வினவியதும் நானே.. விளக்குவதும் நானே..

0
13
கட்சி தொடங்கியதில் இருந்து கொள்கை மாறாமல் இருப்பது தி.மு.க தானே?

அதிலென்ன சந்தேகம் நிச்சயமாக..
தமிழை வளர்ப்போம், வறுமையை ஒழிப்போம் என்று எழுபதுகளில் சொன்னவர்கள்
இன்னும் அதையே தான் சொல்லி கொண்டு இருக்கிறார்கள் என்றால் பருங்களேன்..!

இலவசங்களால் மக்கள் சோம்பேறி ஆகிறார்கள் என்றவர்கள் இன்று இலவச மழை பொழிகிறார்களே?

வெறும் சோம்பேறி ஆனால் போதாது. மகா சோம்பேறியாக மக்களை மாற்ற வேண்டும் என்று எண்ணி இருப்போர்களோ.

குற்றம் நிரூபணமானால் ராசா கட்சியை விட்டு நீக்கப்படுவார் என்று கலைஞர் கூறி இருக்கிறாரே?

ம்ம்மே… அவர்களுக்கு கிடைத்த ஆடு இவர் தான்..

வைகோ இந்த தேர்தலை புறக்கணித்தது சரியா?

ஆனானப்பட்ட விஜய.டி.ராஜேந்திரே இந்த தேர்தலை புறக்கணிக்கிறார்.

வெங்காயம், காய்கறி விலைகள் குறைந்துள்ளதே?

ஏப்ரல் 13 இன்னும் முடியலையே

இந்தியா உலக கோப்பையை வென்று விட்டதே?

நிஜமாகவா? போலியாகவா?