தமிழகம்

எது சிறந்த பள்ளி?

2 வருஷம், 14 மணி நேரம் ஸ்கூல் 1100+ வாங்குற தனியார் பள்ளிகளை விட,  1 வருஷம் 8 மணி நேரம் ஸ்கூல் 1100+ வாங்குற அரசு பள்ளிகள் பல மடங்கு மேல்தான் மதிப்பெண் மட்டுமே இலக்காக வைத்து பிராய்லர் கோழிகளை நாம் உருவாக்கவில்லை நமது அரசுப்பள்ளியில் படித்த செல்வங்கள் எல்லாம் தனக்கான வாழ்வை தன்னியல்பாக  அமைத்துக் கொள்வார்கள் பூக்கடைக்கு விளம்பரம் எதுக்கு? வாட்ஸ்ஆப் வழி இதனை படிக்கும் போது நிச்சயம் உண்மை எனவே பட்டது. அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்

என்ன இனிமே தான் கத்திரி வெயிலா?

அக்னி நட்சத்திரம் என்றழைக்கப்படும் கத்திரி வெயில் வியாழக்கிழமை (மே 5) தொடங்கவுள்ளது. இதனால், வெப்பத்தின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மேற்கு திசையில் இருந்து காற்று வீசியதாலும் கடல் காற்று உருவாக தாமதித்ததாலும் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் கடந்த வாரத்தில் அதிகரித்தது. அதிகபட்சமாக வேலூரில் 111 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் வரை பதிவானது. இதையடுத்து, தெற்கு, தென்கிழக்கு பகுதியில் இருந்து ஈரப்பதமான காற்று வீசத் தொடங்கியதையடுத்து வெப்பத்தின் தாக்கம் சற்று குறையத் தொடங்கியது. இருப்பினும் கோடை காலத்துக்கான இயல்பான வெப்பநிலை சராசரியாக 98 முதல் 100 டிகிரி வரை பதிவாகி வருகிறது. கத்திரி வெயில்: கத்திரி வெயில் மே 5-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதன் காரணமாக சராசரி வெப்பத்தின் அளவு தமிழகமெங்கும் சராசரியாக 104 முதல் 106 வரை பதிவாக உள்ளது. கத்திரி வெயிலின் தாக்கம் மே மாத இறுதி வரை நீடிக்கும். இது தொடர்பாக வானிலை ஆய்வு ... Read more

யாருக்கு வாக்களிக்க வேண்டும் – சகாயம் பேச்சு

எல்லா அரசியலுக்கு அப்பாற்பட்ட தலைவர்களும் என்ன சொவர்களோ அதைத்தான் சகாயமும் சொல்லி இருக்கிறார். கட்டாயம் வாக்களியுங்கள், சிந்தித்து வாக்களியுங்கள். மாற்றத்தை அரசியலில் தேட வேண்டாம், சமூகத்தில் தான் அதை ஏற்படுத்த வேண்டும் என அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் உ.சகாயம் தெரிவித்தார். மன்னார்குடியில் ‘மன்னையின் மைந்தர்கள்’ அமைப்பு சார்பில் ‘நமது வாக்கு நமது உரிமை’ என்ற தலைப்பில் நேற்று முன்தினம் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்குக்கு அமைப்பின் தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். மருத்துவர் பாரதிச்செல் வன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்புரையாற்றிய உ.சகாயம் பேசும்போது, “மே 16-ம் தேதி நம்முடைய பங்களிப்பு சமூகத்தின் மாற்றத்துக்கான பங் களிப்பாக இருக்க வேண்டும். அதற்கு அனைத்து வாக்காளர் களும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். உலகிலேயே மிகவும் அபாயகரமானவர்கள் சமூக பொறுப்பற்றவர்கள் தான். தேர்தலில் யார் வாக்களிக்காமல் இருக்கிறார்கள் என்றால் அதிகம் படித்தவர்கள் தான். இவர்களே அநீதிக்கு காரணம். இவர்களை தான் நாம் மாற்ற ... Read more

10 இடங்களில் சதம் – கொளுத்தும் வெயில்..

