தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகும் நாக சைதன்யா படம்

0
379

நாக சைதன்யா நடித்த தெலுங்கு படம் ஒன்று தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவருகிறது. அது என்ன படம்? என்பதை கீழே பார்ப்போம்…

 

தெலுங்கில் நாக சைதன்யா நடிப்பில் வெளிவந்த ‘ஒக்க லைலா கோசம்’ தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது தெலுங்கில் வெற்றிபெற்ற படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்துகொண்டிருப்பதால் இந்த படத்தை மொழிமாற்றம் செய்து வெளியிடவுள்ளனர்.
அதன்படி தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவரவிருக்கும் இப்படத்திற்கு ‘லைலா ஓ லைலா’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தின் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். பிரபு, சுமன், ஷியாஜி ஷிண்டே, நாசர், பிரம்மானந்தம், ஆலி, ஆசிஷ் வித்யார்த்தி, சுப்ரீத் ஆகியோர் நடித்துள்ளனர்.
கே.விஜயகுமார் இயக்கியுள்ள இப்படத்தை தமிழில் ஸ்ரீலட்சுமி ஜோதி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.என்.பாலாஜி தயாரிக்கிறார். பணக்கார வாலிபனான நாகசைதன்யா ஒரு பெண்ணை காதலிக்கிறார். காதலை ஏற்காத அந்த பெண் விலகி நிற்கிறாள். இதற்கிடையே அந்த பெண்ணிற்கும், நாகசைதையாவிற்கும் திருமண ஏற்பாடு செய்யப்படுகிறது.
ஆனால் நாகசைதன்யா அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி விடுகிறார். விருப்பப்பட்ட பெண்ணே கிடைக்கும்போது நாகசைதன்யா மறுக்க என்ன காரணம்? என்பதுதான் இந்த படத்தின் சுவாரஸ்யம். இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.மேலும் படிக்க

உங்கள் கருத்தை தெரிவிக்க