இது நம்ம ஆளு

0
743

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்க உருவாகி இருக்கும் படம் ‘இது நம்ம ஆளு’. குறளரசன் இசையமைத்து வரும் இப்படத்தை டி.ராஜேந்தர் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் தயாரித்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. மார்ச் மாதத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். பிப்ரவரி 3ம் தேதி சிம்பு பிறந்த நாளை முன்னிட்டு ‘இது நம்ம ஆளு’ படத்தின் இசை வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ஹன்சிகாவிடம் ‘இது நம்ம ஆளு’ கெளரவ தோற்றம் குறித்து கேட்ட போது, “அச்செய்தியில் உண்மையில்லை. கவுரவ தோற்றம் தொடர்பாக என்னை யாரும் அணுகவில்லை” என்று தெரிவித்தார்.

இப்படத்தின் உரிமையை கைப்பற்றி இருக்கிறது ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம். மார்ச் மாத இறுதியில் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்து
முந்தைய செய்திவிஜயகாந்தை கட்சியில் நீக்க திட்டமா? – சந்திரகுமார் டீம் ஆலோசனை
அடுத்த செய்திபெண்களுக்கு முதுகு வலி வரக்காரணம்

உங்கள் கருத்தை தெரிவிக்க