kannadhasan

பகுதி 3

காமராஜருக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த உறவு அற்புதமானது. இது குறித்து கண்ணதாசன், “”காமராஜரை நான் தாயாகப் பார்த்தேன். தந்தையாகப் பார்த்தேன். தெய்வமாகப் பார்த்தேன். அதன்பிறகுதான் தலைவனாகப் பார்த்தேன் என்று மனமாரச் சொன்னவர், காமராஜரைப் பற்றி வியந்து வியந்து பாடல் எழுதியவர். அவர் எழுதிய இந்தப் பாடல் காமராஜரின் வாழ்க்கையின் சுருக்கம் என்றே சொல்லலாம்.
தங்கமே! தன்பொதிகைச் சாரலே! தண்ணிலமே!
சிங்கமே! என்றழைத்துச் சீராட்டுத் தாய் தவிரச்
சொந்தம் என்று ஏதுமில்லை!
துணையிருக்க மங்கையில்லை!
தூய மணி மண்டபங்கள், தோட்டங்கள் ஏதுமில்லை!
ஆண்டி கையில் ஓடிருக்கும்,
அதுவும் உனக்கில்லையே!
கண்ணதாசன் வீட்டில் அசைவம் சமைக்கப்பட்டால் காமராஜர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். இரவு நேரங்களில் இருவரும் சந்தித்தால் நேரம் போவதே தெரி யாமல் பேசுவார்கள். நாகர்கோவில் தேர்தல் பிரசாரத்தை முன்னின்று நடத்தி வெற்றி தேடிக் கொடுத்தவர் கண்ண தாசன். கண்ணதாசன் மது அருந்துவார் என்பது அனை வருக்குமே தெரியும். ஆனால் “மது அருந்துபவர்கள் காங் கிரஸ் உறுப்பினர்களாக இருக்கக்கூடாது என்று காங்கிரஸ் கட்சி நிபந்தனை விதித்தது. அப்போது கண்ண தாசனை அழைத்துப் பேசினார் காமராஜர்.
“”கண்ணதாசா, இந்த சனியன் மதுவை விட்டுத் தொலை. இதனால உன்னைப் பத்தி தப்பாப் பேசுறாங்க. பார் என்று கேட்டுக் கொண்டார். உடனே, கண்ணதாசன் எல்லோரும் சொல்வதுபோல, சினிமா உலக அவசரம், சிக்கல், வீட்டுப்பிரச்னை போன்ற வற்றைச் சொல்லி, “அதுக்காத்தானே குடிக்கிறேன். அதுவும் பெர்மிட் வாங்கித் தானே குடிக்கிறேன் என்று சமாதானம் சொல்லிப் பார்த்தார். ஆனாலும் காமராஜர் விடுவதாக இல்லை. “அட.. விட்ருப்பா என்றார். யோசித்த கண்ண தாசன், “”சரி விட்டுர்றேன்… குடிக்கிறதை இல்லை. காங் கிரஸ் கட்சியை என்றபடி கிளம்பினார். காமராஜர் பெரிதாகச் சிரித்து தலை அசைத்தார்.
காமராஜர் மீது திடீரென கோபம் கொள்வது, அப்புறம் சேர்ந்து கொள்வது என்று பிள்ளை விளையாட்டு போலவே இருவருக்கும் உறவு இருந்தது. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி இருந்த கண்ணதாசன் மீண்டும் காமராஜர் அருகே வர ஆசைப்பட்டார். அந்த ஆசையைத் தான் தன் சொந்தத் தயாரிப்பில் வெளிவந்த “பட்டணத்தில் பூதம் திரைப்படத் தில் பாடலாக வடித்தார்.
“அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி… என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி என்று எழுதினார். இந்தப் பாடலைக் கேட்டதும் காமராஜர், “”கவிஞரை வரச் சொல் லுங்க என்று அழைப்பு விடுத்தார். இதைப்போலவே “பட்டிக்காடா பட்டணமா? , “கர்ணன் போன்ற படங் களிலும் காமராஜரைக் குறித்து அர்த்தம் பொதிந்த பாடல்கள் எழுதி இருக்கிறார். காமராஜர் மரணம் அடைந்த நேரத்தில் கண்ணதாசன் இந்தியாவில் இல்லாததால் உடனே வர இயலவில்லை. அதற்குப் அவருடைய சமாதிக்குச் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
காமராஜரின் நினைவாக நடந்த ஒரு கூட்டத்தில் பேசினார் கண்ணதாசன்: “லட்சக்கணக்கானவர்கள், பேராசிரியர்கள், கலைஞர்கள், அரசியல்வாதிகள் என்னைப் பாராட்டி இருக்கிறார்கள். அவர்கள் எப்படிப்பட்ட வார்த்தைகளால் என்னை அலங்கரித்தார்கள் என்பதை நான் மறந்துவிட்டேன். ஆனால், “காட்டு ராஜா சிங்கம்! கவிதைக்கு ராஜா கண்ணதாசன்! என என் தலைவர் காமராஜர் புகழ்ந்து கூறிய அந்த மொழிகள் ஒரு கல்வெட்டாக என் நெஞ்சம் ஏற்றுக் கொண்டு இருக்கிறது.
என் பிறந்த நாளை அவரும், அவர் பிறந்த நாளை நானும் என்றென்றும் நினைவில் வைத்திருப்போம். ஜூன 24ம் தேதி முதல் டெலிபோன் அவரிடம் இருந்து எனக்கு வரும். அதைப்போல ஜூலை 15 அவருக்குச் செல்லும் முதல் போன் என்னுடையதாக இருக்கும்.
நான் ஒரு முறை பெத்தடின் ஊசிக்கு அடிமையாக இருந்தேன்.அப்போது காமராஜர், “அந்த ஊசி எத்தனை மோசமானது. தெரிஞ்சும் இப்படிப் பண்றானே… இந்தப் பாவிக்கு யார் புத்தி சொல்றது? என்று பதறியதை நான் அறிவேன். ஆன்மீகத்தில் எனக்கு கண்ணபிரான் பிடித்த மானவர். அரசியலில் காமராஜர். தமிழ்நாட்டின் தேசிய பாரம்பரியத்தின் அந்தக் கடைசி மணி மண்டபமும் உடைந்துவிட்டது. இதுவரை என் துயரங்களை எல்லாம் அவரிடம் சொல்லி அழுதிருக்கிறேன். இனி யாரிடம் சொல்லி அழுவது? என்று கதறினார்.
காமராஜர் பிறந்த தின விழாவை சிறப்பாகக் கொண் டாட விரும்புவார் கண்ணதாசன். அதன்ஒரு பிரதிபலிப் பாகத்தான் தொடர்ந்து 36 கூட்டங்கள் நடத்தி காமராஜர் புகழ் பாடினார். காமராஜர் பிறந்தநாளுக்காக அவர் எழுதி யிருக்கும் பாடல்கள் காலத்தால் அழியாதவை. அவர்கள் இருவருடைய நட்பு போல, என்றென்றும் நிலைத்திருக்கக் கூடியது.

