்தித்தால் நேரம் போவதே தெரி யாமல் பேசுவார்கள். நாகர்கோவில் தேர்தல் பிரசாரத்தை முன்னின்று நடத்தி வெற்றி தேடிக் கொடுத்தவர் கண்ண தாசன். கண்ணதாசன் மது அருந்துவார் என்பது அனை வருக்குமே தெரியும். ஆனால் “மது அருந்துபவர்கள் காங் ... Read more

விகடனை போட்டு தள்ளும் நெட்டிசன்கள்

ஐந்தாண்டுகளாக அதிமுக சார்பு நிலையில் இருந்து விட்டு இப்போது சமீப காலமாக விகடன் லேசாக திமுக சார்ந்து கட்டுரைகளை வெளியிடுகிறது, ஒரு பக்கம் நடிகரின் ரசிகர்கள் பிறந்த நாள் என்ற பெயரில் ரகளை என சொல்லும் விகடன் இன்னொரு பக்கம் அதே நடிகரின் பிறந்தநாள் பற்றி வண்ணப்படங்களுடன் கட்டுரை போடுகிறது. வேறு எதுவும் டாபிக் கிடைக்கததால் விகடனை கொறிக்க தொடங்கி அது இப்போது உலக அளவில் ட்விட்டர் ட்ரெண்டு ஆகி விட்டது.   #விகடன்ஒருசில்றப்பய Tweets

மாற்றான் தோட்டத்து மல்லிகை – அன்புமணி மீது வைகோ கரிசனம்

நாளிதழ் ஒன்றும், செய்தித் தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பு நிலவரம் வெளியாகி பல தலைவர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. எல்லா தேர்தல் கருத்துக் கணிப்புகளுமே வெற்றி தோல்வியை தீர்மானிக்காது என்றாலும், உண்மையாகிவிடுமோ என்ற எண்ணமே தலைவர்களின் கலக்கத்துக்குக் காரணம். அதாவது, மாம்பழக் கட்சியின் முதல்வர் வேட்பாளர் போட்டியிடும் பென்னாகரம் தொகுதியில், அவருக்கு 3வது இடம் கிடைக்கலாம் என்று கருத்துக் கணிப்புக் கூறுகிறது.  பம்பரம் கட்சித் தலைவர், முரசுக் கட்சியின் தலைவர் போட்டியிடும் உளுந்தூர்பேட்டை தொகுதியில், அவரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது பேசுகையில், பென்னாகரத்தில் போட்டியிடும் மாம்பழக் கட்சியின் முதல்வர் வேட்பாளருக்கு 3ம் இடம் கிடைக்கும் என்பதெல்லாம் நம்பும்படியாகவே இல்லை. எங்கள் எதிரியாக இருந்தாலும், இது தவறானது என்றே சொல்வேன் என்று காட்டமாகக் கூறியுள்ளார்.

யாருக்கு வாக்களிக்க வேண்டும் – சகாயம் பேச்சு

எல்லா அரசியலுக்கு அப்பாற்பட்ட தலைவர்களும் என்ன சொவர்களோ அதைத்தான் சகாயமும் சொல்லி இருக்கிறார். கட்டாயம் வாக்களியுங்கள், சிந்தித்து வாக்களியுங்கள். மாற்றத்தை அரசியலில் தேட வேண்டாம், சமூகத்தில் தான் அதை ஏற்படுத்த வேண்டும் என அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் உ.சகாயம் தெரிவித்தார். மன்னார்குடியில் ‘மன்னையின் மைந்தர்கள்’ அமைப்பு சார்பில் ‘நமது வாக்கு நமது உரிமை’ என்ற தலைப்பில் நேற்று முன்தினம் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்குக்கு அமைப்பின் தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். மருத்துவர் பாரதிச்செல் வன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்புரையாற்றிய உ.சகாயம் பேசும்போது, “மே 16-ம் தேதி நம்முடைய பங்களிப்பு சமூகத்தின் மாற்றத்துக்கான பங் களிப்பாக இருக்க வேண்டும். அதற்கு அனைத்து வாக்காளர் களும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். உலகிலேயே மிகவும் அபாயகரமானவர்கள் சமூக பொறுப்பற்றவர்கள் தான். தேர்தலில் யார் வாக்களிக்காமல் இருக்கிறார்கள் என்றால் அதிகம் படித்தவர்கள் தான். இவர்களே அநீதிக்கு காரணம். இவர்களை தான் நாம் மாற்ற ... Read more