ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 9வது சீசன் போட்டிகள் இன்று தொடங்கின. இரவு 8 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில், டோணி தலைமையிலான புனே மற்றும் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை அணிகள் மோதின. இதில் மும்பையை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புனே வெற்றி பெற்றது. 2008ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது ஐபிஎல். ரசிகர்கள் வரவேற்பை தொடர்ந்து இதுவரை 8 போட்டித் தொடர்களை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் (2010 மற்றும் 2011), கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (2012 மற்றும் 2014), மும்பை இந்தியன்ஸ் (2013 மற்றும் 2015) ஆகிய அணிகள் தலா 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் (2008), டெக்கான் சார்ஜர்ஸ் (2009), அணிகள் தலா 1 தடவையும் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளன. இந்நிலையில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் டாசில் வென்ற மும்பை அணி முதலில் பேட் செய்தது. அந்த அணிக்கு ...
Read more
ஹர்ஷா போக்லே இந்த பெயரை கிரிக்கெட் தெரிஞ்ச 90% பேருக்கு தெரியும். மிக நீண்ட காலமாக கிரிக்கெட் வர்ணனையில் இருக்கும் இவரை வெளிப்படை காரணம் ஏதும் இன்றி பிசிசிஐ ஐபிஎல் 9 இல் இருந்து தூக்கி உள்ளது. ஹர்ஷா போகலே IIM இல் படித்து கிரிக்கெட் மீது கொண்ட ஆர்வத்தால் தனது ஆங்கில திறமை மூலம் கிரிக்கெட் வர்ணனையாளர் ஆனவர். ரவி சாஸ்திரி மற்றும் ஹர்ஷா போகலே இவர்கள் இருவர் தான் முதன்மையான இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர்களாக இருந்தனர். இந்திய – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஆன T20 போட்டியின் பொது விதர்பா கிரிக்கெட் அசோசியேசன் மூத்த அதிகாரி ஒருவர்க்கும் இவர்க்கும் இடையே சூடான விவாதம் நடந்ததாம். அது கூட காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். இது மட்டுமின்றி இந்திய – வங்கதேசம் இந்தியே நடந்த போட்டிக்கு பின் நடிகர் அமிதாப் பச்சன் “இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர்கள் இந்திய வீரகளை பற்றியும் பேசினால் நல்லது” ...
Read more
மயாமி ஓபனில் அசத்திய செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தொடர்ந்து 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பைனலில் ஜப்பானின் கெய் நிஷிகோரியை தோற்கடித்தார். அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில், மயாமி ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் ‘நம்பர்-1’ வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 6வது இடத்தில் உள்ள ஜப்பானின் கெய் நிஷிகோரி மோதினர். இதில் அபாரமாக ஆடிய ‘நடப்பு சாம்பியன்’ ஜோகோவிச் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் இத்தொடரின் ஒற்றையர் பிரிவில் ‘ஹாட்ரிக்’ கோப்பை வென்ற 2வது வீரர் என்ற பெருமை பெற்றார் ஜோகோவிச். இதற்கு முன் அமெரிக்காவின் ஆன்ட்ரி அகாசி (2001-03) இம்மைல்கல்லை எட்டினார். தவிர இது இத்தொடரில் ஜோகோவிச் கைப்பற்றிய 6வது (2007, 2011-12, 2014-16) பட்டம். இதன்மூலம் அதிக முறை (6) கோப்பை வென்ற வீரர்கள் வரிசையில் முதலிடத்தை அகாசியுடன் பகிர்ந்து ...
Read more
ஆஸ்திரேலிய ‘சுழல்’ ஜாம்பவான் ஷேன் வார்ன், வெஸ்ட் இண்டீசின் சாமுவேல்ஸ் இருவருக்கிடையே கடந்த 2013ல் நடந்த ‘பிக் பாஷ்’ தொடரின் போது மோதல் வெடித்தது. இது, சமீபத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரிலும் நீடித்தது. இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியில் வர்ணனையாளராக இருந்த வார்ன், சாமுவேல்ஸ் ‘அவுட்’ குறித்து விமர்சனம் செய்தார். இங்கிலாந்துக்கு எதிரான பைனலில் பேட்டிங்கில் அசத்திய சாமுவேல்ஸ் 85 ரன்கள் குவித்து ஆட்டநாயகனாக ஜொலித்தார். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட விருதை, வார்னுக்கு சமர்ப்பிக்கிறேன் எனக் கூறினார். இதுகுறித்து சாமுவேல்ஸ் கூறுகையில், ”பைனல் போட்டியன்று காலை எழுந்த போது என் மனதில் ஒரு விஷயம் அடிக்கடி வந்து சென்றது. ஷேன் வார்ன் தொடர்ச்சியாக ஏன் விமர்சனம் செய்கிறார். அவருக்கு என் மீது என்ன கோபம் எனத் தெரியவில்லை. நான் ஒருபோதும் அவரை அவமரியாதை செய்ததில்லை. அவர் மனதில் உள்ள விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டும். இப்படி தொடர்ச்சியாக விமர்சனம் செய்வதை ...
