Category: நிகழ்வுகள்

தி.மு.க வெற்றி பெற்றால்…?

நாளை தமிழகமே ஆர்வத்துடன் எதிர்நோக்கும் (அப்படி ஒண்ணும் தெரியலியே?) அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நமக்கு சேவை புரிய போகிறவர்கள் (சேவை என்றால் என்ன? அப்படின்னு கேள்விக் கேட்டா வெற்றி பெறுபவர்கள் பதில் சொல்ல விட்டால் பதவி பறிக்கப்படும் என்றால் எத்தனை பேரு தேறுவார்கள்?) யார் யார் என்ற விவரம் தேர்தல் முடிவுகளாக வெளி வரப் போகிறது. (மக்களவை தேர்தல் மாதிரி உள்குத்துகள் நடக்காமல் இருக்குமா?) இந்த தேர்தலில் ஒருவேளை தி.மு.க வெற்றி பெறவில்லை எனில் என்ன நடக்கும்? 1. தொலைக்காட்சி ‘அலைவரிசை’கள் கண்டிப்பாக குறையும். (நிஜமாக நம்புவோமாக) 2. செய்தி என்ற பெயரில் இயங்கும் 24 மணி நேர விளம்பர டிவி தொடராமல் போகலாம். 3. வாரத்துக்கு ஒரு முறை நடக்கும் பாராட்டு விழா நின்று போகும். (அய்யய்யோ நடிகைகளின் ஆட்டம் பாட்டம் எல்லாம் அவ்வளவுதானா?) 4. பிரதான அலைவரிசையில் கூட்டம் போட்டிருக்கும் ஜால்ரா நடிகர் பட்டாளம் கழன்று கொள்ளும். (அப்பாடா சீரியல் ... Read more

தேர்தல் முடிவுகளும் சந்தானமும்..!

கருத்துக் கணிப்புகள் அனைத்தையும் மக்கள் பொய்யாக்குவார்கள் மக்கள் என்று திமுக முழங்கியது கடைசியில் நடந்து விட்டது. ஆம் அறுபது சதவிகித இடங்களை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அதிமுக அணி தொண்ணூறு சதவீத இடங்களை பிடித்து மீடியாக்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. அதிமுகவின் வெற்றி விகிதம் 6:1 என்ற விகிதத்தில் உள்ளது. தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது எனக்கு சிறுத்தை படம் தான் நினைவுக்கு வந்தது. கார்த்தி : “மச்சான் எல்லாம் முடிஞ்சி போச்சு.. நம்ம ஆட்சி போச்சு.. இந்த நாள் இத விட மோசமா ஆகவே முடியாது இல்ல” சந்தானம் : “இல்லை மச்சி, ஆகலாம்” கார்த்தி : “என்னடா சொல்ற” சந்தானம் : “நம்ம இனிமே எதிர்கட்சியா கூட ஆக முடியாது போல இருக்கு” ஆர்யா : “என்ன??” சந்தானம் : “ஆமாம், மச்சான். நம்மள விட தேமுதிக அதிக தொகுதில ஜெயிச்சிட்டாங்க போலிருக்கே” ஆர்யா : “அதனால என்ன மச்சி” ... Read more

தாவூத் எங்கே…?

இந்தியாவால் தேடப்பட்டு வரும் பிரபல குற்றவாளி தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் வசித்து வருவது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. 1993-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக தேடப்படும் குற்றவாளியாக இந்தியாவால் அறிவிக்கப்பட்டவர் தாவூத் இப்ராஹிம். நீண்ட காலமாக, அவர் பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் வசித்து வருகிறார். அவரை ஒப்படைக்குமாறு இந்தியா கேட்டுக்கொண்டாலும், தாவூத் தங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் பதில் கூறி வந்தது. இந்நிலையில், மே 2-ம் தேதி அல்-காய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், ஒசாமாவை பாகிஸ்தானுக்குள் நுழைந்து அமெரி்க்கா கொன்றது போல், தாவூத்தை இந்தியா கொல்ல வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது. இதையடுத்து, தாவூத் தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. அவரது மகன் மொயினின் திருமணம் மே 28-ம் தேதி கராச்சியில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில், திடீரென திருமண இடத்தை அவர் துபைக்கு ... Read more

