ஆம் ஆத்மி தேசிய நடவு செய்ய துணிவு

0
69
அரவிந்த் கெஜ்ரிவால் , டெல்லி சட்டசபை தேர்தலை வென்ற
கையோடு தேசிய  அளவிலும் போட்டியிட முடிவு செய்து இருக்கிறார். மிக நிதானமாக வேட்பாளர் தெரிவு இருக்காவிட்டால் மற்ற அரசியல் கட்சிகளை போல இதிலும் களை கட்டி விடும். இப்போது தான் நாற்று துளி விட ஆரம்பித்து இருக்கிறது, கொஞ்சம் பார்த்து நடவு
செய்தால் தான் நல்ல வேட்பாளர்கள் கிடைப்பார்கள். இல்லையேல் பத்தோடு பதினொன்று ஆகி
விடும் ஆம் ஆத்மி.


கட்சி
துவக்கி, ஓராண்டுக்குள், டில்லி
சட்டசபையை கைப்பற்றியுள்ள, அரவிந்த் கெஜ்ரிவால்
தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சியின் அடுத்த
இலக்கு, லோக்சபா தேர்தல் தான்.
இன்னும், மூன்று, நான்கு
மாதங்களில் வரவுள்ள லோக்சபா தேர்த லில், பெருவாரியான இடங் களில்
வெற்றி பெற்று, மத்தியிலும் ஆட்சியை அமைப்பதே, நோக்கம்
என, அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிவித்துஉள்ளனர்.
தொடர்ந்து, மூன்று
முறை வெற்றி பெற்று, டில்லி முதல்வராக இருந்த, காங்கிரசைச்
சேர்ந்த, ஷீலா தீட்ஷித்தை வீழ்த்தி, டில்லி
சட்டசபையை கைப்பற்றியுள்ள, ஆம் ஆத்மி கட்சித் தலைவர், அரவிந்த்
கெஜ்ரிவாலுக்கும், அவர் கட்சிக்கும், நாடு
முழுவதும் வரவேற்பு பெருகியுள்ளது. அந்தக் கட்சியின் பிரசார யுக்திகளை, பிற
கட்சிகளும் பின்பற்றத் துவங்கியுள்ளன. சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும், பல
மாதங்களாக, தங்கள் வாகனத்தில்
பொருத்தியிருந்த, சுழலும், சைரன்
சிவப்பு விளக்கை அகற்ற மறுத்த, அதிகாரிகள், அமைச்சர்கள்
பலர், இப்போது, அகற்றத்
துவங்கிஉள்ளனர்.
மின் கட்டணம் குறைப்பு: @@நாட்டின்
தலைநகரான, டில்லியில், இரண்டு
நாட்களில், மின் கட்டணத்தை, 50 சதவீதம்
குறைக்க முடிந்துள்ள நிலையில், மும்பையில் ஏன் முடியாது? என, கேள்வி
எழுப்பியுள்ளார், மும்பையைச் சேர்ந்த, காங்கிரஸ், எம்.பி., சஞ்சய்
நிருபம்.அது போல், பலரும், பல
மாநிலங்களில், ஆம் ஆத்மி மற்றும்
அக்கட்சியின் அதிரடி நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி, தங்கள் மாநிலங்களிலும்
கோரிக்கைகளை முன்வைத்து உள்ளதால், ஆட்சியில் உள்ளகட்சிகள், அதிர்ச்சி
அடைந்துள்ளன.இதனால், அந்தக் கட்சிகளின் மதிப்பு, பெருமை
குலைந்து வருவதையும், அந்த மாநிலங்களில், ஆம்
ஆத்மிக்கு மதிப்பு உயர்ந்து வருவதையும் காண முடிகிறது.காற்றுள்ள போதே தூற்றிக்
கொள் என்ற பழமொழிக்கு ஏற்ப, சூட்டோடு சூடாக, லோக்சபா
தேர்தலிலும் போட்டி யிட்டு, வெற்றி பெற்று, மத்தியிலும்
ஆட்சியைக் கைப்பற்றி விட, அக்கட்சித் தலைவர்கள் முடிவு
செய்துள்ளனர்.லோக்சபா தேர்தலில் போட்டியிட, அக்கட்சியின் முன்னணி
தலைவர்கள், வெளிப்படையாக விருப்பம்
தெரிவிக்காத நிலையில், போட்டியிட தங்களுக்கு
வாய்ப்பு வழங்க வேண்டும் என, ஆம் ஆத்மியிடம் கேட்டு, 73 ஆயிரம்
விண்ணப்பங்கள் வந்துள்ளதாக, அக்கட்சியின் முக்கிய தலைவரான, பிரபல
வழக்கறிஞர், பிரஷாந்த் பூஷன் தெரிவித்து
உள்ளார்.
இது குறித்து அவர் மேலும்
கூறுகையில், ஆம் ஆத்மிக்கு, டில்லி
மட்டுமில்லாது, நாடு முழுவதும் வரவேற்பு
பெருகி வருகிறது. எங்களின் செயல்பாட்டில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
எனவே, லோக்சபா தேர்தலில், 545 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளோம். அதற்காக வந்துள்ள
