மௌன விரதத்தை முடித்துக் கொண்டார் மன்மோகன்

0
18
அட வாயை திறந்து பேசுங்களேன் என்று எதிர்கட்சிகள் மட்டுமல்ல சில ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே கேட்கும் அளவுக்கு தனது பிரதமர் பணியில் மிகவும் ‘பிஸி’யாக இருந்த பிரதமர் மன்மோகன் சிங் ஒருவழியாக தனது மௌன விரதத்தை இன்று கலைந்தார்.

ஆனாலும் நம்ம ஊர் கமல்ஹாசன் ஸ்டைலில் , தான் பேசியதில் இருந்து எந்த வித தகவல்களும் திரட்ட முடியாதபடி, ஒரு முடிவுக்கு வர முடியாதபடி குழப்பமான பேச்சாகவே அது அமையும் என்பதை நிச்சயம் அவரை தனியாக சந்திக்க வந்த அந்த ஐந்து எடிட்டர்களும் கூட அறிந்திருக்க வாய்ப்ப்பில்லை.

அவரின் பேச்சின் முக்கிய அம்சமே லோக்பால் சட்டத்தின் கீழ் வருவதற்கு நான் தயார் என்று அறிவித்திருப்பது தான். ஆனால் அதிலும் ஒரு கிடுக்குப்பிடி போட்டுத் தான் சொல்லி இருக்கிறார் மனிதர். தான் எதன் கீழ் வேண்டுமானாலும் வருவதற்கு தயார், ஆனால் இறுதி முடிவை அமைச்சரவை தான் முடிவு செய்யும் என்று சொல்லி தன்  கையில் அதிகாரம் இல்லை என்பதை அவரே நிரூபித்து உள்ளார்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக ஐந்து முக்கிய செய்தி தாள்களின் ஆசிரியர்களுக்கு அவர் பேட்டி அளித்தார், இல்லை பேசிக் குழப்பினார்.

ராகுல் காந்தி பிரதமர் ஆவாரா என்பது பற்றிக் கருத்து தெரிவித்த அவர், இளைஞர் ஒருவர் இந்திய பிரதமர் ஆவது மகிழ்ச்சி தான் ஆனால் இது குறித்து எந்த கருத்தும் கூறுவதற்கில்லை.
முடிவுகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு முடிவு செய்யும் என்று கூறி விட்டார்.
காங்கிரஸ் எப்படி செயல்படும் என்பது நமக்கு தெரியாதா என்ன? உள்ளூர் கட்சி நிர்வாகிகளே மேலிடத்தில் இருந்து வரும் உத்தரவின் பேரில் தான் நியமனம் செய்யப்படுகிறார்கள். அப்புறம் இது மட்டும் எப்படி?

ராம்தேவ் தாக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமாக நடந்து விட்டது என்று சொல்லி அதை தவிர வேறு வழியில்லை என்றும் கூறி குழப்பி விடுகிறார்.

ஒரு விஷயத்தை மட்டும் குழப்பமின்றி சொல்ல அவருக்கு அறிவுருதப்பட்டிருக்குமோ?
அது
விரைவில் அமைச்சரவை மாற்றம்…
தயாநிதி மாறன் அவுட்??

நமக்கு எதுக்கு வேண்டாத சங்கதி?