தமிழகத்தில் முன் எப்போதும் அளவுக்கு வெயில் இம்முறை சுட்டெரித்து வருகிறது. ஒரே நாளில் தமிழகத்தின் பாத்து இடங்களில் நூறு டிகிரிக்கும் அதிகமாக வெயிலின் அளவு பதிவு செய்யப்பட்டு உள்ளது. முன்பெல்லாம் கடுமையான வெயிர் காலங்களில் வேலூரில் மட்டும் தான் தமிழ்நாட்டில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தும். இப்போது எல்லா இடங்களிலும் வெயிலின் கொடுமை அதிகரித்துள்ளது. வெயில் நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு, தென்கிழக்கு பகுதியில் இருந்து காற்று வீசுவதால் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. எனினும், கோடை காலத்துக்கான வெப்பம் நீடிக்கிறது. தமிழகத்தைப் பொருத்தவரை பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு இதே வெப்ப நிலை நீடிக்கும். வெப்பத்தின் அளவு சராசரியாக 98 முதல் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருக்கும். சில இடங்களில் வெப்ப சலனத்தினால் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றனர். வெள்ளிக்கிழமை பதிவான வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்): கரூர் பரமத்திவேலூர், தருமபுரி, திருப்பத்தூர், ... Read more

வெயில் அதிகமா இருக்கு கொஞ்சம் பார்த்து பண்ணுங்க – தேர்தல் ஆணையம்

அரசியல் கட்சிகள் கடும் வெப்பம் நிலவும்போது பொதுக்கூட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால் குடிநீர், மருத்துவ வசதி, கூரை அமைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்த லுக்கான பிரச்சாரத்தில் ஆளும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் பெரும் பாலான மாவட்டங்களில் அதிக வெப்பம் நிலவி வந்தாலும், அதை பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதாவை பொறுத்தவரை, கடந்த 9-ம் தேதி சென்னையில் பிரச்சார பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து 11-ம் தேதி விருதாச்சலத்திலும், 20-ம் தேதி சேலத்திலும் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார். இந்த இரு கூட்டங்களிலும் பங்கேற்ற 4 பேர் உயிரிழந்தனர். அதிமுக சார்பில், உடல்நலக் குறைவால் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால், கடும் வெயில் மற்றும் குடிநீர் கிடைக்காததால் இறந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இது தொடர்பாக, சமூக அமைப்புகள் மற்றும் திமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு ... Read more

சீட் கிடைக்காததால் விஷம் குடித்த பா.ம.க.நிர்வாகி

ஈரோடு: சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் பாமக நிர்வாகி ஒருவர் விஷம் குடித்துவிட்டார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானியை சேர்ந்தவர் கா.சு. மகேந்திரன். பாமக மாநில துணை தலைவர். பவானி தொகுதியில் போட்டியிட விரும்பி விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் பவானி தொகுதி வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. ராமநாதன் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து ராமநாதனை மாற்றி தன்னை வேட்பாளராக அறிவிக்குமாறு மகேந்திரன் கட்சி தலைமைக்கு கடிதம் அனுப்பினார். மேலும் தனது ஆதரவாளர்களை திரட்டி போராட்டங்களும் நடத்தினார். ஆனால் கட்சி தலைமை அவரது கோரிக்கையை ஏற்கவில்லை. கட்சி தலைமையின் நடவடிக்கையால் அவர் மனமுடைந்தார். கடந்த 5 ஆண்டுகளாக தொகுதி பக்கமே வராதவர் வேட்பாளர். அவர் தைலாபுரம் தோட்டத்தில் உள்ளவர்களுக்கு நெருக்கமாக இருப்பதால் சீட் அளிப்பதா? என்று கூறி மகேந்திரன் இன்று காலை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். விஷம் குடித்த அவரை குடும்பத்தினர் உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு ... Read more

தி.மு.க.தலைவர் கருணாநிதியுடன் குஷ்பூ சந்திப்பு

சென்னை: சென்னையில் இன்று திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு சந்தித்து பேசினார். திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நடுவே சட்டசபை தேர்தலில் கூட்டணி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் குஷ்பு போட்டியிட சீட் தரப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு சீட் தரப்படவில்லை. திமுக தரப்பில் இருந்து சிலர் கொடுத்த நெருக்கடிதான், அவருக்கு சீட் தரவிடாமல் தடுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் குஷ்பு இன்று சந்தித்து பேசியுள்ளார்.

