வசூலில் பாகுபலியை வீழ்த்தியது விஜய்-யின் தெறி

0
1046

விஜய், சமந்தா, நைனிகா நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘தெறி’ வசூலில் தொடர்ந்து சாதனைகள் படைத்து வருகிறது.

Theri/Policeodu Movie Stills

முதல் வாரத்தில் ‘பாகுபலி’ படத்தின் சென்னை வசூலை முறியடித்து விஜய்யின் ‘தெறி’ சாதனை படைத்துள்ளது.

தமிழ்நாடு தவிர்த்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் இப்படம் வசூலைக் குவித்து வருகிறது.

முதல் வார முடிவில் விஜய்யின் ‘தெறி’ ரூ 3.06 கோடிகளை சென்னையில் வசூலித்துள்ளது. தியேட்டர் பிரச்சினை இருந்தாலும் கூட இப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் குறை வைக்கவில்லை. மேலும் போட்டிக்கு வேறு பெரிய படங்கள் இல்லாதது, விடுமுறை ஆகியவை தெறிக்கு பெரும்பலத்தைக் கொடுத்திருக்கிறது. தமிழ்நாடு தவிர கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற அண்டை மாநிலங்களிலும் வேறு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை என்பதால் அங்கும் இப்படம் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

பாகுபலி vs தெறி சென்னையில் 3 கோடிகளை வசூல் செய்ததன் மூலம் ‘பாகுபலி’ படத்தின் முதல் வார வசூலை இப்படம் முறியடித்துள்ளது. தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் வெளியான ‘பாகுபலி’ முதல் வாரத்தில் 1.66 கோடிகளை சென்னையில் வசூலித்திருந்தது.

உங்கள் கருத்தை தெரிவிக்க