இந்திய கிரிக்கெட் அணியின் மிக பிரபலமான கிரிக்கெட் அணித்தலைவர்களில் ஒருவராக இருந்து, பல சர்ச்சைகளுக்கு உள்ளாகியவர் கிரிக்கெட் வீரர் அசாருதீன். அவரின் சில உண்மையான வாழ்க்கை நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து ஹிந்தி திரைப்படம் உருவாகி இருக்கிறது.
அவர் வாழ்வின் உயர்வு தாழ்வு முதல் அவரது உள் உலக பார்வையை வழங்குகிறது படம். அவரது தொடக்கத்திலிருந்து, பின்னர் போட்டியில் பிக்சிங் மற்றும் கிரிக்கெட் ஊழல் குற்றச்சாட்டு, திரைப்பட நட்சத்திரம் சங்கீதா என படத்தில் நிஜங்களை கோர்த்துள்ளனர்.