தோனி அவ்வளவுதானா.. தொடர் தோல்வியில் ஐபிஎல் 2016

0
296

ஐபிஎல் டி20 தொடரில் நேற்று விசாகபட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் புனவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது.தவான் அதிகபட்சமாக 27 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த யுவராஜ் சிங் 21 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 23 ரன்கள் எடுத்து ஸம்பா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஸம்பாவின் அடுத்த ஓவரில் வில்லியம்ஸன் வீழ்ந்தார். அவர் 37 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்திருந்தார். மற்ற வீரர்கள் ரன் எடுக்க தவறினர். இதனால் ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது.

புனே அணி சார்பில் அசத்தலாக பந்து வீசிய ஆடம் ஸம்பா 19 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆர்.பி.சிங், அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது புனே அணி. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரகானே டக் அவுட் முறையில் வெளியேற, கவாஜாவும் 11 ரன்களில் ரன் அவுட் ஆனார். 19 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் புனே அணி அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இதனையடுத்து பெய்லியுடன், அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுமையாக விளையாடி ரன்களை ஒன்று இரண்டாக சேர்த்தனர். 12-வது ஓவர் முடிவில் 68 ரன்கள் எடுத்திருந்த போது இந்த ஜோடி பிரிந்தது. பெய்லி 3 4(40) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த அஸ்வின் 29(25) ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். திவாரியும் 9 ரன்களில் ஆட்டமிழக்க டோணியும், பெரேராவும் கடையில் போராடினார். .

புனே வெற்றிக்கு கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை நெஹ்ரா வீசினார். ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது.2-வது பந்தில் டோணி ஒரு ரன் எடுத்தார். 3-வது பந்தில் பெரேரா கேட்சாகி ஆட்டமிழந்தார். இதனால் கடைசி 3 பந்தில் 12 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது.

4-வது பந்தில் சிக்ஸர் அடித்த டோணி, அடுத்த பந்திலேயே ரன் அவுட் ஆனார். இதனால் கடைசி பந்தில் 5 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. கடைசி பந்தில் ஜம்பா கேட்சாகி அவுட்டானார். 20 ஓவர்கள் முடிவில் புனே அணி 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் ஹைதராபாத் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. நெஹ்ரா அதிக பட்சமாக 3 விக்கெட்டுகளை விழ்த்தினார். 7 வெற்றிகளுடன் ஹைதராபாத் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது. 6 விக்கெட்டுக்களை வீழ்த்திய புனே அணியின் ஜம்பா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

உங்கள் கருத்தை தெரிவிக்க