மேட்ச் பிக்சிங் – அரசியலில்…!

0
66
யார் வெற்றி பெற வேண்டும், எந்த பந்தில் எத்தனை ரன் , எப்போது நோ பால் என்பதை முன் கூட்டியே முடுவு செய்து பணத்திற்காக விளையாடும் வீரர்கள் மட்டும் தான் பிக்சிங் செய்கிறார்களா என்றால் இல்லை.
இதோ அரசியலில் அதை எல்லாம் ஓரங்கட்டி விட்டார்கள்.குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்பதை டார்வின் நிரூபித்து ஒரு நூற்றாண்டு கழிந்த பின்பும் மீண்டும் மீண்டும் நிரூபித்து கொண்டு இருக்கிறார்கள் நம்மவர்கள்.

“தனித்து தான் நிற்பேன் யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன்.”
“என் கூட்டணி கடவுளுடனும் மக்களுடனும் தான்”
என்றெல்லாம் பேசியவர் இன்று கூட்டு வைத்து கொள்கிறார்.
இவர் இப்படி என்றால் “என் கூட்டணி வெற்றி பெரும் அணியுடன் தான்” என்று சொல்லி விட்டு எந்த அணி என்றால் அது இன்னும் முடிவாகவில்லை என்றார் ஒருவர். அவரோ யாரோடு என் கூட்டணி அமையாது என்றாரோ அங்கேயோ சென்று சேர்ந்து விட்டார்.

முதலில் எல்லாம் இலைமறைகாயாக நடந்து வந்த சாதி அரசியல் இப்போது வெட்ட வெளிச்சமாக நடக்க தொடங்கி விட்டது.
” இத்தனை கோடி பேரில் இத்தனை சதவீதம் இருக்கும் நம் மக்களே ” என்று தன் சாதி ஓட்டுக்களை வைத்து அரசியல் செய்யும் இவர்களுக்கு தான் கடைசியில் ஓட்டு போடுகிறான் நம் தொண்டன்.
 கடைசியில் வெற்றி பெற்றவன் நாட்டுக்கும் எதுவும் செய்வதில்லை,தன் சாதிக்கும் ஏதும் செய்வதில்லை. தன் செல்வத்தையும் செல்வாக்கையும் மட்டும் பெருக்கி கொள்கிறான்.

2006 தேர்தலில் முதன் முதலாக களம் கண்ட அந்த நடிகரின் கட்சி ஏதோ ஒரு கட்சியின் வாக்குகளை பிரித்து விட்டார். அதனால் தான் தோல்வி இவர்களை சேர்ந்தது என்றெல்லாம் பேசினார்கள்.
ஆனால் ஒரு அடிப்படை உண்மை அங்கே புதைந்து போய் விட்டது. இரு கழகங்களின் ஆட்சியை  பார்த்து பார்த்து வெறுத்து போன மக்கள், ஒரு மாற்று சக்தி வந்தாலாவது ஏதாவது மாற்றம் நடக்காதா என எண்ணியவர்களின் வாகு தான் அவர் கட்சிக்கு போனது.
இந்நிலையில் இப்போது அவர்  கூட்டணி அமைத்து கொண்டு களத்தில் இறங்குகிறார்.இதனால் தன்னை ஒரு மாற்று சக்தியாக யாரேனும் கருதினால் கருதி இருந்தால் அதெல்லாம் எதுவும் கிடையாது என்பதை அவர் நிரூபித்து உள்ளார். கடந்த முறை இவருக்கு வாக்கு செலுத்திய அந்த 8 சதவீத மக்களின் வாக்கு கூட இவருக்கு இந்த முறை கிடைக்குமா என்பது ஐயமே.
இருப்பினும் என்ன தான் கென்யாவாக இருந்தாலும் எதிரணி எக்கசக்கமாய் மாட்டி கொண்டால் வெற்றியும் கொண்டாட்டாமும் கிடைக்கும் தானே.

நிச்சயமாய் இப்படி தான் இருக்கும் என்று ஒருவரின் மனநிலையையே கணிக்க முடியாது ஆறு கோடி பேரின் மனநிலையை கணிப்பது ஒன்றும் அவ்வளவு எளிதல்லவே.
எது எப்படியாயினும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கிடைக்கும் இந்த வாய்ப்பை வழக்கம் போல எதாவது ஒரு விலைக்கு விற்று விடாமல் இருந்தால் சரி தான்.

பகிர்ந்து
முந்தைய செய்திமெய்யும் பொய்..! பொய்யும் மெய்..!
அடுத்த செய்திவாலியின் உருக்கும் வரிகள்..
வலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.