ஜெ. எந்த ஊருக்கு வருவாரோ என மக்கள் திகில்: கனிமொழி

0
116

முதல்வர் ஜெயலலிதா எந்த ஊருக்கு வருவாரோ என்ற பயத்தில் மக்கள் இருப்பதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி. கனிமொழி சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

வெயில் கொளுத்துவதால் மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் ஜெயலலிதாவின் கூட்டத்திற்காக அதிமுகவினரோ பொதுமக்களை மணிக் கணக்கில் வெயிலில் காக்க வைத்து வதைக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் கூட்டத்திற்கு வந்த இரண்டு பேர் வெயில் தாங்க முடியாமல் பலியாகியுள்ளனர். ஏன் அவரின் கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்க வந்த காவலர்களே வெயிலை தாங்க முடியாமல் மயங்கி விழுந்துள்ளனர்.

ஜெயலலிதா மட்டும் ஏசியில் அமர்ந்து சொகுசாக பேசுகிறார். எந்த ஊருக்கு ஜெயலலிதா வருவாரோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர். திமுக தலைவர்களோ மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று அவர்களை சந்திக்கிறார்கள் என்றார்.

பகிர்ந்து
முந்தைய செய்திகொலைகாரி ஜெயலலிதா – வைகோ ஆவேசம்
அடுத்த செய்திமே 1 முதல் பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
வலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.