மீண்டும் வருவோம்,மீண்டு வருவோம்..!

1
60

தலைவனை இழந்து தவித்து
தன் உரிமைக்கு போராடியவனை
தினம் பல உயிராய் குடித்தாய்..!
வாழ வழி கேட்டவனுக்கு
வளியுங் கூட கொடாது
வலிகளை கொடுத்தாய்…!
தகுந்த நேரம் பார்த்து
துரோகிகள் கரங் கோர்த்து
விரோதியென வீழ்த்தி விட்டாய்..!
உடல் என்னும் எண்ணெய்யில்
தமிழப் பற்று என்னும் திரிக்கு
உயிர் என்னும் தீ வைத்திட்டாய்..!
அன்று அனுமன் கொளுத்திய இலங்கைக்கு
இன்று அதர்மம் கொழுக்கும் இலங்கைக்கு
என்றேனும் இல்லை வென்றேனும்
வருவோம் அந்த இலங்கைக்கு
விரைவாக..!

1 கருத்து

  1. அனுமன் என்று உங்கள் தமிழ் நாட்டுகாரனை தான் ஆரியன் குரங்காக கேவல படுத்தியிருகான்…தமிழனை வைத்தே தமிழனை அழிக்க பல வருடங்களுக்கு முன்னமே அவர்களுக்கு தெரிந்திருக்கு ….உனக்கேன் தமிழா உறைக்காமல் போனது …….அப்போது அனுமன் இப்போது கருணாநிதி ……..துரோகிகள் பேர் என்றும் வாழும். வீரர்கள் அழிந்துவிடுவார்கள் இந்த கேவலங்கெட்ட தமிழனின் சரித்திரத்தில்..

    பதிலளிக்க

உங்கள் கருத்தை தெரிவிக்க