தாக்கப்படும் தலைநகரங்கள்..!

3
20
இந்தியா,உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு,வளரும் நாடுகளில் பொருளாதார பலம் பொருந்திய நாடு, ஐ.நா சபையில் நிரந்தர உறுப்பினர் ஆகப்போகும் நாடு…

போதும் நிறுத்தும் ஓய் உம்ம பெனாத்தல.. இங்க பக்கத்துல எங்கேயோ குண்டு வெச்சி இருக்காளாம்..வெடிக்கப் போவுதாம்.. நாழி ஆறது சீக்கிரம் ஓடுங்கோல்…

அமைதிக்கு ஆண்டவன் உருவாக்கிய நாடு என்று எவரேனும் இந்தியாவை இனி சொன்னால் அமைதியின் பொருள் அகராதியில் மாறி விட்டதா என்று ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

எந்த தற்காப்பு கலையை எடுத்துக் கொண்டாலும்,எதிரியை வீழ்த்த வேண்டுமெனில் முதலில் அவன் தலையை தாக்க வேண்டும் என்பது என் போன்றவருக்கே தெரிந்திருக்கும் பொது நிச்சயம் உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

இந்தியாவிற்கு இரண்டு தலைகள் உள்ளன.
ஒன்று வணிக தலைநகரம் மும்பை,
மற்றது ஆட்சி தலைநகரம் டெல்லி.

எத்தனை தலை இருந்தால் என்ன,அத்தனையும் அசைத்து பார்க்கும் அளவுக்கு பலவீனமான நாடு தானே? என்னும் அளவிற்கு இந்தியா மோசமாகிப் போனதை நினைக்கும் போது வருத்தப்படுவதா,கோபப்படுவதா என்று புரியவில்லை.
கோபப்படுவது என்றால் யார் மீது,
பொறுப்பில்லாத போலீஸ் மீதா,
அக்கறை இல்லாத அரசாங்கம் மீதா,
திருந்தாத தீவிரவாதிகள் மீதா,
எதையும் பொருட்படுத்தாத எம் மீதேவா?

ஆனால் ஒன்று உறுதி, இனி வருத்தப்பட்டோ கோபப்பட்டோ எந்த பயனும் இல்லை. சென்ற உயிர் மீளப் போவதும் இல்லை. பிரிந்த உடல் பாகங்கள் இணையப் போவதும் இல்லை.
ஆனாலும் இந்த விவகாரத்தில் வருந்த வேண்டியதை விட திருந்த வேண்டியது அவசியம் என்பதை நீங்களும் நானும்,அரசன் முதல் ஆண்டி வரை உணர வேண்டும்.

எப்படி ஒரு திரைப்படம் நன்றாக இருக்க ஹீரோ முதல் அடி பொடிகள் வரை திறம்பட செயல்பட வேண்டுமோ அது மாதிரி தான் தீவிரவாதத்தை தீர்க்க வேண்டுமாயின் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து மக்களும் அதற்கு எதிராக திரும்ப வேண்டும்.

இதில் சகிக்க முடியாத விஷயம் என்னவென்றால்,
எங்கு எப்போது இந்த மாதிரி சம்பவம் நடந்தாலும்,

அரசாங்க அதிகாரிகள்-போலீஸ் : சம்பவம் தொடர்பாக விசாரணை நடக்கிறது. கூடிய விரைவில் குற்றவாளிகள் தண்டனைக்கு உள்ளாவார்கள்.
இனிமேல் இது போன்றவை நடைபெறாத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்படும். என்றும்,

ஆட்சியாளர்கள் : குண்டுவெடிப்புக்கு உள்ளான பகுதி தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உட்பட்ட இடங்களில் ஒன்று என கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் தீவிரவாதம் ஒழிக்கப்பட நாட்டு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். அணி மேலும் அரசு இந்த விசயத்தில் மென்மையான போக்கை கடைபிடிக்கிறது. என்றும்,

அரசியல்வாதிகள்  மருத்துவமனைக்கு செய்தி அலைவரிசைக்காரர்களை கூடவே அழைத்து சென்று ஆறுதல் சொல்வதும்,
தொலைகாட்சி நிறுவனங்கள் இல்லாதது பொல்லாததை எல்லாம் திரித்து விடுவதும்,
எதிர் கட்சிகள் பிரதமர்,உள்துறை அமைச்சர் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்பதும்,
ஆளுங்கட்சி இது போன்ற சம்பவங்கள் முந்தைய ஆட்சியிலும் நடந்ததாக பழையதை கிளறுவதும்,
வாடிக்கையாகி பொய் விட்டன.
இதெல்லாம் ஏதோ டெம்ப்லேட்கணக்காய் வைத்து இருக்கிறார்கள்.

டெல்லி உயர் நீதி மன்றத்திற்கு அருகில் வெடித்திருக்கும் இந்த குண்டுகள் இந்தியாவிற்கு கொடுக்கப்பட்ட சாட்டையடி.
இந்தியா என்பது ஏதோ அந்நிய தேசம் இல்லை; நாம் வாழும் நாடு.
நம் உடலின் ஒரு பகுதியில் காயம் ஏற்பட்டால் மற்றது துடிப்பதை போல நமக்கு ஒரு நாளும் இது குறித்து எந்த ஒரு உணர்வும் வந்ததில்லை இது போன்ற விஷயங்களிலே.
இந்நிலை மாறும் வரை இதெல்லாம் நடந்து கொண்டு தான் இருக்கும்.
நீ எப்படி மற்றவர் என்று ஒதுங்குகிறாயோ அப்படி தான் உன்னை மற்றவரும் ஒதுக்குவர் என்பதை நினைவில் நிறுத்தி ஒன்றுபட்டு ஒழிப்போம் இந்த தீவிரவாத அசுரனை.

“எல்லாம் சரி அஜித்தின் மங்காத்தா நன்னாருக்கே இன்னோ… நாளைக்கு காலம்பர ஷோக்கு ரெண்டு டிக்கெட் வாங்கிடட்டா…”

பகிர்ந்து
முந்தைய செய்திசுஜாதா பிரியர்களுக்காக… ஒரு நாள் ஒரு கோப்புறை – 06/09
அடுத்த செய்திதிறமைக்கு மரியாதை.. எதார்த்தத்தின் எல்லைக்கல்
வலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.