போத்தா அடியில் விழுந்தது டெக்கான் சார்ஜர்ஸ் : ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி

0
31
IPL 4 இன் இரண்டாம் நாளான இன்று நடைபெற்ற புதல போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டெக்கான் சார்ஜர்ஸ் அணியை எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து தனது முதல் வெற்றியை பதித்து கொண்டது.

முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வார்னே டெக்கான் ஐ பேட்டிங் செய்ய பணித்தார். இதனை அடுத்து முதலில் களம புகுந்து விளையாடிய அவ்வணியின் எந்த ஒரு வீரரும் நிதானித்து ரன்கள் குவிக்காததால் 137 ரன்களுக்கு தனது ஆட்டத்தை முடித்து கொண்டது.சித்தார்த் திரிவேதி சிறப்பாக பந்து வீசினார் (3-15). முன்பை விட சற்று இளைத்து காணப்பட்ட வார்னே இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார். தவான் இரண்டு பவுண்டரி ஒரு சிக்ஸர் என்று சிறப்பாக தொடங்கிய போதிலும் சீக்கிரமே அவுட் ஆனதால் பெரிய ஸ்கோர் எடுக்க இயலாமல் போய் விட்டது. கேப்டன் சங்கக்காரா டக் அவுட் ஆனார்.

பின்னர் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில் டிராவிட் தொடக்க வீரராக களமிறங்கி தனது வழக்கமான ஆட்டத்தை கொணர முடியாமல் திணறினார். இருந்த போதிலும் 28 ரன்கள் எடுத்தார். ஆனால் ஜோகன் போத்தா அதிரடியாகவும் நேர்த்தியாகவும் விளையாடி 67 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு இட்டு சென்றார்.

பகிர்ந்து
முந்தைய செய்திகடவுள் இருக்கின்றாரா?
அடுத்த செய்திபெங்களூர் வெற்றியுடன் IPL 4 ஐ துவக்கியது..!
வலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.