 

——————————————————————————–

ஒரு வகையில் 60 வயது கடந்தவர்களை பார்க்கும் போது பொறாமையாக இருக்கும். ஏன் என்றால் அவர்கள் எல்லாம் காமராசர் என்னும் மனிதம் நிரம்பிய மனிதரை முதலமைச்சராய் பெற்று இருந்தார்கள்.

இன்றைக்கு இருக்கும் என்னை போன்ற இளைஞர்கள் காமராசரை பற்றி படிக்கும், தெரிந்து கொள்ளும் ஒவ்வொரு விஷயமும் எதோ கதை போல தான் உள்ளது. என்ன செய்வது சூப்பர்மேன்களும், சூப்பர்ஸ்டார்களும் நிறைந்த உலகில் சாதாரணமான மக்கள் சேவை புரிபவர் எவரும் இல்லையே.

இதை ஒரு தொடராக தொகுக்க இருக்கிறோம். தங்களுக்கு தெரிந்த நிகழ்வுகளை இங்கே பிரசுரிக்க [email protected] என்ற மின்னஞ்சலில் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

காமராசர் வாழ்க்கை சரித்தரம் அல்ல இது, அவரை பற்றி எங்களுக்கு கிடைத்த தகவல்களை தொகுத்து தர இருக்கிறோம்.

எச்சரிக்கை : தயவு செய்து காமராசரை யாரும் இப்போது உள்ள அரசியல்வாதிகளுடன் ஒப்பிட்டு தங்கள் மனதை புண்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

0 Shares:
Like 0
Tweet 0
Pin it 0
Leave a Reply
You May Also Like
Read More

முடி உதிர்வதற்கான சிகிச்சை

ஒரு நாளைக்கு சாதரணமாக 80-100 முடி உதிர்வது வழக்கமே.ஆனால் அதற்கும் மேலாக முடி உதிர்ந்தால் அது கவலைக்குரியது,மற்றும் கவனிக்க வேண்டிய விஷயம். முடி உதிரக்…
Read More

திமுக தேர்தல் அறிக்கை – என்ன என்ன இலவசம்?

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார். 72 பக்கங்களை உள்ளடக்கிய இது அனைவரின் கவனத்தையும்…
Read More

எது உண்மையான தமிழ் புத்தாண்டு?

எது உண்மையான தமிழ் புத்தாண்டு என்பது ஒரு விவாதத்திற்கு உரியதாகவும், அரசியலாகவும் மாறி உள்ளது மிகவும் வருந்தப்பட வேண்டிய ஒரு நிலை.   தனி மனிதனாக…
Read More

சரும பராமரிப்பு

 தோல் சுருக்கம் மறைந்து என்றென்றும் இளமையுடன் திகழ்வதற்கு ,   * முதலில், 3 முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கி கொள்ளவும். ஒரு தேக்கரண்டி தேன்,…
Read More

ஜெயலலிதா, கருணாநிதி – யார் பெரிய பணக்காரர்?

ஜெயலலிதாவுக்கு ரூ.118.58 கோடி சொத்தும், கருணாநிதிக்கு அசையா சொத்துக்கள் இல்லையெனவும், ஆனால் மனைவி, துனைவி ஆகியோர் பெயரில் ரூ. 62.99 கோடி சொத்து உள்ளதாக,…
Read More

பாகுபலி-2

இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகளில் பிஸியாக இருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி. இந்நிலையில் ‘பாகுபலி’யின் க்ளைமாக்ஸ் காட்சியில் கதை நாயகன் பாகுபலியை ‘கட்டப்பா’ சத்யராஜ் கொல்வதாக…