Read more
புனே: பிரிமியர் தொடரில் தோனி-பிளமிங் கூட்டணி மீண்டும் அசத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆறாவது பிரிமியர் தொடரில் நடந்த சூதாட்டம் காரணமாக சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தலா 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டன. இதற்குப் பதில் வரும் 9ம் தேதி துவங்கும் 9வது பிரிமியர் தொடரில் புனே, குஜராத் என, இரு அணிகள் புதிதாக களம் காணுகின்றன. இதில் புனே அணிக்கு கேப்டனாக தோனி, பயிற்சியாளராக பிளமிங் இருப்பதால், பார்ப்பதற்கு சென்னை அணி போல உள்ளது. சென்னை அணிக்கு 2010, 2011ல் பிரிமியர் கோப்பை, 2010, 2014ல் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை தோனி-பிளமிங் கூட்டணி பெற்று தந்தது. இவர்கள் இருப்பதால் புனே அணி மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு கேப்டன்: தவிர, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலிய ‘டுவென்டி-20’ அணிகளின் கேப்டன்கள் டுபிளசி, ஸ்டீவ் ஸ்மித், ரகானே, நட்சத்திர வீரர் பீட்டர்சன் என, பெரும் பட்டாளமே இந்த அணியில் உள்ளது. மூன்று ‘சுழல்’: ...
Read more
கடந்த ஆண்டு ஏப்ரல் 27 ஆம் திகதி சச்சினின் 99 சதங்களை பற்றி ஒரு தொடர் பதிவு இடுவது என்று ஏதோ ஒரு ஆர்வத்தில் 99 நாட் அவுட்.! என்று பதிவிடத் தொடங்கினேன். ஆனால் வெறும் ஏழு பதிவுகளுடன் அது நின்று போய் விட்டது. சச்சின் நூறாவது சதத்தை அடிக்காமல் இருப்பதற்கும் இந்த தொடர் பதிவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது நூறு சதவிகிதம் தெரிந்து இருந்தாலும் ஏதோ ஒன்று மனதை வருடுவதால் கிடப்பில் போட்ட அந்த தொடரை பெயர் மாற்றத்துடன் தொடரப் போகிறேன். இந்த பதிவு முதல் தலைப்பு 100 நாட் அவுட்.! சதம் #9 ரன்கள் : 115 எதிரணி : நியூசிலாந்து இடம் : பரோடா, இந்தியா நாள் : அக்டோபர் 28, 1994 ஆட்ட முடிவு : வெற்றி ஆட்ட நாயகன் : ஆம் சிறிய பரோடா மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாகவே எப்போதும் இருந்து ...
Read more
அது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை. உலக சாம்பியன்,டெஸ்ட் அரங்கில் நம்பர் 1 என்று கம்பீரமாய் இங்கிலாந்து மண்ணில் விளையாட சென்ற இந்திய அணிக்கு தொடர்ந்து அடி மேல் அடி விழுந்து கொண்டிருக்கிறது. எனக்கு என்னவோ நாளை தான் இந்த தொடரில் இந்தியாவின் முதல் வெற்றி நிகழப் போவதாகப் படுகிறது பார்ப்போம். டெஸ்ட் போட்டிகளில் நான்கு ஆட்டங்களிலும் தோல்வி அடைந்த நிலையில் T20 போட்டியில் பதிலடி கொடுப்பார்கள் என்று பார்த்தால் தங்களது T20 வரலாற்றில் முதல் போட்டியில் விளையாடிய இரண்டு வீரர்களை தவிர்த்து எவருமே பெரிதாய் வெற்றிக்கு முனையவில்லை. அந்த இருவர் யார் என்று இரண்டு தினங்களாக தொலைக்காட்சியில் திரும்ப திரும்ப காண்பித்து இருப்பார்களே? ரஹானேவும் ராகுலும் தான். ஒருவர் கிரிக்கெட்வாழ்க்கையை தொடங்குகிறார். மற்றவர் முடிக்கப் போகிறார். இருவருமே சிறப்பாக விளையாடினர். ரஹானே சரியாக பந்தின் திசை,வேகம் ஆகியவற்றை கொண்டு திருப்பி விடுவதில் வல்லவராக படுகிறார். டிராவிட் தன் இயல்புக்கு கொஞ்சமும் ...
