ஜன் லோக்பால் அவசியம் வேண்டுமா?

4
14
ஜன் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டி நாடே கொதிக்கிறது – எந்த தொலைக்காட்சி அலைவரிசையை திருப்பினாலும் இதே தான்.
உண்மையிலேயே அப்படி என்ன மாறுதல் வந்து விடும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்?
பிரதமர் உள்ளிட்ட நாட்டின் எந்த பெரிய பதவியில் இருப்பரும் ஊழல் செய்தால் தண்டனை கிடைக்கும் அதுவும் ஒரே வருடத்தில்.
ஜன லோக் பாலின் அடிப்படை நாதமே இது தான்.

ஆனால் ஒன்றை நாம் மறந்து விட்டோமோ என்று எனக்கு தோன்றுகிறது. இப்படி ஒரு கடுமையான சட்டம் தேவை தான். ஆனால் இது நிறைவேற்றப்பட்டால் கோடிக்கணக்கான வாக்காளர்கள் தேர்ந்தெடுத்த பிரதம அமைச்சரை ஒரு பத்து பேர் கொண்ட நியமன அடிப்படையிலான குழு விசாரித்து தண்டனை கொடுக்க முடியும் என்றால் அடிப்படை ஜனநாயகமே அடிபட்டு போகிறதே.
சரி அதை விடுங்கள் அந்த குழுவில் இருப்பவர்களும் மனிதர்கள் தான் அவர்கள் ஒன்றும் எப்போதும் நல்லவர்களாக இருக்கும் படி ப்ரோக்ராம் செய்யப்பட்ட எந்திரங்கள் அல்ல. எனவே அவர்களும் ஊழலில் ஈடுபடக்கூடும்.

இப்படி இருக்கும் போது எந்த அடிப்படையில் லோக்பால் மசோதாவிற்கு இவ்வளவு ஆதரவு?
அண்ணா ஹசாரே நாட்டு மக்களின் நலனில் ஆர்வம் கொண்டவர். அவர் சொல்வது சரியாக இருக்கும் என்று நம்பி தானே இத்தனை பேரும் ஆதரிக்கிறார்கள். ஆனால் இவருக்கு பியன் வருபவர்கள் எல்லோரும் இப்படியே இருக்க மாட்டார்கள் என்பது திண்ணம்.

நம் நாட்டில் நேரு,காமராசர் போன்றோர் எல்லாம் ஆட்சிக் கட்டிலில் இருந்தார்கள். அதற்காக அது போன்ற நல்லவர்களே இன்றுள் தொடர்கிறார்களா என்ன?
சிந்தனையை தட்டுங்கள்.
லோக்பால் மசோதா வேண்டும் தான் ஆனால் அதி சக்தி வாய்ந்த லோக்பால் இப்போதைக்கு நாட்டிற்கு நல்லதல்ல என்று நான் கருதுகிறேன்.

தங்கள் கருத்துகளை பகிரவும்.