மஞ்சள் தூள் ஒரு சிறந்த கிருமி நாசினியாகவும்,நோய் தொற்று ஏற்படாமலும் சருமத்தை பாதுகாக்க வல்லது.இது சருமத்தை சுத்தமானதாகவும்,வலுவுள்ளதாகவும் ஆக்குகிறது.
மஞ்சள் தூளை உணவில் பயன்படுத்துவதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து,சளி,டான்சில்ஸ் மற்றும் சுற்றுப்புற சூழலால் ஏற்படக்கூடிய தொற்றிலிருந்தும் பாதுகாக்கிறது.
மஞ்சள் தூளின் சில அழகு குறிப்புகளை இங்கே காணலாம்;
*சிறிதளவு வெண்ணையுடன்,மஞ்சள் தூள் சேர்த்து குளிக்க போகும்முன் முகம்,மற்றும் கை,கால்களில் முழுவதும் பூசி 20 நிமிடம் கழித்து குளித்தால் சருமம் பொலிவுடன் காணப்படும்.
(அல்லது)
*பாலுடன்,மஞ்சள் சேர்த்து உடலில் பூசி குளித்தால் சருமம் பளபளப்பாக இருக்கும்.
*மோருடன் ,மஞ்சள் தூளை சேர்த்து முகம் மற்றும் கழுத்தில் பூசி குளிர்ந்த நீரால் கழுவ முகத்தில் உள்ள சுருக்கங்கள் குறையும்.
*மஞ்சள்,எலுமிச்சை சாறு,வெள்ளரி சாறு சேர்த்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் பூசி குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.
*கற்றாழை சாருடன்,மஞ்சள் தூள் சேர்த்து கலந்து காயத்தழும்பு உள்ள இடத்தில் பூசி வர தழும்பு மறையும்.
* தேங்காய் எண்ணெயுடன்,மஞ்சள் தூள் சேர்த்து வெடிப்புள்ள பாதத்தில் தடவி வந்தால் ,பாதத்தில் உள்ள வெடிப்பு நீங்கும்.
*பச்சை மஞ்சளுடன்,வேப்பிலை சேர்த்து அரைத்து ,உடலில் பூசி வாரம் இருமுறை குளிக்க வேண்டும்,இதனால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.