திமுகவுக்கு ஓட்டு போட்டால் வேட்டு உங்கள் நலனுக்கு – ஜெயலலிதா பேச்சு

0
259

திமுகவினருக்கு அளிக்கும் ஓட்டு உங்கள் நலனுக்கும் வைக்கு வேட்டு என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, அதிமுக ஆட்சி காலத்தில் விலைவாசி உயர்ந்து விட்டதாக திமுகவினர் பொய் பிரச்சாரம் செய்வதாக குற்றம் சாட்டினார். திமுகவினர் வாக்கு கேட்டு வந்தால் அவர்களை விரட்டியடியுங்கள் என்று கூறினார்.

பெருந்துறையில் இன்று அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு ஜெயலலிதா பேசியதாவது:

->தந்தை பெரியார் பிறந்த மண்ணில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டதில் பெருமை கொள்கிறேன்

->திமுக ஆட்சியில் ஒவ்வொரு தொழிலும் நசிந்து போனது

->சலவை, சாயத்தொழிற்சாலைகள் மூடப்படுவதை தடுக்க அதிமுக ஆட்சிகாலத்தில் நடவடிக்கை

->சாய கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது

->பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நிதி அளிக்கப்பட்டது

->விலைவாசி ஏற்றத்திற்கு அதிமுக ஆட்சியில் அதிகரித்து விட்டதாக திமுக பொய் பிரச்சாரம்

->உர விலையை ஏற்றியது திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்தான்

->அதிமுக அரசால் உரத்தின் மீதான மதிப்பு கூட்டு வரியை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது

->எரிவாயு சிலிண்டர் மீதான மதிப்புக்கூட்டு வரி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது.

->பெட்ரோல், டீசல் உயர்வுக்கு காரணம் மத்திய பாஜக அரசுதான் காரணம்

->பெட்ரோல், டீசல் குறைந்தாலும் பாஜக அரசு கலால்வரியை உயர்த்திவிட்டது

->டீசல் விலை உயர்ந்தாலும் பேருந்து கட்டணத்தை உயர்த்தவில்லை

->போக்குவரத்து கழகத்திற்கு மானியம் வழங்கப்படுகிறது

->விலைவாசியை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன

->காய்கறி விலையை கட்டுப்படுத்த பண்ணை பசுமை கடைகள் திறக்கப்பட்டுள்ளன

->விலைவாசியை கட்டுப்படுத்த அம்மா உணவகம் திறக்கப்பட்டுள்ளன..

->அம்மா மருந்தகங்கள் மூலம் 15 சதவிகிதம் குறைவாக மருந்துகள் விற்பனை

->அம்மா சிமெண்ட் ரூ. 190 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

->திமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு ஏமாற்று திட்டங்கள் உள்ளன

->திருக்கோவில்களில் உள்ள அன்னதான திட்டத்தை நிறுத்த திமுக திட்டம்

->அறிஞர் அண்ணா உணவுத்திட்டத்தை அறிமுகப்படுத்தப்போவதாக திமுக அறிவிப்பு

->அம்மா உணவகங்களை மூட திமுகவினர் திட்டம்

->திமுகவினர் நடத்தும் ஹோட்டல்கள் நஷ்டத்தில் இயங்குகிறது

->திமுகவினர் மினரல் குடிநீர் விற்பனை செய்வதால் அம்மா குடிநீரை விமர்சிக்கின்றனர்

->திமுகவினருக்கு அளிக்கும் ஓட்டு உங்கள் நலனுக்கும் வைக்கு வேட்டு

->திமுகவினர் வாக்கு கேட்டு வந்தால் விரட்டியடியுங்கள்… செய்வீர்களா?

->தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு தொழிற்சாலைகள் செல்வதாக பொய் பிரச்சாரம்

->எந்த ஒரு தொழிற்சாலையின் பெயரையாவது திமுகவினரை குறிப்பிட்டு சொல்ல சொல்லுங்கள்

->ஸ்பைஸ் ஜெட் நஷ்டமடைந்து விற்றுவிட்டதால் கருணாநிதிக்கு அங்கலாய்ப்பு

->திமுக – காங்கிரஸ் கூட்டணி என்றாலே ஊழல் கூட்டணி

->இந்த கூட்டணி மக்களால் தண்டிக்கப் பட்ட கூட்டணி

->ஹெலிகாப்டர் பெற்றதில் ஊழல் செய்தது காங்கிரஸ்

->மத்தியிலும், மாநிலத்திலும் ஊழல் செய்தது திமுக

->கிரானைட் கொள்ளை, நிலக்கரி ஊழல் எங்கும் எதிலும் ஊழல்

->2ஜி ஸ்பெக்ட்ரம் என்ற இமாலய ஊழல் செய்தது திமுக மத்திய அமைச்சர்தான்

->பிஎஸ்என்எல் நிறுவனத்தில் முறைகேடு செய்தவர்தான் தயாநிதிமாறன்

->கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 200 கோடி வந்தது எப்படி அது ஊழல் பணம்தானே?

->கருணாநிதியின் நிறுவனங்களில் சிபிஐ ரெய்டு நடந்தபோது காங்கிரஸ் கட்சி பழிவாங்குவதாக சொன்னவர்தான் கருணாநிதி

->ஊழல் பணத்தில் பங்கு சரியாக போகாத காரணத்தினால்தான் காங்கிரஸ் கட்சி பழிவாங்கியதா?

->இப்போது ஏன் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தார் கருணாநிதி.

->தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கூறிய ஜெயலலிதா, ஏழைகள் வாழ்வில் வசந்தம் தொடர மீண்டும் அதிமுகவிற்கு வாக்களியுங்கள் என்று கூறினார் ஜெயலலிதா.

 

உங்கள் கருத்தை தெரிவிக்க