கபாலி டீசர் – பார்த்தவங்க என்ன சொல்றாங்க

0
1308

ரஜினிகாந்த் நடிப்பில், பழைமையாய் (புதுமையாய் பார்த்து புளித்து விட்டதால், பழைய ரஜினியை கொண்டு வருகிறார்கள்) உருவாகி உள்ள படம் கபாலி. படத்தின் டீசர் உலக அளவில் டிரண்டு ஆகி விட்டதில் படக்குழு மகிழ்ச்சி.

எண்பது இலட்சத்திற்கும் மேலான தடவை இதுவரை பார்க்கப்பட்ட இந்த டீசரை பற்றி பிரபலங்கள் என்ன சொல்றாங்கனு பார்ப்போம்.

 

ராதிகா ஆப்தே (கபாலி நாயகி) : சிறந்த மனிதர்… ரஜினிகாந்த்… சிறந்த டீசர்.. கபாலி…

எஸ்.எஸ்.ராஜமௌலி : இதுதான் ஸ்டைல், இதுதான் ரஜினி, இதுதான் தலைவா…

ராம் கோபால் வர்மா : ரஜினிகாந்த் ஏன் ரஜினிகாந்த் ஆக இருக்கிறார் என்பதற்குக் காரணமிருக்கிறது. ரஜினி சாரைத் தவிர வேறு எந்த சூப்பர் ஸ்டாரும் திரையில் இப்படி ஒரு அதிர்வை ஏற்படுத்த முடியாது. முதல்நாளில் இந்தப் படத்தை நான்கு முறை பார்க்க விரும்புகிறேன். கபாலி, பாகுபலிக்குப் பிதா போல இருக்கிறார், ஒரே ஒரு ரஜினிகாந்த் மட்டுமே.

தனுஷ் : நெருப்புடா… நெருங்குடா… தலைவா… நன்றி பா.ரஞ்சித், மகிழ்ச்சி…

சிவகார்த்திகேயன் : தலைவர் வெறித்தனம்.. ரஞ்சித் சகோதரா… மகிழ்ச்சியின் உச்சம்.. உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் நன்றி…

நானி – தெலுங்கு நடிகர் : டிக்ஷனரி ‘கிரேஸ்’ என்பதற்கான அர்த்தமாகச் சொல்வது என்னவென்றால், “ஒரு வடிவம், ஒரு நடவடிக்கை, ஒரு இயக்கம், ஒரு முறை அதன் அழகை நேர்த்தியுடன் வெளிப்படுத்துவது,” என்று சொல்கிறது. நான் அதை ‘இது’தான் (ரஜினியின் கபாலி டீசர் புகைப்படம்) எனச் சொல்வேன்.

ராதிகா சரத்குமார் : ஆசம்…எப்போதும் போல அசத்தல்…வாவ்…!

குஷ்பு : மற்றுமொரு சூப்பர் ஸ்டார் இல்லை என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ரஜினிகாந்த், எங்களுக்குள் இருக்கும் நெருப்பை நீங்கள்தான் மூட்டுகிறீர்கள். அதை நீங்கள்தான் வெளிப்படுத்துகிறீர்கள்.

கார்த்திக் சுப்புராஜ் : அந்தக் கண்கள்… அந்த சிரிப்பு… அந்த குரல்… அந்த நடை… ஐயோ.. தலைவா.. நன்றி.. ரஞ்சித் மற்றும் குழுவினர்.

 

உங்கள் கருத்தை தெரிவிக்க