தேமுதிக உட்கட்சி பிரச்னை – ஸ்டாலின் கருத்து

0
48

மக்கள் நலக் கூட்டணியில் இணைந்ததை எதிர்த்து தேமுதிக எம்எல்ஏக்கள் சிலரும், மாவட்ட நிர்வாகிகளும் விஜயகாந்துக்கு எதிராக நேற்று போர்க்கொடி உயர்த்தினர்.

அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில், அதிரடியாக விஜயகாந்த் அவர்களை கட்சியில் இருந்தே நீக்கி உத்தரவிட்டு அனைவரையும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

போர்க்கொடி தூக்கியவர்களை விட, அவர்களுக்குப் பின்னால் இருந்து இயக்குவதாகக் கூறி திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினை தான் திட்டித் தீர்த்தனர் மக்கள் நலக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்.

ஆனால், இதற்கு பதிலளித்துள்ள மு.க. ஸ்டாலின், தேமுதிகவில் தற்போது ஏற்பட்டிருக்கும் சலசலப்பு உள்கட்சி விவகாரம்தான்.இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, தேமுதிகவினரை பணம் கொடுத்து திமுகவுக்கு அழைப்பதாகக் கூறுவது அபாண்டம் என்று கூறுகிறார்.

தேமுதிகவை யாரும் கரைக்க வேண்டாம், அது தானாகக் கரையும் என்று ஏற்கனவே ஆரூடம் கூறியிருந்தார் ஸ்டாலின், அதே போல தற்போது நடந்திருப்பது பழம் நழுவி பாலில் விழுந்த கதையா அல்லது தான் செய்த வேலைக்கு பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பேசிய பேச்சா என அரசியல் ஆர்வலர்கள் பேசி வருகின்றனர்.

  • குறிகள்
  • ஸ்டாலின்
பகிர்ந்து
முந்தைய செய்தி75 லட்சம் பார்வையாளர்களை நெருங்கும் தெறி ட்ரைலர்
அடுத்த செய்திநான் ஸ்டாலின் போல அல்ல – அன்புமணி பேட்டி
வலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.

உங்கள் கருத்தை தெரிவிக்க