விண்ணப்பங்களை பரிசீலித்து வருகிறோம், என்றார்.
இலவச குடிநீர்: @@ஒவ்வொரு
தேர்தலிலும், இந்த கட்சி ஆட்சிக்கு வந்தால், தங்களுக்கு
நல்லது செய்ய மாட்டார்களா… என, ஏங்கும் மக்களுக்கு, நம்பிக்கை
ஏற்படுத்தும் விதத்தில், ஆம் ஆத்மியின் செயல்பாடு
உள்ளது.டில்லியில், ஆட்சிக்கு வந்த சில
நாட்களிலேயே, வீட்டுக்கு, 700 லிட்டர் தண்ணீர், 50 சதவீத மின் கட்டண வெட்டு, மெட்ரோ
ரயிலில், அமைச்சர்கள் பயணம், போலீஸ்
பாதுகாப்பு இல்லாத முதல்வர், சாதாரண வீட்டில்
குடியிருக்கும் அமைச்சர்கள், சிவப்பு சைரன் விளக்கு
பொருத்தாத அமைச்சர்கள் என, இந்தக் கட்சியினரின்
வித்தியாச செயல்பாடு, நாடு முழுவதும் பெரும்
எதிர்பார்ப்பு அலையை ஏற்படுத்தி உள்ளது.அதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், டில்லி
சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, முதல்வர், அரவிந்த்
கெஜ்ரிவால் பேசியது, அனைவருக்கும், வித்தியாச
உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
லோக் ஆயுக்தா:@@நாங்கள்
ஆட்சி அமைக்கவில்லை; சாதாரண, சாமானிய
மக்கள் தான் ஆட்சி அமைத்துள்ளனர். சிறுபான்மையினராக உள்ள எங்களை தோற்கடித்து, வீட்டுக்கு
அனுப்பினால், அந்த சாமானிய மக்களிடமே
மீண்டும் போய் நிற்போம். தேர்தல் வந்தால், அதிக இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும்
ஆட்சி அமைப்போம் என்றார்.அவரின் உறுதியான பேச்சு, நம்பிக்கை, செயல்பாடு, நாடு
முழுவதும், பெரிய எதிர்பார்ப்பை
ஏற்படுத்தியுள்ளது.இதை, வாய்ப்பாக பயன்படுத்தி, மத்தியிலும்
ஆட்சி அமைக்க, அக்கட்சியினர் நினைப்பதில், எந்த
தவறும் இல்லை. டில்லியுடன் சுருங்காமல், நாடு முழுமைக்கும் ஆட்சி
பரிபாலனம் செய்யும் அவர்களின் எண்ணத்திற்கு,ஆதரவும் பெருகியுள்ளதும்
உண்மை தான்.லோக்ஆயுக்தா சட்டம் உட்பட, மீதமிருக்கும், தேர்தல்
வாக்குறுதிகளையும் அவர் நிறைவேற்றும் போது, அவரின் புகழும், அவர்
மீதான எதிர்பார்ப்பும், அதிகரிக்கும். அது, அடுத்த, ஆறு
மாதங்களில், நாட்டில் பெரிய அளவில்
மாற்றத்தை கொண்டு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அதனால்
தான், பல துறை வல்லுனர்களும், அக்கட்சியில்
இணைந்த வண்ணமாக உள்ளனர்.
15 நாளில் வேட்பாளர் பட்டியல்:@@லோக்சபா
தேர்தல் தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய
செயற்குழு நேற்று, டில்லியில் கூடி விவாதித்தது.
அதில், வரும் லோக்சபா தேர்தலில், கட்சி
சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை, இன்னும் இரண்டு வாரங்களில்
வெளியிட, முடிவு செய்யப்பட்டது.இது
குறித்து, அக்கட்சியின் முக்கிய
தலைவர்களில் ஒருவரான, யோகேந்திர யாதவ் கூறுகையில், “டில்லி
சட்டசபை தேர்தல் வெற்றிக்குப் பிறகு, எங்கள் கட்சியின், தேசிய
செயற்குழு கூடி விவாதித்தது. அதில், லோக்சபாதேர்தலில்
போட்டியிடுவது குறித்தும், வேட்பாளர் தேர்வு குறித்தும்
விரிவாக விவாதிக்கப்பட்டது,” என்றார்.பத்திரிகையாளர்களை
சந்தித்த, கட்சித் தலைவர், அரவிந்த்
கெஜ்ரிவால், “அதிகபட்சம், 15 நாட்களுக்குள், எங்கள்
வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படலாம், என்றார்.
பகிர்ந்து
முந்தைய செய்திதைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்..!
அடுத்த செய்திதன்மானம்
வலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.

உங்கள் கருத்தை தெரிவிக்க