Read more
என்ன இது மிக எளிதான போட்டியாகி விட்டதே என்று போட்டியின் முதல் ஆறு ஓவர்கள் முடிவில் எல்லோருமே எண்ணி இருப்பார். ஆனால் டச்சு பேட்ஸ்மேன் ரியான் டென் டாஸ்சாடே மிக சிறப்பாக விளையாடியதுடன் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து போட்டியை வெறுமனே மும்பையிடம் ஒப்படைக்காமல் கொல்கத்தாவை காப்பாற்றினார். முனாப் படேலின் துல்லியமான ஸ்டம்ப் டு ஸ்டம்ப் பந்துகள் மீண்டும் ஒருமுறை அவரை வெற்றி வீரராக மாற்றியது. முதலிலேயே இரண்டு விக்கெட்டுகள் எடுத்து கொல்கத்தாவை திணறடித்தார். முதல் விக்கெட்டின் கேட்சை பிடித்தது சச்சின், நிச்சயம் அவர் இன்னும் பத்தாண்டுகள் விளையாடலாம். என்ன ஒரு கேட்ச் அது, The Ever Youth Sachin took the brilliant catch.. பவர்ப்ளே முடியும் போதெல்லாம் நான்கு விக்கெட்டுகளை இழந்த அந்த அணி டாஸ்சாடே மற்றும் பதானின் பொறுமையான ஆட்டத்தால் பெறும் சரிவில் இருந்து மீண்டது. எதிர்ப்பார்த்தது போலவே யூசுப் பதான் கொஞ்சம் அவசரப்பட்டு அடிக்க பொல்லார்டு ...
Read more
போட்டியை பார்த்துக் கொண்டிருந்த எல்லோருமே சென்னை தோற்று விடும் என்றிருக்க பதினோரு பேர் மட்டும், சென்னை வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருந்தனர்,அவர்கள் மஞ்ச சட்டை போட்ட சூப்பர் கிங்க்ஸ் அணி வீரர்கள். கிட்டத்தட்ட தோற்று விடும் என்ற நிலையில் இருந்து கடைசி ஐந்து ஓவர்களை 59 ரன்கள் எடுத்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. பெங்களூர் முதலில் பேட்டிங் : நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தோனி முதலில் பந்து வீச தீர்மானித்தார். நிச்சயம் அது கெய்ல்-ஓ-போபியா வால் தான். முதலில் போல்லின்கர் மற்றும் மார்க்கல் பந்து வீசினர். கெய்ல் அடிக்க ஆரம்பிக்கும் முன்னே அகர்வால் நன்றாக விளையாடி ரன்கள் சேர்க்க ஆரம்பித்தார். ஆனால், அஸ்வின் பந்து வீச வந்ததுமே சென்னைக்கு ஒரு விக்கெட் உறுதி என தெரிந்தது, கெய்ல் அஸ்வின் பந்தை சிக்சருக்கு விரட்ட, அடுத்த பந்திலேயே கெய்லை பெவிலியனுக்கு விரட்டினார் அஸ்வின். சென்னை அணி வீரர்கள் ...
Read more
சச்சின் டெஸ்ட் போட்டிகளில் நிரந்தரமாக ஒரு இடத்தை கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய சில மாதங்களில் பெற்று விட்டார். ஆனால் ஒரு தின போட்டிகளை பொறுத்தவரை நிலைமை அப்படி இருந்திருக்கவில்லை. ஆனால் நியூசிலாந்து அணிக்கு எதிராக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிரடியாக 82 ரன் குவித்த அந்த ஒரே போட்டி அவரை ஒருநாள் போட்டிகளில் தவிர்க்க முடியாத வீரர் ஆக்கியது. இப்போது (20/05/2011) சச்சின் 48 சதங்கள் அடித்துள்ளார். ஆனால் தனது முதல் சதத்தை அடிக்க அவர் 79 போட்டிகள் கடக்க வேண்டி இருந்தது. சதம் #8 ரன்கள் : 110 எதிரணி : ஆஸ்திரேலியா இடம் : கொழும்பு,இலங்கை நாள் : செப்டம்பர் 9, 1994 ஆட்ட முடிவு : வெற்றி ஆட்ட நாயகன் : ஆம் சச்சின் எப்போதுமே ஆஸ்திரேலியா அணி என்றாலே புது உத்வேகத்துடன் விளையாடுவார். இந்த போட்டிக்கு சில ஆட்டங்களுக்கு முன்பு தான் சச்சின் தொடக்க வரிசை ...
Read more