பின் லேடன் மரணம் : அமெரிக்கா கொண்டாட்டம்

அமெரிக்காவிற்கு இருந்த ஒரே அச்சுறுத்தல் ஆன பின்லேடன் அந்நாட்டு ராணுவத்தால் பாகிஸ்தானில் வைத்து கொல்லப்பட்டார். இனி என்ன வழக்கம்போல அவர் நல்லவரா? கெட்டவரா? விவாதம் தயாராகி ஒரு வாரத்திற்கு மீடியாவிற்கு தீனி கிடைக்கும். அல்குவைதா பயங்கரவாத கும்பல் தலைவன் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் அமெரிக்க படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அமெரிக்க அரசு தொலைக்காட்சியில் தோன்றி பேசிய ஒபாமா : ஒசாமா பின் லேடன் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நடந்த இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகு தீவிரமாக தேடப்பட்டு வந்தததாகவும், அமெரிக்காவின் நீண்ட கால திட்டம் தற்போது நிறை‌வேறியுள்ளதாகவும் மகிழ்ச்சி பொங்க கூறினார். இந்த நாள் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். நீதி நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்றார். சுற்றிவளைப்பு :   ஒசாமா பாகிஸ்தானில் பதுங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் அமெரிக்க படைகள் ஒசாமா இருப்பிடத்தை நெருங்கியது. ... Read more

ஈழ தமிழருக்காக இளைஞர் தற்கொலை..!

தற்கொலை செய்து கொள்வது எந்த நிலையிலும் பிரச்னைக்கு ஒரு முடிவு ஆகாது. ஏற்கனவே சில பேர் இலங்கை தமிழருக்காக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அப்போதெல்லாம் என்ன நடந்ததோ அதே தான் இப்போதும் நடக்கப் போகிறது. இருந்தாலும் தன் இனத்தவன் படும் இன்னலுக்கு தன்னை தீக்கு இறை ஆக்கிய கிருஷ்ணமூர்த்தியின் ஆத்மா அமைதி அடைய வேண்டுமாயின் அவர் எண்ணியது நடக்க வேண்டும். இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து மனவேதனை அடைந்திருந்ததாகக் கூறப்படும் தமிழக இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள சீகம்பட்டி கிராமத்தை சொந்த ஊராகக் கொண்ட 25 வயது பொறியியலாளர் கிருஷ்ணமூர்த்தி தன் மீது பெற்றோல் ஊற்றி தீவைத்துக்கொண்டார். தீக்காயங்களுடன் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இலங்கைத் தமிழர்கள் அனுபவித்த துன்பங்களால் விரக்தி அடைந்தே தான் தற்கொலை செய்துகொள்வதாக அவர் தனது கைப்பட எழுதிய கடிதம் உறவினர்களிடம் கிடைத்துள்ளது. மரணத் தருவாயில் கிருஷ்ணமூர்த்தி ... Read more

மீண்டும் வருவோம்,மீண்டு வருவோம்..!

தலைவனை இழந்து தவித்து தன் உரிமைக்கு போராடியவனை தினம் பல உயிராய் குடித்தாய்..! வாழ வழி கேட்டவனுக்கு வளியுங் கூட கொடாது வலிகளை கொடுத்தாய்…! தகுந்த நேரம் பார்த்து துரோகிகள் கரங் கோர்த்து விரோதியென வீழ்த்தி விட்டாய்..! உடல் என்னும் எண்ணெய்யில் தமிழப் பற்று என்னும் திரிக்கு உயிர் என்னும் தீ வைத்திட்டாய்..! அன்று அனுமன் கொளுத்திய இலங்கைக்கு இன்று அதர்மம் கொழுக்கும் இலங்கைக்கு என்றேனும் இல்லை வென்றேனும் வருவோம் அந்த இலங்கைக்கு விரைவாக..!

தமிழா இந்தா பிடி உன் துரோகத்துக்கு விலை..!

நெஞ்சு பொறுக்குதில்லையே – இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் கொஞ்சமோ பிரிவினைகள் – ஒரு கோடியென் றாலது பெரிதாமோ ? எனும் பாரதியின் வரிகளை விட இந்த பதிவிற்கு பொருத்தமான தொடக்கம் வேறு எதுவும் படவில்லை.  உலகில் தமிழை தாய்மொழியாக கொண்டு மக்கள் வாழும் நாடுகள் வெறும் இரண்டு தான். இந்தியா,இலங்கை. என்ன தான் அமெரிக்கா,சவூதி,சிங்கப்பூர்,இங்கிலாந்து,அரபு,கனடா என்று உலகம் முழுவதும் தமிழர்கள் நிறைந்து இருந்தாலும், அவர்களெல்லாம் தமிழகத்தில் இருந்தோ இலங்கையில் இருந்தோ குடி பெயர்ந்தவர்களாகத் தான் இருப்பார்கள். இப்படி வெறும் இரண்டு நாடுகளுக்குள் குறுங்கி இருந்த நம்மை இப்போது கிட்டத்தட்ட ஒரே நாட்டுக்குள் அடக்கி விட்டார்கள். ஆட்சியில் பங்கு கேட்கிறான் என்று அடக்கி ஆள நினைத்த சிங்களனுக்கு எதிராக தமிழர் கூட்டம் திரும்பியது, எப்படி இந்திய சுதந்திர போராட்டத்தில்  எத்தனையோ குழுக்கள் இருந்தாலும் அவை எல்லாம் காந்தியின் கீழ் வந்ததோ அதே போல் (நான் வெறும் குழுவைத்தான் சொல்கிறேன் போராட்ட முறையை ... Read more

ரஜினியும் மனிதர் தானே?

ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள், எங்கிருந்து வரும் தைரியம் இவ்வளவும்? ஒருவேளை அவர் ஆதரவு யார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வமா?, ஆட்சியை பிடிக்க நினைக்கும் கட்சியின் தூண்டுதலா? அல்லது ஆட்சியில் தொடர நினைக்கும் கட்சியினரின் அடாவடித்தனமா? எதுவாக இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் அதிகம் தான், ஒரு தனி மனிதனின் விருப்பு வெறுப்புகளில் தலையிடும் உரிமையை மீடியாவுக்கு கொடுப்பது யார்? ரஜினிகாந்த் வாக்குப் பதிவு செய்வதை வேண்டுமென்றே பதிவு செய்து விட்டார்கள். ஏற்கனவே பிரபலங்களின் கலவு தொடர்பான விஷயங்களில் ஏகத்திற்கும் மூக்கை நுழைக்கும் மீடியா, விட்டால் அவர்கள் கழிவு போவதையும் படம் பிடித்து எக்ஸ்க்ளுசிவ் என்று போட்டாலும் போட்டு விடுவார்கள். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா,மட்டாரா என்று அவருக்கே தெரியாத நிலையில் அவரின் ரசிகர்களின் ஓட்டுக்களை வாங்குவதற்காக ஒவ்வொரு மேடையிலும் தன் அருகே அழைத்து அமர வைப்பதும், ரஜினி புகழ தானும் தமிழகமும் கேட்பதாய் எத்தனை விழாக்களில் கலைஞர் அரங்கேற்றம் செய்துள்ளார். ... Read more

ஐஸ்வர்யா ராய் அதிமுகவிற்கு ஓட்டு போட்டார்..!

இதுவரை நான் எந்த முடிவு எடுப்பதற்கும் இவ்வளவு சிந்தித்தது இல்லை. ஆனால் எந்த கட்சிக்கு இம்முறை ஓட்டு போடுவது… ம்ஹூம் இந்த இடத்தில் இம்முறை பொருந்தாது என நினைக்கிறேன். ஏனென்றால் இது தான் எனக்கு முதல் அனுபவம்,ஓட்டு போடுவதில்! எப்போதுமே ஒரு செயலை முதல் முறை செய்யும் போது பொதுவாகவே நமக்குள் சில எண்ணங்கள் வரும், நமக்கு அதை பற்றி எல்லா விசயங்களும் தெரிந்து இருக்கிறதா? எந்த பட்டனை அழுத்த வேண்டும், எப்போது அழுத்த வேண்டும் என்பன போன்றவை. சரிவர செய்யாவிட்டால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? ஒருவேளை தவறான இடத்தில் கை வைத்து விட்டால், வேறு யாருக்காவது ஓட்டு போய் விட்டால்? எல்லாம் முடிந்த பின்னரும், முடிந்தது தெரியாமல் அவ்வளவுதானா என நினைத்தல். பீப் சத்தம் வந்த பின்னரும் அங்கேய நிற்றல். மற்றவர்கள் நம் அனுபவத்தை பற்றி கேட்டால் மழுப்புதல். “யாருக்கு ஓட்டு போட்டீங்க?” என்று பலரும் கேட்கத்தான் செய்கின்றனர். சரி, ... Read more

மன்மோகனுக்கு இந்திய அரசியல் மீது வெறுப்பு | PM dislikes Indian Politics

இந்திய நாட்டின் மிக உயரிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் சேர்ந்து பதவியில் அமர்த்தப்படும் பிரதமரே தனது வாக்குரிமையை செலுத்தவில்லை எனும் போது இந்திய ஜனநாயகம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதையும் அதில் பிரதமர் வெறுப்புடன் இருப்பதையும் அறிய முடிகிறது. இருக்காதா பின்னே? அவரும் எத்தனை ஆண்டுகள் தான் தஞ்சாவூர் பொம்மையை போல தலை ஆட்டி கொண்டு இருப்பார். முதலை வாயில் அகப்பட்ட கதை தான் அவரது கதையும். இதில் அவ்வப்போது எழும் குற்றச்சாட்டுகளுக்கு வேறு வித வித மாக கதைக்க வேண்டி இருக்கிறது. அசாம் மாநிலத்தில் நேற்று நடந்த தேர்தலில், பிரதமர் மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை.பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அசாம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டவர். பிரதமரும், அவரது மனைவியும், அசாம் மாநிலம் திஸ்பூர் சட்டசபை தொகுதி வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 20 ஆண்டுகளாக அங்கு தான், அவர்களுக்கு ஓட்டுரிமை உள்ளது. 2006ல் ... Read more