ஸ்டாலின் முதல்வராவது எப்போது ? – கருணாநிதி விளக்கம்.

0
320

தமக்கு இயற்கையாக ஏதாவது நேர்ந்தால்தான் மு.க.ஸ்டாலின் முதல்வராக முடியும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் தம்முடைய முதுமையை சுட்டிக் காட்டி கருணாநிதி பேசி வருகிறார். தாம் 103 வயது வரை வாழ்ந்தாலும் தமிழக மக்களுக்காக உழைப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.

அதே நேரத்தில் திருவாரூர் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, எனக்கு 92 வயதாகிறது. 10 வயது தொடங்கி அரசியலில் பணியாற்றுகிறேன். ஓய்வு இல்லாமல் உழைத்து கொண்டிருக்கிறேன். அந்த ஓய்வை விரும்புகிறேன். நான் பேச முடியாது. தழுதழுத்து பேசுகிறேன். என்னால் சரியாக நடக்கக்கூட முடியாது. தள்ளாடி தள்ளாடி நடக்கிறேன். உங்கள் அன்பால் உதவியால் நான் கடைசி மூச்சை விட்டுக்கொண்டிருக்கிறேன். தமிழர்களை காக்க என்னை விட்டால் வேறு கதியில்லை என உருக்கமாக பேசியிருந்தார்.

இந்த நிலையில் என்.டி.டி.விக்கு கருணாநிதி சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் திமுக ஆட்சி அமைத்து வாக்குறுதிகளை நிறைவேற்றிய பின்னர் இளைஞர்களுக்கு வழிவிடுவீர்களா? குறிப்பாக உங்க கட்சியில் மு.க. ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்ற விருப்பம் உள்ளதே? என்ற கேள்விக்கு

பதிலளித்த கருணாநிதி, மு.க. ஸ்டாலினே முதல்வராக வேண்டும் என விரும்பவில்லை. அவர் திமுக தலைவர்தான் திமுகவின் முதலமைச்சராக வரவேண்டும் என விரும்புகிறார்.

நான் இதுவரை தோற்றதே இல்லை. திமுக சார்பாக 1957ல் போட்டியிட தொடங்கி இதுவரை தோற்றது இல்லை. எனவே இந்த முறை நான் வென்றால் அது 6-வது முறையாக இருக்கும். ஆகவே 6-வது முறையும் நான்தான் முதலமைச்சராக வரவேண்டும் என்று எண்ணுகிறவர்களிலேயே முதல் ஆள் மு.க. ஸ்டாலின்.

இதனைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலின் முதல்வராவதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பவர்களுக்கு என்ன சொல்வீர்கள் என்ற கேள்விக்கு, அவர் முதல்வராவதற்கு வாய்ப்பு வரவேண்டுமானால் எனக்கு இயற்கையாக ஏதும் நேர்ந்தால்தான்.. என கருணாநிதி பதிலளித்துள்ளார்.

உங்கள் கருத்தை தெரிவிக்க