ஐஐடி மாணவிகளின் வைரல் வீடியோ

சென்னை ஐஐடி மாணவிகள் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. படிக்கும் போதும், பருவ வயதிலும் பெற்றோர் பேச்சை துளியும் கேட்காத ஆண்கள், திருமணத்திற்கு பெண் தேட தொடங்கியதும் அம்மாவின் முந்தானைக்குப் பின் ஒளிந்து கொள்ளும் வழக்கத்தையும், தினமும் செய்தித்தாள்களில் வந்து கொண்டிருக்கும் மணமகள் தேவை விளம்பரங்களையும், கேலி செய்து சென்னை ஐஐடி மாணவிகள் வெளியிட்டுள்ளதுதான் இந்த வீடியோ. Call Me Maybe என்ற பாப் பாடலின் மெட்டில் இதை சென்னை ஐஐடி கல்லூரி மாணவிகள் உருவாக்கியுள்ளனர். அமிதா கோஷின் இந்த பாடல்வரிகளில் அனுக்ரிபா இளங்கோவின் குரல்வளத்தில் க்ருபா வர்கீசின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த ஆல்பத்தைக் காண…  

மதுரை மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்

  மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அருள்மிகு மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதை சுமார் 10 ஆயிரம் பேர் நேரில் கண்டு இறைவன்-இறைவியை தரிசித்தனர்.உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சியம்மன் பட்டாபிஷகம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. திங்கள்கிழமை காலையில் மரவர்ணச் சப்பரத்தில் சுவாமியும், அம்மனும் சிவகங்கை ராஜா மண்டகப்படியில் எழுந்தருளினர். பின்னர் மாசி வீதிகளில் உலா வந்து அருள்பாலித்தனர். இன்று அதிகாலை வெள்ளிச் சிம்மாசனத்தில் சித்திரை வீதிகளில் எழுந்தருளி, முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி, பின் திருக்கல்யாண மண்டபத்துக்கு புறப்பாடாகினர்.மேல, வடக்கு ஆடி வீதி சந்திப்பில் அமைந்துள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இன்று காலை 8.30 மணி முதல் 8.54 மணிக்குள் ரிஷப லக்னத்தில் மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது திருப்பரங்குன்றம் அருள்மிகு பவளக்கனிவாய்ப் பெருமாள், அருள்மிகு சுப்பிரமணியசாமி, தெய்வானை ஆகியோர் எழுந்தருளினர்.முன்னதாக திங்கள்கிழமை இரவு இந்திர ... Read more

நட்சத்திர கிரிக்கெட் பார்க்க வந்த கூட்டம் குறைவுதான் ,ஆனாலும்

நடிகர் சங்க கட்டடம் கட்ட நட்சத்திர கிரிக்கெட் நடத்தப் போகிறோம் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே, அந்த நிகழ்ச்சிக்கு எதிராக சிலர் வரிந்து கட்டிக் கொண்டு வேலைப் பார்க்க ஆரம்பித்துவிட்டன. சமூக வலைத் தளங்களில் நட்சத்திரக் கிரிக்கெட்டைப் புறக்கணிப்போம் என வெகுஜனங்களே வேண்டுகோள் வைக்கும் நிலை. போதாக்குறைக்கு அஜீத்தின் புறக்கணிப்பு செய்தி மீடியாவில் அதிக முக்கியத்துவம் பெற்றது இதன் விளைவை மைதானத்தில் பார்க்க முடிந்தது. காலையில் மேட்ச் ஆரம்பித்தபோது, கேலரிப் பக்கம் தலைகளே இல்லை. பெரும்பாலும் டோனர் பாஸ் எனப்படும் ‘ஓசி’ டிக்கெட்டில் பார்க்க வந்தவர்கள்தான் அதிகம். இவர்களைத் தவிர, மீதி நட்சத்திரங்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள். நாட்டுப் புறக் கலைஞர்களும் கணிசமாக வரவழைக்கப்பட்டிருந்தனர். பிற்பகல் வரைதான் இந்த நிலை. மாலை நெருங்க நெருங்க, ஓரளவு பார்வையாளர்கள் திரண்டுவிட்டனர். இறுதிப் போட்டியில் சூர்யாவின் அணியும் ஜீவாவின் அணியும் விளையாடியபோது, கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் அரங்கிலிருந்ததாக நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது கூட்டம் குறைவாக ... Read more